சித்திரை மாத ராசிபலன் துலாம் முதல் மீனம் வரை 6 ராசிகளுக்கான ராசிபலன் #Astrology | Rasipalan for the month of chiththirai from thulam to meenam

வெளியிடப்பட்ட நேரம்: 08:54 (12/04/2019)

கடைசி தொடர்பு:08:58 (12/04/2019)

சித்திரை மாத ராசிபலன் துலாம் முதல் மீனம் வரை 6 ராசிகளுக்கான ராசிபலன் #Astrology

தனுசு ராசிக்காரர்களே... சுக்கிரன் மட்டுமே நன்மை செய்யும் நிலையில் காணப்படுகிறார். புதனால் ஓரளவு அனுகூலப் பலன்கள் ஏற்படும். எதிர்பாராத அதிர்ஷ்ட வாய்ப்புகள் ஏற்படும். குழந்தைகளால் மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நிகழும்.

சித்திரை மாத ராசிபலன் துலாம் முதல் மீனம் வரை 6 ராசிகளுக்கான ராசிபலன் #Astrology

சித்திரை மாத ராசிபலன் துலாம் முதல் மீனம் வரை 6 ராசிகளுக்கான ராசிபலன் அதிர்ஷ்டக் குறிப்புகள் மற்றும் எளிய பரிகாரங்களுடன் கணித்துத் தந்திருக்கிறார் `ஜோதிட மாமணி' கிருஷ்ணதுளசி. 

 

மேஷம் முதல் கன்னி வரை 6 ராசிகளுக்கான ராசிபலன்களைப் படிக்க இங்கு க்ளிக் செய்யவும் 

துலாம் ராசி துலாம்:

7-ல் சூரியன்; 5, 6 -ல் சுக்கிரன்; 6, 7 -ல் புதன்; 8, 9 -ல் செவ்வாய்; 3-ல் குரு (அதிசாரம்), சனி, கேது; 9 -ல் ராகு.

மாதம் முழுதும் சனியும், கேதுவும் சாதகமாக உள்ளனர். சுக்கிரனும் புதனும் ஓரளவு நன்மை செய்வார்கள். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். முயற்சிகளில் வெற்றி பெறுவீர்கள். வழக்குகளில் பொறுமை அவசியம். பணவரவு திருப்தி தரும். மாதப் பிற்பகுதியில் புதிய பொருள்களின் சேர்க்கை உண்டாகும். சிலருக்கு பயணங்களும் அதன் மூலம் ஆதாயமும் ஏற்படும். புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள். ஆனால், பெரும்பாலான கிரகங்கள் சாதகமாக இல்லை என்பதால், குடும்பத்தில் அடிக்கடி வீண் விவாதம், கணவன் - மனைவிக்கிடையே  கருத்துவேறுபாடுகள் தோன்றக்கூடும். ஒருவரையொருவர் அனுசரித்துச் செல்வது நல்லது. மாதத்தின் பிற்பகுதியில் குடும்பத்தில் மகிழ்ச்சியும் நிம்மதியும் உண்டாகும். பிள்ளைகள் வகையில் பெருமை சேரும். உறவினர்கள் வருகையும், அவர்களால் உதவிகளும் உண்டு. மாதக் கடைசியில் உறவினர்களால் சில பிரச்னைகளும் ஏற்படக்கூடும். பொறுமை அவசியம். சுபநிகழ்ச்சிகளில் கலந்துகொள்வீர்கள். உடல் நலனில் அக்கறை  அவசியம். தந்தையுடன் கருத்துவேறுபாடுகள் ஏற்படக்கூடும். பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது. தந்தையின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
உத்தியோகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். ஆனால், சக ஊழியர்கள் அனுசரணையாக நடந்துகொள்வார்கள். கூடுமானவரை உங்கள் பணிகளில் மட்டுமே கவனம் செலுத்தவும். உயர் அதிகாரிகளுடன் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். 

தொழில், வியாபாரம் சுமாராகத்தான் இருக்கும். போட்டிகள் அதிகரிக்கும். சக வியாபாரிகளால் மறைமுக எதிர்ப்புகளைச் சந்திக்க வேண்டி வரும். வீண் அலைச்சலும் அதனால் மனச் சோர்வும் உடல் அசதியும் உண்டாகும். வியாபாரத்தை முன்னிட்டு வெளியூர்ப் பயணங்கள் மேற்கொள்ள நேரிடும். 

கலைத்துறையைச் சேர்ந்த அன்பர்கள் தங்களுக்குக் கிடைத்த வாய்ப்புகளை கவனமாகப் பயன் படுத்திக் கொள்வது அவசியம். மாதப் பிற்பகுதியில் பிரபல நிறுவனங்களுடன் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். முயற்சிகளில் இருந்த தடை, தாமதங்கள் நீங்கும்.
மாணவர்கள் படிப்பில் கூடுதல் கவனம் செலுத்தவேண்டியது அவசியம். கஷ்டப்பட்டு படித்தால் தான் நல்ல மதிப்பெண்கள் பெறமுடியும். சந்தேகங்களை ஆசிரியர்களிடம் உடனுக்குடன் கேட்டுத் தெளிவு பெறுவது நல்லது. 

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்கள் குடும்பத்தில் அனைவரையும் அனுசரித்துச் செல்வது நல்லது. மாதப் பிற்பகுதியில் அக்கம்பக்கத்தில் இருப்பவர்களின் ஒத்துழைப்பு மனதுக்கு உற்சாகம் தரும். வேலைக்குச் செல்லும் பெண்கள் அலுவலகத்தில் தங்கள் பொறுப்புகளில் கவனமாக இருப்பது மிகவும் அவசியம். 

அதிர்ஷ்ட நாள்கள்: ஏப்: 14, 15, 16, 19, 20, 21, 24, 25, மே: 1, 2, 3, 4, 5, 10, 11, 12, 14
சந்திராஷ்டம நாள்: மே: 6, 7
அதிர்ஷ்ட எண்கள்: 3,5

வழிபடவேண்டிய தெய்வம்: முருகப்பெருமான், துர்கை
பரிகாரம்: தினமும் அல்லது செவ்வாய்க்கிழமைகளில் கந்த சஷ்டி கவசம் பாராயணம் செய்வது நல்லது. வெள்ளிக்கிழமைகளில் ராகுகால வேளையில் துர்கைக்கு நெய்தீபம் ஏற்றி அர்ச்சனை செய்வது நல்லது.  

 

விருச்சிகம்விருச்சிகம்:

6-ல் சூரியன்; 4, 5 -ல் சுக்கிரன்; 5, 6 -ல் புதன்; 7, 8 -ல் செவ்வாய்; 2-ல் குரு (அதிசாரம்), சனி, கேது; 8 -ல் ராகு.

மாதம் முழுவதும் சூரியன், அதிசார குரு ஆகியோர் நன்மை செய்வார்கள். புதன் மற்றும் சுக்கிரனால் ஓரளவு அனுகூலமான பலன்கள் நடைபெறும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் உற்சாகமும் காணப்படும். எதிரிகளின் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். வெளிவட்டா ரத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். உறவினர்களும் நண்பர்களும் மிகவும் உதவியாக இருப்பார்கள். கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். திருமணம், வளைகாப்பு போன்ற சுபநிகழ்ச்சிகளால் வீட்டில் மகிழ்ச்சி நிலவும். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். மாதப் பிற்பகுதியில் உறவினர்கள் வகையில் எதிர்பார்த்த காரியம் சாதகமாக முடியும். தாய்வழி உறவினர்களால் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும்.  பொறுமையுடன் இருப்பது மிகவும் அவசியம். புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள். குடும்பத்துடன் வெளியிடங்களுக்குச் சென்று வருவீர்கள். விருந்து விசேஷங்களில் கலந்துகொள்ளும் வாய்ப்பு உண்டு. மாதத்தின் பிற்பகுதியில் கடன்கள் விஷயத்தில் கவனம் தேவை. ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். சிலருக்கு வெளியூர், வெளி மாநிலப் புண்ணியத் தலங்களுக்குச் சென்று வரும் வாய்ப்பு உண்டாகும். குடும்பப் பெரியவர்களின் அறிவுரையின்படி நடந்துகொண்டு, அவர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். ஷேர் மூலம் பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.

அலுவலகத்தில் சக ஊழியர்களிடம் செல்வாக்கு அதிகரிக்கும். பணிகளில் அவர்களின் ஒத்துழைப்பும் கிடைக்கும். நீண்டநாள்களாக எதிர்பார்த்த பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்ற சலுகைகள் கிடைக்கும். மேலதிகாரிகளின் அன்பும் ஆதரவும் உங்களை உற்சாகப்படுத்தும். 

தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். எதிரிகளால் ஏற்பட்ட பிரச்னைகள் நீங்கும். புதிய முயற்சிகள் வெற்றி தரும். வியாபாரத்தை விரிவுபடுத்தும் எண்ணம் இருந்தால், அதற்கான முயற்சிகளில் இந்த மாதம் ஈடுபடலாம். 

கலைத்துறையைச் சேர்ந்த அன்பர்களுக்கு புதுப் புது வாய்ப்புகள் கதவைத் தட்டும். பெரிய நிறுவனங்களுடன் ஒப்பந்தம் கையெழுத்தாகும். படைப்புகள் பெரும் வரவேற்பு பெறும். பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு கௌரவிக்கப்படுவீர்கள். 

மாணவர்களுக்குக் கல்வியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்று, ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களின் பாராட்டுகள் கிடைக்கும். போட்டி பந்தயங்களில் வெற்றி கிடைக்கும். 

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு உறவினர்களிடையே மதிப்பு மரியாதை அதிகரிக்கும். தோழியர்கள் வட்டாரத்தில் உங்கள் செயல்பாடுகள் பாராட்டப்படும். பணிக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு, அலுவலகத்தில் புதிய பொறுப்புகள் கிடைக்கும். பதவி உயர்வு கிடைப்பதற்கும் வாய்ப்பு உண்டு.

அதிர்ஷ்ட நாள்கள்: ஏப்: 15, 16, 18, 22, 23, 26, 27, 28, மே: 4, 5, 6, 7, 12, 14
சந்திராஷ்டம நாள்: மே: 8, 9
அதிர்ஷ்ட எண்கள்: 5,9

வழிபடவேண்டிய தெய்வம்: சூரியன், தட்சிணாமூர்த்தி
பரிகாரம்: ஞாயிற்றுக்கிழமைகளில் சூரியனுக்கு செம்பருத்திமாலை அணிவித்து அர்ச்சனை செய்வதும், ஆதித்ய ஹ்ருதயம் பாராயணம் செய்வதும் நன்மை தரும். வியாழக்கிழமைகளில் தட்சிணாமூர்த்திக்கு மஞ்சள் மலர்களால் அர்ச்சனை செய்து வழிபடுவதும் நன்மை தரும்.


தனுசுதனுசு:

5-ல் சூரியன்; 3, 4 -ல் சுக்கிரன்; 4, 5 -ல் புதன்; 6, 7 -ல் செவ்வாய்; 1-ல் குரு (அதிசாரம்), சனி, கேது; 7 -ல் ராகு.

சுக்கிரன் மட்டுமே நன்மை செய்யும் நிலையில் காணப்படுகிறார். புதனால் ஓரளவு அனுகூலப் பலன்கள் ஏற்படும். எதிர்பாராத அதிர்ஷ்ட வாய்ப்புகள் ஏற்படும். குழந்தைகளால் மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நிகழும். நண்பர்களும் அனுகூலமாக இருப்பார்கள். அவர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். தெய்வ பக்தி அதிகரிக்கும். எடுத்த செயலை வெற்றிகரமாக முடிப்பீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். குடும்பத்தில் உறவினர்க ளிடையே இருந்த கருத்து வேறுபாடு நீங்கி, சுமுகமான சூழ்நிலை உண்டாகும். வெளிவட்டாரத்தில் மதிப்பு மரியாதை கூடும். சிலருக்கு புதிய வீடு, வாகனம் வாங்கும் வாய்ப்பு உண்டாகும். மாதப் பிற்பகுதியில் குடும்பப் பெரியவர்களால் நன்மைகள் நடக்கும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். புதிய ஆடை, ஆபரணங்களின் சேர்க்கை உண்டாகும். ஆண்களுக்கு பெண்களாலும் பெண்களுக்கு ஆண்களாலும் நன்மைகள் ஏற்படும். சிலருக்கு புண்ணியத் தலங்களுக்குச் செல்லும் வாய்ப்பு உண்டாகும்.  ஆனால்,  உடல் ஆரோக்கியத்தில் மட்டும் சற்று  கவனம் தேவைப்படும். மாத முற்பகுதியில் தாய்வழி உறவினர்களுடன்  கருத்து வேறுபாடுகள் ஏற்படக்கூடும். தாயாரின் உடல் ஆரோக்கியத்திலும் கவனம் தேவை.  
அலுவலகத்தில் எதிர்பாராத பதவி உயர்வு உங்களை உற்சாகப்படுத்தும். சக ஊழியர்களிடையே பெரிதும் மதிக்கப்படுவீர்கள். உங்களுடைய அனுபவபூர்வமான ஆலோசனைகள் நிர்வாகத்தினரால் பெரிதும் பாராட்டப்படும். 

தொழில், வியாபாரத்தில் முன்னேற்றமான சூழ்நிலையே காணப்படுகிறது. உழைப்புக்கேற்ற ஆதாயம் கிடைக்கும். பங்குதாரர்களுடன் இணக்கமான சூழ்நிலை காணப்படுகிறது. ஆனாலும், மறைமுகப் பிரச்னைகளைச் சமாளிக்கவேண்டி இருக்கும். மாதப் பிற்பகுதியில் கொடுக்கல் - வாங்கல் விஷயத்தில் எச்சரிக்கை அவசியம்.

கலைத்துறையைச் சேர்ந்தவர்கள் சாமர்த்தியமாகப் பேசி வாய்ப்புகளைப் பெறுவார்கள். ஆண் கலைஞர்களுக்கு பெண் கலைஞர்களாலும், பெண் கலைஞர்களுக்கு ஆண் கலைஞர்களாலும் நன்மைகள் ஏற்பட சாத்தியம் உள்ளது.

மாணவர்களுக்குப் பாடங்களில் கூடுதல் கவனம் தேவைப்படுகிறது. பெற்றோர் மற்றும் ஆசிரியர் களின் ஆலோசனைகளைக் கேட்டு நடப்பது நல்லது. தேவையற்ற சகவாசத்தைத் தவிர்க்கவேண்டியது அவசியம்.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு உறவினர்கள் மத்தியில் மதிப்பு மரியாதை கூடும். கணவரின் அன்பும் அவர் வழி உறவினர்களால் நன்மைகளும் ஏற்படும். அலுவலகத்துக்குச் செல்லும் பெண் களுக்கு எதிர்பாராத சலுகைகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட நாள்கள்: ஏப்: 17, 18, 19, 20, 21, 24, 25, 29, 30, மே: 6, 7, 8, 9
சந்திராஷ்டம நாள்: ஏப்: 14, மே: 10, 11
அதிர்ஷ்ட எண்கள்: 3,4

வழிபடவேண்டிய தெய்வம்: முருகப்பெருமான், மகாலட்சுமி
பரிகாரம்: தினமும் கந்தசஷ்டி கவசம் பாராயணம் செய்வது நல்லது. சனிக்கிழமைகளில் சனி பகவானுக்கு அர்ச்சனை செய்வதும், வெள்ளிக்கிழமைகளில் மகாலட்சுமிக்கு நெய்தீபம் ஏற்றுவதும் சிறந்த பலன்களைத் தரும்.


மகர ராசி மகரம்:

4-ல் சூரியன்; 2, 3 -ல் சுக்கிரன்;  3, 4 -ல் புதன்;  5, 6 -ல் செவ்வாய்; 12-ல் குரு (அதிசாரம்), சனி, கேது; 6 -ல் ராகு.

சுக்கிரன், ராகு ஆகியோர் நன்மை செய்வார்கள். குரு சுபவிரயங்களை ஏற்படுத்துவார். செவ்வா யால் அனுகூலம் உண்டாகும். பணவரவு கணிசமாக உயரும். புதிய ஆடை, ஆபரணங்கள் சேரும். மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். எதையும் சாதிக்கவேண்டும் என்ற மன உறுதி ஏற்படும். பழைய வாகனத்தை மாற்றிவிட்டு, புதிய வாகனம் வாங்குவீர்கள். கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் நிம்மதியும் ஏற்படும். பிரிந்திருந்த தம்பதி ஒன்று சேருவார் கள். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். சுபநிகழ்ச்சிகளில் கலந்துகொள் வீர்கள். குடும்பத் துடன் விருந்து விசேஷங்களுக்குச் சென்று வருவீர்கள். உறவினர்களால் உதவி கிடைக்கும் அதே நேரத்தில் அவர்களால் சிறு உபத்திரவமும் ஏற்படலாம். உறவினர்கள் வகையில் சற்று பக்குவமாக நடந்துகொள்வது நல்லது. வெளிவட்டாரத்தில் மதிப்பு மரியாதை கூடும். வாழ்க்கைத்துணை வழி உறவுகள் உங்கள் ஆலோசனைகளை ஏற்றுக்கொள்வார்கள். அவர்கள் மத்தியில் உங்கள் கௌரவம் உயரும். உடல் நலனில் மட்டும் சற்று கவனமாக இருப்பது நல்லது. கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அவசியம்.

ராசிபலன்

அலுவலகத்தில் இதுவரை இருந்து வந்த இறுக்கமான சூழ்நிலை மாறும். உங்கள் பணிகளில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். சிலருக்கு எதிர்பார்த்த பதவி உயர்வு, ஊதிய உயர்வு போன்ற சலுகைகள் கிடைக்கும். நிர்வாகத்தினரிடம் எதிர்பார்த்த கோரிக்கைகள் நிறைவேறும். 

தொழில் மற்றும் வியாபாரத்தில் லாபம் சுமாராகத்தான் கிடைக்கும். மாத முற்பகுதியில் வீண் விரயம் ஏற்பட சாத்தியமுள்ளது. புதிய முயற்சிகளைத் தவிர்ப்பதுடன், வியாபாரத்தை விரிவு படுத்தும் முயற்சிகளையும் தவிர்க்கவும். சக வியாபாரிகளால் மறைமுகப் போட்டிகளைச் சந்திக்க நேரிடலாம். 

கலைத்துறையைச் சேர்ந்த அன்பர்களுக்கு எதிர்பார்த்த புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். பட்டங்களும் விருதுகளும் பெறும் வாய்ப்பு உண்டாகும். அரசால் கௌரவிக்கப்படுவீர்கள். தொழில் சம்பந்தமாக பயணங்களை மேற்கொள்ள நேரிடும்.
மாணவர்களுக்குப் படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்று, ஆசிரியர்களின் பாராட்டுகளைப் பெறுவீர்கள்.

ஆசிரியர் மற்றும் பெற்றோரின் ஆலோசனையைக் கேட்டு நடப்பது நல்லது.
குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு பல வகைகளிலும் முன்னேற்றம் தரும் மாதமாக இருக்கும். கணவரின் பாராட்டுகள் கிடைக்கும்.அலுவலகத்துக்குச் செல்லும் பெண்களுக்கு சிறப்பான பலன்கள் ஏற்படக்கூடும். எதிர்பார்த்த பதவி உயர்வு, ஊதிய உயர்வு கிடைக்கக்கூடும்.

அதிர்ஷ்ட நாள்கள்: ஏப்: 14, 19, 20, 21, 22, 23, 27, 28, மே: 1, 2, 3, 9, 10, 11
சந்திராஷ்டம நாள்: ஏப்: 15, 16, மே: 12, 13, 14
அதிர்ஷ்ட எண்கள்: 7,9

வழிபடவேண்டிய தெய்வம்: மகாலட்சுமி, வேங்கடாசலபதி
பரிகாரம்: விஷ்ணுசஹஸ்ரநாமம் மற்றும் மஹாலக்ஷ்மி அஷ்டகம் பாராயணம் செய்வது நல்ல பலன்களைத் தரும். சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயருக்கு துளசி அர்ச்சனை செய்வதும் நன்மை தரும்.


கும்பம்கும்பம்:

3-ல் சூரியன்; 1, 2 -ல் சுக்கிரன்;  2, 3 -ல் புதன்;  4, 5 -ல் செவ்வாய்; 11-ல் குரு (அதிசாரம்), சனி, கேது; 5 -ல் ராகு.

சூரியன், சுக்கிரன், அதிசார குரு ஆகியோரால் நன்மைகள் ஏற்படும். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். புதிய முயற்சிகளில் ஈடுபடுவதற்கு முன்பு ஒருமுறைக்குப் பலமுறை யோசித்து ஈடுபடுவது நல்லது. கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். வாழ்க்கைத் துணைவழியில் மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்கும். தந்தையுடன் ஏற்பட்டிருந்த கருத்துவேறுபாடுகள் நீங்கி, சுமுகமான  உறவு ஏற்படும். நவீன ரக மின்சார, மின்னணுப் பொருள் களை வாங்கி மகிழ் வீர்கள். அரசாங்கம் தொடர்பான காரியங்கள் அனுகூலமாக முடியும். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். உறவினர்கள் வருகையால் சுபநிகழ்ச்சி ஒன்று நடைபெறுவ தற்கான வாய்ப்பு ஏற்படும். சிலருக்கு வெளியூர்களில் அமைந்திருக்கும் பிரசித்தி பெற்ற சுற்றுலாத் தலங்கள் மற்றும் ஆலயங்களுக்குச் செல்லும் வாய்ப்பு ஏற்படும். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கக்கூடும். முக்கியப் பிரமுகர்களின் அறிமுகம் கிடைப்பதுடன், அவர்களால் ஆதாயமும்  ஏற்படும். நண்பர்களால் அனுகூலம்  உண்டாகும். தந்தையுடன் ஏற்பட்டிருந்த கருத்துவேறு பாடுகள் மறைந்து சுமுகமான உறவு ஏற்படும்.

அலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலை காணப்படும். பணிகளில் உற்சாகமாக ஈடுபடுவீர்கள். உயர் அதிகாரிகள் உங்கள் ஆலோசனைகளுக்கு உரிய அங்கீகாரம் கொடுப்பார்கள். எதிர்பார்த்த பதவி உயர்வு, ஊதிய உயர்வு போன்ற சலுகைகள் கிடைக்கும். 

தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விடவும் விற்பனையும் லாபமும் கூடுதலாகக் கிடைக்கும். அரசாங்க வகையில் எதிர்பார்த்த காரியங்கள் சற்று இழுபறிக்குப் பிறகே முடியும். புதிய முயற்சிகள் வெற்றி பெறும். 

கலைத்துறையைச் சேர்ந்த அன்பர்களுக்கு நல்ல நல்ல வாய்ப்புகளும், தாராளமான பணவரவும் கிடைக்கும். பொது நிகழ்ச்சிகளில் கௌரவிக்கப்படுவீர்கள். புகழும், ரசிகர்களிடம் செல்வாக்கும் அதிகரிக்கும். 

மாணவர்கள், மனத்தெளிவு பெற்று ஓரளவு படிப்பில் கவனம் செலுத்த முயற்சி செய்வீர்கள். ஆசிரியர்களின் ஆலோசனைகள் பயன் தருவதாக இருக்கும்.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு மகிழ்ச்சி தரும் மாதம். புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள். விருந்து விசேஷங்களில் கலந்துகொள்ளும் வாய்ப்பு உண்டாகும். அலுவலகத்துக்குச்  செல்லும் பெண்களுக்கு பல வகைகளிலும் அனுகூலமான மாதம் இது.

அதிர்ஷ்ட நாள்கள்: ஏப்: 14, 15, 16, 22, 23, 24, 25, 30, மே: 4, 5, 10, 11, 12, 14
சந்திராஷ்டம நாள்: ஏப்: 17, 18
அதிர்ஷ்ட எண்கள்: 4,6

வழிபடவேண்டிய தெய்வம்: துர்கை, முருகப் பெருமான்
பரிகாரம்: செவ்வாய்க்கிழமைகளில் கந்த சஷ்டி பாராயணம் செய்வதும், ஞாயிற்றுக்கிழமைகளில் துர்கைக்கு அர்ச்சனை செய்வதும் நன்மை தரும்.

 

மீனம் மீனம்:

2-ல் சூரியன்; 12, 1-ல் சுக்கிரன்;  1, 2 -ல் புதன்;  3, 4 -ல் செவ்வாய்; 10-ல் குரு (அதிசாரம்), சனி, கேது; 4 -ல் ராகு.

பெரும்பாலான கிரகங்கள் சாதகமான நிலையில் இல்லை என்றாலும், மாதம் முழுவதும் சுக்கிரன் சாதகமான பலன்களைத் தரவிருப்பதால், எதையும் சமாளித்துவிடுவீர்கள். புதிய ஆடை, ஆபர ணங்கள் சேரும். விருந்து விசேஷங்களில் கலந்துகொள்ளும் வாய்ப்பு உண்டாகும். கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். வெளிவட்டாரத்தில் மதிப்பும் மரியாதையும் கூடும். அரசாங்க விவகாரங்கள் இழுபறியாகி முடியும்.  திருமணம், வளைகாப்பு போன்ற சுப நிகழ்ச்சிகள் நல்லபடி நடைபெறும். உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி நிலவும். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். கணவன் - மனைவிக்கிடையே ஏற்பட்டிருந்த பிணக் குகள் நீங்கி, ஒற்றுமை பலப்படும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் உற்சாகமும் நிறைந்திருக்கும். பிள்ளைகளின் பிடிவாதப் போக்கு மாறும். அவர்களின் விருப்பத்தை நிறை வேற்றி மகிழும் வாய்ப்பு ஏற்படும். பிள்ளை அல்லது பெண்ணின் திருமணம் தொடர்பான முயற்சிகளை மேற்கொள்ளலாம். முக்கிய முடிவுகளைத் துணிந்து எடுப்பதுடன், அதனால் ஆதாயமும் அடைவீர்கள். கடன்கள் விஷயத்தில் கவனமாக இருப்பது நல்லது.

அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். எந்த ஒரு வேலையையும் சற்று கஷ்டப்பட்டுத்தான் முடிக்கவேண்டி இருக்கும். தீவிர முயற்சியினால் மட்டுமே உங்கள் கோரிக்கைகள் நிறைவேறும்.  சக ஊழியர்களால் ஓரளவு உதவி உண்டு.ஜோதிடமாமணி கிருஷ்ணதுளசி

தொழில், வியாபாரத்தில் கூடுதலாக உழைக்கவேண்டும். ஆனால், அதற்கேற்ற ஆதாயம் கிடைக்கும் என்று சொல்வதற்கில்லை. பங்குதாரர்களால் வியாபாரத்தில் லாபம் கூடுதலாகக் கிடைக்கும். வியாபாரத்தை விரிவுபடுத்த வங்கிக் கடனுதவி கிடைக்கும்.

கலைத்துறையைச் சேர்ந்த அன்பர்களுக்கு பெரிய நிறுவனங்களில் இருந்து அழைப்பு வரும். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். புகழும் கௌரவமும் அதிகரிக்கும். ரசிகர்களிடம் உங்கள் செல்வாக்கு கூடும். சிலருக்கு விருதுகளும் பட்டங்களும் கிடைக்கும்.

மாணவர்களுக்குப் படிப்பில் இருந்த தேக்க நிலை மாறும். பாடங்களை ஆர்வத்துடன் கவனிப்பீர்கள். ஆசிரியர்களின் கேள்விகளுக்கு உரிய பதில்களைக் கூறி, பாராட்டு பெறுவீர்கள். ஆனாலும், நண்பர் களிடம் பழகும்போது கவனம் தேவை.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு மகிழ்ச்சி தரும் மாதமாகவே இருக்கும். குடும்பப் பொறுப்புகளை நிறைவேற்றுவதில் சிரமம் எதுவும் இருக்காது. அக்கம்பக்கத்து வீடுகளில் உள்ளவர்கள் உதவிகரமாக இருப்பார்கள். அலுவலகத்துக்குச் செல்லும் பெண்களுக்கு பணிகளில் கூடுதல் கவனம் தேவை.

அதிர்ஷ்ட நாள்கள்: ஏப்: 15, 16, 17, 18, 24, 25, 26, 27, 28, மே: 1, 2, 3, 6, 7, 12, 14
சந்திராஷ்டம நாள்: ஏப்: 19, 20, 21
அதிர்ஷ்ட எண்கள்: 6,7

வழிபடவேண்டிய தெய்வம்: அம்பிகை, மகாவிஷ்ணு
பரிகாரம்: புதன்கிழமைகளில் விஷ்ணுசகஸ்ரநாமம் பாராயணம் செய்வதும், வியாழக்கிழமை களில் தட்சிணாமூர்த்திக்கு நெய்தீபம் ஏற்றி அர்ச்சனை செய்வதும் நன்மை தரும்.


 


டிரெண்டிங் @ விகடன்