சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நாளை திறப்பு | this story about sabarimala ayyappan temple

வெளியிடப்பட்ட நேரம்: 22:00 (09/04/2019)

கடைசி தொடர்பு:22:00 (09/04/2019)

சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நாளை திறப்பு

கேரளாவிலுள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஒவ்வொரு தமிழ் மாதம் முதல் ஐந்து நாள்கள் நடை திறக்கப்பட்டு, பூஜைகள் நடைபெறுவது வழக்கம். இது தவிர, பங்குனி உத்திர ஆராட்டு திருவிழா, விஷூ, ஓணம் பண்டிகை உள்ளிட்ட நாள்களிலும் நடை திறக்கப்படும்.

சித்திரை மாத பூஜை, விஷூ பண்டிகையையொட்டி சபரிமலை ஐயப்பன் கோயில் நடை புதன்கிழமை (10.4.2019) மாலை 5 மணிக்குத் திறக்கப்படவுள்ளது.

ஐயப்பன்

கேரளாவிலுள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஒவ்வொரு தமிழ் மாதம் முதல் ஐந்து நாள்கள் நடை திறக்கப்பட்டு, பூஜைகள் நடைபெறுவது வழக்கம். இது தவிர, பங்குனி உத்திர ஆராட்டு திருவிழா, விஷூ, ஓணம் பண்டிகை உள்ளிட்ட நாள்களிலும் நடை திறக்கப்படும். கடந்த மார்ச் மாதத்தில் பங்குனி மாத பூஜையையொட்டி 11-ம் தேதி நடைதிறக்கப்பட்டு 21-ம் தேதி வரை விழா நடைபெற்றது.

ஐயப்பன்

இந்த நிலையில், சித்திரை மாத பூஜை, விஷூ பண்டிகையையொட்டி சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நாளை புதன்கிழமை மாலை 5 மணிக்குத் திறக்கப்படவுள்ளது. கண்டரரு ராஜீவரு முன்னிலையில் மேல்சாந்தி வாசுதேவன் நம்பூதிரி நடையைத் திறந்துவைத்து, தீபாராதனை நடத்துவார். இதையடுத்து, நாளை மறுநாள் 11-ம் தேதி முதல் அதிகாலை நடை திறக்கப்பட்டு வழக்கமான பூஜைகள் நடைபெறும். 

சபரிமலை

இதேபோன்று, வருகிற 15-ம் தேதி விஷூ பண்டிகையை முன்னிட்டும், அதிகாலையிலே நடை திறக்கப்பட்டு, பூஜைகள் நடத்தப்படும். அன்றைய தினம் பக்தர்களுக்கு விஷூக்கனி காண ஏற்பாடு செய்யப்படும். தொடர்ந்து பாரம்பர்ய முறைப்படி ஐயப்ப பக்தர்களுக்கு தந்திரி, மேல்சாந்தி உள்ளிட்டோர் விஷூ கை நீட்டமாக நாணயங்களை வழங்குவார்கள். தொடர்ச்சியாக 10 நாள்கள் நடைபெறும் சிறப்பு பூஜைகளுக்குப் பின் ஏப்ரல் 19-ம் தேதி இரவு பத்து மணிக்கு நடை சாத்தப்படும்.