ஷீரடிக்குச் சிறப்பு ரயில் ... பண்டரிபுரம், மந்த்ராலயம் தரிசிக்கவும் ஐ.ஆர்.சி.டி.சி  ஏற்பாடு!   | Special Train to Shirdi ... Pandurippuram, Mantralayam is also arranged by IRCTC!

வெளியிடப்பட்ட நேரம்: 16:55 (10/04/2019)

கடைசி தொடர்பு:16:55 (10/04/2019)

ஷீரடிக்குச் சிறப்பு ரயில் ... பண்டரிபுரம், மந்த்ராலயம் தரிசிக்கவும் ஐ.ஆர்.சி.டி.சி  ஏற்பாடு!  

கோடைக்காலத்தில் ஆன்மிக சுற்றுலா செல்வோருக்கு இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலாக் கழகமான ஐ.ஆர்.சி.டி.சி சிறப்பு ரயில்களை இயக்குகிறது. 

சிறப்பு ரயில்

கோடை விடுமுறை வந்ததுமே சுற்றுலா செல்வோரின் எண்ணிக்கை அதிகரித்துவிடும். குறிப்பாக, குளிர் பிரதேசங்களுக்கும், புகழ்பெற்ற கோயில்களுக்கும் மக்கள் செல்வது அதிகரிக்கும். அந்தவகையில் ஆன்மிகச் சுற்றுலாவுக்குத் திட்டமிடுபவர்களுக்கு பயனளிக்கும் வகையில் ஐ.ஆர்.சி.டி.சி. சிறப்பு ரயில்களை இயக்குகிறது. அதுகுறித்த விரிவான தகவல்கள் அதன் இணையப் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன. 

அந்த வகையில் ஹயா, ஹரித்துவார், வாரணாசி, திருப்பதி, அமிர்தசரஸ், ஷீரடி உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்குச் செல்வதற்கான அட்டவணையைப் பட்டியலிட்டுள்ளது. இதில், வருகிற மே 12-ம் தேதி மதுரையிலிருந்து ஷீரடிக்குச் சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது. இந்த ரயிலானது திண்டுக்கல், திருச்சி, விருத்தாசலம், விழுப்புரம், சென்னை எழும்பூர் வழியாக ஷீரடி செல்லும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், இந்தப் பயணத்தின்போது ஷீரடி, பண்டரிபுரம் மற்றும் மந்த்ராலயம் ஆகிய புண்ணியத் தலங்களையும் தரிசிக்க இயலும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஷீரடி சாய் பாபா

6 நாள்களைக் கொண்ட சுற்றுலாவுக்குத் தலா ஒருவருக்கு ரூபாய் 5,670 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் மத்திய, மாநில அரசு ஊழியர்களுக்குக் கட்டணச் சலுகையும் அறிவிக்கப்பட்டுள்ளது.