`விண்ணதிர்ந்த ஆரூரா.. தியாகேசா பக்தி முழக்கம்!’ - திருவாரூர் ஆழித்தேரோட்டம் கோலாகலம் | Thiruvarur Car festival begins

வெளியிடப்பட்ட நேரம்: 08:57 (01/04/2019)

கடைசி தொடர்பு:08:57 (01/04/2019)

`விண்ணதிர்ந்த ஆரூரா.. தியாகேசா பக்தி முழக்கம்!’ - திருவாரூர் ஆழித்தேரோட்டம் கோலாகலம்

திருவாரூர் தியாகராஜர் கோயில் ஆழித்தேரோட்டம் நடந்து வருகிறது. `ஆரூரா...தியாகேசா' என்ற பக்தி முழக்கத்துடன் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஆழித்தேரை வடம்பிடித்து இழுத்தனர்.

திருவாரூர் ஆழித்தேரோட்டம்

உலகப் புகழ்பெற்றதும் சைவ ஸ்தலங்களின் தலைமைப் பீடமாக விளங்கும் திருவாரூர் தியாராஜர் கோயிலின் ஆழித்தேரோட்டம் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம்பிடிக்க கோலாகலமாக நடைபெற்று வருகிறது. 

திருவாரூர் ஆழித் தேரோட்டம்

உலகப் பிரசித்தி பெற்றதும் பிரமாண்டமானதும் தமிழகத்தில் உள்ள தேர்களில் முதன்மையானது திருவாரூர் தியாகராஜர் கோயில் தேர் ஆகும். ஆண்டுதோறும் திருவாரூர் தியாகராஜர் கோயிலில் நடைபெறும் பங்குனி உத்திரத் திருவிழாவுக்குப் பிறகு ஆழித்தேரோட்டம் நடப்பது வழக்கம். அதன்படி, இன்று காலை 5 மணிக்கு திருவாரூர் சன்னதி தெரு எதிரே அமைந்துள்ள விநாயகர் தேர் முதலில் வடம் பிடித்து இழுக்கப்பட்டது.

திருவாரூர் ஆழித்தேரோட்டம்

இதைத் தொடரந்து 7 மணியளவில் தேரடியிலிருந்து ஆழித்தேரோட்டம் தொடங்கியது. பல்வேறு மாவட்டங்களிலிருந்தும், மாநிலங்களில் இருந்தும் வந்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் `ஆரூரா, தியாகேசா' என்று விண்ணதிரும் பக்தி முழக்கத்துடன் வடம் பிடித்தனர். ஆழித்தேர் அலங்கார தொம்பைத்துணி அசைந்தாட வந்ததைக் கண்டு பக்தர்கள் மெய்சிலிர்க்க தரிசனம் செய்தனர். தேர் வருகையில் `ஆரூரா தியாகேசா' முழக்கங்களும் ஒலிக்க நான்கு வீதிகளிலும் ஆழித்தேர் வலம் வந்து கொண்டிருக்கிறது.