திருவண்ணாமலை கோயில் யானையின் ஓராண்டு நினைவு தினம் ! - துக்கம் அனுசரித்த கோயில் நிர்வாகம் | Tiruvannamalai Arunachaleswarar Temple elephant rukku's fisrt year death anniversary

வெளியிடப்பட்ட நேரம்: 15:40 (22/03/2019)

கடைசி தொடர்பு:15:40 (22/03/2019)

திருவண்ணாமலை கோயில் யானையின் ஓராண்டு நினைவு தினம் ! - துக்கம் அனுசரித்த கோயில் நிர்வாகம்

திருவண்ணாமலை, அண்ணாமலையார் கோயிலிலுக்கு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வழங்கிய கோயில் யானை `ருக்கு' மறைந்து, ஓராண்டு நிறைவடைந்ததையொட்டி, இன்று நினைவுதினம் அனுசரிக்கப்படுகிறது.

யானை ருக்கு

1995ம் ஆண்டு, அப்போதைய முதல்வர் ஜெயலலிதா 7 வயதுடைய ஒரு பெண் யானையைத் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்குத் தானமாக வழங்கினார். அந்த யானைக்கு `ருக்கு' எனப் பெயரிடப்பட்டது. கிட்டத்தட்ட 23 ஆண்டுகள், அண்ணாமலையார் கோயிலில் நடைபெற்ற அனைத்து உற்சவங்களிலும் பங்கேற்று தொண்டாற்றி வந்தது. இந்த நிலையில், கடந்த வருடம் இதே நாளில், மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தது. அந்தச் செய்தி ஒட்டுமொத்த திருவண்ணாமலை மக்கள் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது. கோயிலின் சுற்றுச்சுவருக்குப் பக்கத்திலேயே ருக்குவின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

நினைவு மண்டபம்

இன்றோடு யானை `ருக்கு' மறைந்து ஓராண்டு நிறைவடைகிறது. கோயிலின் சார்பாக நினைவஞ்சலிப் பதாகை வைக்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக கோயிலின் இணை ஆணையர், ஞானசேகரனிடம் பேசினோம்,

``கடந்த வருடம் `ருக்கு' இறந்தபோது, நினைவு மண்டபம் கட்ட வேண்டும் என ஊர் மக்கள் கோரிக்கை எழுப்பினர். அதன்படி மூன்றரை லட்ச ரூபாய் செலவில் நினைவு மண்டபம் கட்டப்பட்டது. இன்று ஓராண்டு நிறைவடைந்ததையொட்டி நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது'' என்றார். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க