திருப்பதி சர்வதரிசன டோக்கன் நள்ளிரவு அல்ல, அதிகாலை 4 மணிக்கு வழங்கப்படும்! | Tirupaty free darsan tocken will issue in early morning 4.00 a.m to 6.00 a.m only

வெளியிடப்பட்ட நேரம்: 18:40 (10/04/2019)

கடைசி தொடர்பு:18:40 (10/04/2019)

திருப்பதி சர்வதரிசன டோக்கன் நள்ளிரவு அல்ல, அதிகாலை 4 மணிக்கு வழங்கப்படும்!

திருப்பதி வேங்கடேசப்பெருமாளை தரிசிப்பதற்காக, தினமும் குறைந்தபட்சமாக 60,000 பக்தர்கள் வருகின்றனர். அரசு விடுமுறை நாள்கள் மற்றும் பள்ளிக்கூட விடுமுறை நாள்களில் 80,000 முதல் ஒரு லட்சம் பக்தர்கள் வருவது வழக்கம். இப்போது கோடை விடுமுறை தொடங்கிவிட்டதால், பெருந்திரளாக பக்தர்கள் வருகிறார்கள். இவர்கள் பெருமாளை, சேவைகளில் பங்கேற்று தரிசனம், சிறப்பு தரிசனம், திவ்ய தரிசனம் (மலைப்பாதையில் நடந்து வருபவர்களுக்கான தரிசனம்), சர்வ தரிசனம் (இலவச தரிசனம்) எனப் பல வகையான வழிகளில் சுவாமி தரிசனம் செய்கின்றனர். 

திருப்பதி

 

இவர்களில், இலவச தரிசனம் செய்பவர்கள், பல மணி நேரம் காத்திருக்கவேண்டிய நிலையே இருந்துவந்தது. இதைத் தவிர்ப்பதற்காக, திருமலை திருப்பதி தேவஸ்தானம், நேரம், நாள் குறிப்பிட்ட புதிய டோக்கன் தரிசன முறையைக் கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் அறிமுகம் செய்தது. தற்போது, பக்தர்கள் இதன் மூலம் எளிதாக சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

 

வேங்கடேசப் பெருமாள்

இலவச தரிசன டிக்கெட் வழங்கும் கவுண்ட்டர்கள், கீழ்த்திருப்பதியில் விஷ்ணு நிவாஸம், சீனிவாஸம் காம்ப்ளக்ஸ், திருப்பதி ஆர்.டி.சி பஸ் ஸ்டாண்ட், பூதேவி காம்ப்ளக்ஸ் ஆகிய பகுதிகளில் திறக்கப்பட்டு டோக்கன்கள் வழங்கப்படுகின்றன. இந்த டோக்கன்கள் நள்ளிரவு பன்னிரண்டு மணி  முதல் வழங்கப்பட்டு வந்தன. ஆனால், இன்று 10-ம் தேதி (புதன்கிழமை) முதல், டோக்கன் வழங்கும் நேரத்தை அதிகாலை 4.00 முதல் 6 மணி வரை என மாற்றினர். திருமலைக்கு வரும்  பக்தர்கள், இதற்கேற்ப தங்களின் பயணத் திட்டங்களை வகுத்துக்கொள்ள வேண்டுமென திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.  

நீங்க எப்படி பீல் பண்றீங்க