தேர்தல் அதிகாரிகள் கைப்பற்றிய பஞ்சலோக நரசிம்மர் சிலை - கடத்திக்கொண்டு வரப்பட்டதா? | Flying squad confiscates narasimmar idol

வெளியிடப்பட்ட நேரம்: 21:10 (04/04/2019)

கடைசி தொடர்பு:21:10 (04/04/2019)

தேர்தல் அதிகாரிகள் கைப்பற்றிய பஞ்சலோக நரசிம்மர் சிலை - கடத்திக்கொண்டு வரப்பட்டதா?

ண்ருட்டி அருகே, தேர்தல் பறக்கும்படையினர் சோதனையில் ஈடுபட்டபோது, உரிய ஆவணங்களின்றி காரில் எடுத்து வரப்பட்ட பல லட்சம் ரூபாய் மதிப்பு வாய்ந்த பஞ்சலோக நரசிம்மர் சிலை ஒன்று பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது. 

நரசிம்மர் சிலை

மக்களவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுவிட்டதால், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் தேர்தல் அதிகாரிகள் கடுமையான வாகனச் சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறார்கள். அதிகாரிகளின் வாகனச் சோதனைகளில் இதுவரை பலகோடி ரூபாய் கைப்பற்றப்பட்டிருக்கிறது. தேர்தல் அதிகாரிகள், கடலூர் மாவட்டம் கண்டரக்கோட்டை கிராமத்தில், வழக்கமான வாகன சோதனையில் நேற்று ஈடுபட்டிருந்தனர். அப்போது, சென்னையிலிருந்து வந்த சொகுசு வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர்.

அப்போது, காரில் மறைத்துக் கொண்டுசெல்லப்பட்ட பஞ்சலோகத்தால் ஆன சிலையை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். கலை நயமிக்க அந்தச் சிலையின் எடை, சுமார் 70 கிலோவும் உயரம் 2.5 அடியும் இருந்தது. சிலை பற்றி விசாரித்ததில், வாகனத்தில் வந்தவர்கள் முன்னுக்குப் பின் முரணான பதில் கூறினர். அவர்களிடம் உரிய ஆவணங்களும் இல்லை. இதையடுத்து, அந்தச் சிலை சென்னையிலிருந்து கடத்திக்கொண்டு வரப்பட்டதா என்று சந்தேகித்த அதிகாரிகள், சிலையைக் கைப்பற்றி, பண்ருட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்திருக்கிறார்கள். இதையடுத்து, அதிகாரிகள் தீவிர விசாரணையைத் தொடங்கியிருக்கிறார்கள். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க