திருவாரூர் கோயிலில் ஏப்ரல் 1 -ம் தேதி ஆழித்தேரோட்டம் - அலங்காரப் பணிகள் தீவிரம் | tiruvarur temple car festival

வெளியிடப்பட்ட நேரம்: 15:05 (26/03/2019)

கடைசி தொடர்பு:15:05 (26/03/2019)

திருவாரூர் கோயிலில் ஏப்ரல் 1 -ம் தேதி ஆழித்தேரோட்டம் - அலங்காரப் பணிகள் தீவிரம்

ப்த விடங்கத் தலங்களில் முதன்மையான தலம் என்றும், தில்லை சிதம்பரத்துக்கு முன்னரே தோன்றிய தலம் என்றும் நாவுக்கரசர் பெருமானால் பாடப்பெற்ற சிறப்பினையுடைய தலம் என்று பக்தர்களால் போற்றப்படும் திருத்தலம் திருவாரூர்.

திருவாரூர்

திருவாரூருக்கு பெருமைசேர்க்கும் திருவிழா, ஆழித் தேரோட்டம். ஆசியாவிலேயே மிகப் பெரிய தேர் என்ற சிறப்புக்குரிய ஆழித் தேரில், ஆரூரர் அமர்ந்து உலா வரும் திருக்காட்சி, கண்கொள்ளா காட்சியாக இருக்கும்.

ஆண்டுதோறும் திருவாரூர் தியாகராஜர் கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழாவின் நிறைவு நாளில், ஆழித் தேரோட்டம் நடைபெறும். வரும் ஏப்ரல் 1-ம் தேதி நடைபெறவிருக்கும் ஆழித் தேரோட்டத்தை முன்னிட்டு, தேரை அலங்கரிப்பதற்கான பணிகள் தொடங்கின. தேரை மூடியிருந்த கூரைகள் அகற்றப்பட்டு, மூங்கில்கள், சவுக்கு மரங்கள், அலங்காரச் சீலைகள், தொம்பைகள் கொண்டு தேர் அலங்கரிக்கப்பட்டது. 

திருவாரூர்

மார்ச் 16-ம் தேதி, தியாகராஜர் தேவாசிரியன் மண்டபத்துக்கு எழுந்தருளினார். மார்ச் 25-ம் தேதி, வாத்தியங்கள் முழங்க, அஜபா நடனம் ஆடியபடி தியாகராஜர் திருத்தேரில் எழுந்தருளினார். அவருடன் விநாயகர், சுப்பிரமணியர், அம்பாள், சண்டேசுவரர் ஆகியோரும் அலங்கரிக்கப்பட்ட தேர்களில் எழுந்தருளினர். பக்தர்கள், இன்று காலை முதல் தேரில் எழுந்தருளியிருந்த தியாகராஜப் பெருமானை தரிசித்து வழிபட்டுவருகிறார்கள்.

 

tiruvarur

வரும் 1-ம் தேதி அதிகாலை 4.30 மணியளவில், தியாகராஜப் பெருமானின் ஆழித் தேரோட்டம் தொடங்குகிறது. முன்னதாக விநாயகர், சுப்பிரமணியர் தேரோட்டமும், தொடர்ந்து அம்பாள், சண்டேஸ்வரர் தேரோட்டமும் நடைபெற உள்ளது.

96 அடி உயரமும், முன்னூறு டன் எடையும் கொண்ட ஆழித் தேரின் நான்கு இரும்புச் சக்கரங்களிலும் 'ஹைட்ராலிக் பிரேக்' பொருத்தப்பட்டுள்ளது. அலங்கரிக்கப்பட்ட ஆழித் தேர், நான்கு வீதிகளிலும் அசைந்து அசைந்து வருவது கண்கொள்ளாக் காட்சியாகும்.