திருப்பதி கோயிலில் இன்று முதல் தெப்போற்ஸவம் ... ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்! | Tirumala Tirupaty Theppootsavam festival going on today evening.

வெளியிடப்பட்ட நேரம்: 20:05 (16/03/2019)

கடைசி தொடர்பு:20:10 (16/03/2019)

திருப்பதி கோயிலில் இன்று முதல் தெப்போற்ஸவம் ... ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்!

திருப்பதி வேங்கடேசப் பெருமாள் தெப்போற்ஸவ நிகழ்ச்சி, இன்று 16 - ம் தேதி  மாலை, கோயில் அருகிலிருக்கும் சுவாமி புஷ்கரணியில் நடைபெற்றது. இதையொட்டி கோயில் திருக்குளம் சிறப்பான முறையில் வண்ண விளக்குகளாலும் மலர்களாலும் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

திருப்பதி கோயில் திருக்குளம்

தெப்போற்ஸவ விழா இன்று தொடங்கி, அடுத்த ஐந்து நாள்களுக்கு நடைபெற இருக்கிறது. இதை, 'திருமலை ஓடிய திருநாள்' என்று அழைக்கிறார்கள். 1468 -ம் ஆண்டில் கோயில் திருக்குளத்தின் நடுவில் கட்டப்பட்ட மணி மண்டபம், புது வண்ணம் பூசப்பட்டு, அழகுபடுத்தப்பட்டுள்ளது. 
உற்சவத்தின் முதல் நாளான இன்று, கோதண்டராம சுவாமி, சீதா லட்சுமண சமேதராக எழுந்தருளுகிறார். நாளை, ருக்மணி கிருஷ்ணர் அலங்காரத்திலும், நாளை மறுதினம் தொடங்கி மூன்று நாள்களும், தேவி பூதேவி சமேதராக மலையப்ப சுவாமி திருக்கோலத்திலும் வேங்கடவன் தெப்பத்தில் பவனி வருவர்.

திரும்லை திருப்பதி 


விழாவில், ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்வார்கள். இதையொட்டி, திருமலை தேவஸ்தானம் வசந்தோற்ஸவம், சகஸ்ரதீப அலங்காரம் ஆகிய ஆர்ஜித சேவைகளை ரத்துசெய்துள்ளது.      

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close