வைத்தீஸ்வரன்கோவில் பிரம்மோற்சவம்... இன்று பூதம், பூதகி வாகனங்களில் எழுந்தருளல்! | vaitheeshwaran Temple brahmotsavam

வெளியிடப்பட்ட நேரம்: 17:50 (14/03/2019)

கடைசி தொடர்பு:17:50 (14/03/2019)

வைத்தீஸ்வரன்கோவில் பிரம்மோற்சவம்... இன்று பூதம், பூதகி வாகனங்களில் எழுந்தருளல்!

நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழியை அடுத்துள்ள வைத்தீஸ்வரன் கோயிலில் ஆண்டுதோறும்  நடைபெறும் பிரம்மோற்சவம் மற்றும் பங்குனி உத்திர விழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

பிரம்மோற்சவம்

நாகை மாவட்டம் வைத்தீஸ்வரன்கோவிலில் உள்ள ஸ்ரீ வாலம்பிக்கை உடனாகிய ஸ்ரீ வைத்தியநாத சுவாமி தேவஸ்தான திருக்கோயிலில் பிரம்மோற்சவ விழா கடந்த 12-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

செவ்வாய்க்கிழமை அன்று துலா லக்னத்தில் ஸ்ரீ வாலம்பிக்கை உடனாகிய ஸ்ரீ வைத்தியநாத சுவாமிக்கு அஷ்ட துவஜாரோஹனம் அன்னக்கொடி ஏற்றப்பட்டது. அதைத் தொடர்ந்து நேற்று புதன்கிழமை இறைவன் கற்பக விருட்சக் காட்சியளித்தலும், பின்னர் நரி ஓட்டமும் மிகச் சிறப்பாக நடைபெற்றது. இதைத்தொடர்ந்து, இன்று வியாழக்கிழமை, இறைவனும் இறைவியும் பூதம், பூதகி வாகனத்தில் எழுந்தருளி அருள்பாலிக்கின்றனர்.

பிரம்மோற்சவம்

வரும் நாள்களில் உண்டியல் குடம் வைத்தலும், யானை - சிம்மம் - காமதேனு ஆகிய வாகனங்களில் எழுந்தருளலும் நடைபெறும். 
பிரம்மோற்சவ விழாவின் முக்கிய நிகழ்வு 21.3.2019 அன்று காலை ஸ்ரீ நடராஜ மூர்த்தி புறப்பாடாகி கோதண்ட தீர்த்தத்தில் தீர்த்தவாரி நடைபெறும். பிறகு, பஞ்சமூர்த்தி தீர்த்தவாரி சித்தாமிர்த தீர்த்தத்திலும் நடைபெறும். 
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close