எந்த ஜாதகத்துக்குப் பஞ்ச மகா புருஷயோகம் பொருந்தி வரும்? #Astrology | Pancha Maha Purusha Yogam explanation

வெளியிடப்பட்ட நேரம்: 09:10 (31/03/2019)

கடைசி தொடர்பு:09:10 (31/03/2019)

எந்த ஜாதகத்துக்குப் பஞ்ச மகா புருஷயோகம் பொருந்தி வரும்? #Astrology

நவகிரகங்களில் நிழல் கிரகங்களான ராகு, கேதுக்கள் மற்றும் ஒளி கிரகங்களான சூரிய, சந்திரர்களைத் தவிர்த்து, பஞ்சபூத கிரகங்களான குரு, சுக்கிரன், புதன், செவ்வாய், சனி ஆகிய ஐந்து கிரகங்களாலும் கிடைக்கும் யோகங்களே பஞ்ச மகா புருஷயோகங்கள் என அழைக்கப்படுகின்றன.

எந்த ஜாதகத்துக்குப் பஞ்ச மகா புருஷயோகம் பொருந்தி வரும்? #Astrology

ருவரின் ஜாதகத்தில் கிரகங்கள் இருக்கும் அமைப்பைப் பொறுத்தே அந்த ஜாதகருக்கான யோகங்கள் அமைகின்றன. இந்த யோகங்களில் பலவகைகள் உள்ளன. இவற்றில் பஞ்ச மகா புருஷ யோகம் ஒன்று. இந்த யோகம் ஒருவருக்கு ஏற்பட, அவருடைய ஜாதகத்தில் எத்தகைய கிரக அமைப்புகள் இருக்க வேண்டும்? 

யோகம்

 'ஜோதிடக்கலை அரசு' ஆதித்ய குருஜியிடம் கேட்டோம்.

''ஜோதிட சாஸ்திரத்தைப் பொறுத்தவரை படித்தவர், பாமரர், பணக்காரர், ஏழை என்பதெல்லாம் கிடையாது. ஜாதகத்தின் கட்டங்கள் என்ன சொல்கின்றதோ அதுவே ஜோதிட சாஸ்திரத்தின் சட்டம். ஜாதகத்தில் பல வகையான யோகங்கள் இருக்கின்றன. இவற்றில் பஞ்ச மகா புருஷ யோகங்கள் என்றால் என்ன, அதன் பலன் யாருக்குக் கிடைக்கும் என்பது பற்றி பார்ப்போம்.

ஆதித்யகுருஜிநவகிரகங்களில் நிழல் கிரகங்களான ராகு, கேதுக்கள் மற்றும் ஒளி கிரகங்களான சூரிய, சந்திரர்களைத் தவிர்த்து, பஞ்சபூத கிரகங்களான குரு, சுக்கிரன், புதன், செவ்வாய், சனி ஆகிய ஐந்து கிரகங்களாலும் கிடைக்கும் யோகங்களே பஞ்ச மகா புருஷயோகங்கள் என அழைக்கப்படுகின்றன.

குரு, சுக்கிரன், புதன், செவ்வாய், சனி ஆகிய ஐந்து கிரகங்களும் ஒரு ஜாதகத்தில் லக்னத்துக்குக் கேந்திரங்களான 1, 4, 7 மற்றும் 10 ஆகிய இடங்களில் அமர்ந்து ஆட்சியாகவோ உச்சபலமாகவோ இருக்கும் போது இந்த யோகங்கள் உருவாகின்றன. 

ஒருவரின் ஜாதகத்தில் லக்னாதிபதி வலுவிழந்த நிலையில், அவருடைய ஜாதகத்தை, சந்திரன் நிற்கும் ராசியின் மூலம் பார்க்கவேண்டும். அப்போது சந்திரனுக்குக் கேந்திரங்களில் அதாவது சந்திரன் இருக்கும் ராசியிலிருந்து 1, 4, 7, 10 ஆகிய இடங்களில் மேலே குறிப்பிட்ட கிரகங்கள் ஆட்சி அல்லது உச்சம் பெற்றுக் காணப்பட்டால் பஞ்சமகா யோகங்கள் பலனளிக்கும்.

இந்த வகை யோகங்களில் ஏதேனும் ஒன்று ஜாதகருக்கு சுப பலத்துடன் நல்லவிதமாக அமைந்திருந்து, சரியான வயதில் அந்த கிரகத்தின் தசையும் நடைபெறுமென்றால், ஜாதகர் வாழ்க்கையின் உச்சத்துக்குப் போவார் என்பது உறுதி.

சுக்கிரன்

குரு, சுக்கிரன், புதன் ஆகிய இயற்கைச் சுபகிரகங்களால் அமையப் பெறும் ஹம்ச, மாளவ்ய மற்றும் பத்ர யோகங்கள் ஒரு மனிதனின் வாழ்வுக்குத் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளுடன்  அதிர்ஷ்டத்தையும் தந்து, பூமியில் மிகவும் பாக்கியவான் எனப் பெயரெடுக்கச் செய்யும். 

பாபக் கிரகங்களான செவ்வாய், சனி தரும் யோகங்கள் அப்படிப்பட்டவையல்ல. உண்மையில் பஞ்சமகா புருஷ யோகங்கள் என்பவை ஒரு மனிதனை, அவர் இருக்கும் துறையில் முதன்மையானவனாக, மகா புருஷனாக்கும் யோகங்கள் மட்டும்தான். இவை ராஜயோகங்கள் அல்ல. 

ஒரு மனிதனை அரசாள வைக்கும் அல்லது அரசனாக்கும் தகுதி படைத்தவை, ஜோதிடத்தின் மூல கிரகங்களும், ஒளி கிரகங்களுமான சூரிய, சந்திரர்கள் மட்டும்தான்.

கிரகங்கள்

ஒரு கிரகம் முறையான நீசபங்கம் அடைவதைக்கூட நீச பங்க ராஜயோகம் என்று தனியாக அடையாளப்படுத்திக் காட்டிய நமது ஞானிகள், இந்த யோகங்களை மகாபுருஷ யோகங்கள், அதாவது ஒருவனை மனிதர்களில் முதன்மையானவனாக்கும் யோகம் என்றுதான் அடையாளப்படுத்தினார்களே தவிர இவற்றை ராஜயோக வரிசையில் வைக்கவில்லை.

இந்த ஐந்து கிரகங்களும் ஜாதகத்தில் கேந்திரங்களில் வலுப்பெறும்போது தனது காரகத்துவங்களின் வாயிலாகவும், ஆதிபத்தியங்களின் வழியாகவும் மட்டுமே ஒரு மனிதனுக்கு உயர்வுகளைத் தரும். 

அதேநேரத்தில் ஒருவரின் ஜாதகத்தில் ராஜ கிரகங்களான சூரியனும், சந்திரனும் பலம் பெற்றிருந்து, குறிப்பிட்டுச் சொன்ன ராஜயோகங்கள் உண்டாகியிருக்கும் நிலையில், அந்த ஜாதகரை அரசனாக, அரசில் அங்கம் வகிக்கச் செய்ய, இந்த பஞ்சமகா புருஷ யோகங்கள் பெரிதும் துணை நிற்கும்.

ராசிகள்

பெருமை வாய்ந்த இந்த யோகங்களைத் தரும் நிலையில் இருக்கும் ஐந்து பஞ்சபூத கிரகங்களும் ஒரு ஜாதகத்தில் லக்ன பாபர்கள் மற்றும் பகை கிரகங்களின் இணைவையோ, தொடர்பையோ பார்வையையோ பெற்றிருக்கக் கூடாது. அப்படி இருந்தால் யோகம் பலவீனமடையும். குறிப்பாக இருள் கிரகங்களான ராகு, கேதுக்களுடன் இணைந்து கிரகணம் அடைவதோ, சூரியனுடன் மிக நெருங்கி அஸ்தங்கம் பெறுவதோ யோகத்தைப் பங்கமுறச் செய்யும்''  என்று கூறினார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்