சித்திரை மாத ராசிபலன் மேஷம் முதல் கன்னி வரை 6 ராசிகளுக்கான ராசிபலன் #Astrology | Rasipalan for the month of chithirai from aries to virgo

வெளியிடப்பட்ட நேரம்: 08:48 (12/04/2019)

கடைசி தொடர்பு:09:09 (12/04/2019)

சித்திரை மாத ராசிபலன் மேஷம் முதல் கன்னி வரை 6 ராசிகளுக்கான ராசிபலன் #Astrology

மிதுன ராசிக்காரர்களே... சூரியன், சுக்கிரன், குரு, புதன் ஆகியோர் சாதகமாக உள்ளனர். வெளிவட்டாரத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். அரசாங்க வகையில் எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாக முடியும். தந்தை வழி உறவுகளால் ஆதாயம் உண்டாகும்.

சித்திரை மாத ராசிபலன் மேஷம் முதல் கன்னி வரை 6 ராசிகளுக்கான ராசிபலன் #Astrology

சித்திரை மாத ராசிபலன் மேஷம் முதல் கன்னி வரை 6 ராசிகளுக்கான ராசிபலன், அதிர்ஷ்டக் குறிப்புகள் மற்றும் எளிய பரிகாரங்களுடன் கணித்துத் தந்திருக்கிறார் `ஜோதிட மாமணி' கிருஷ்ணதுளசி.

மேஷ ராசி மேஷம்: 

1-ல் சூரியன்; 11, 12-ல் சுக்கிரன்;12, 1-ல் புதன்; 2, 3-ல் செவ்வாய்; 9-ல் குரு (அதிசாரம்), சனி, கேது; 3-ல் ராகு.

சுக்கிரன், செவ்வாய், குரு, ராகு ஆகியோர் அனுகூலப் பலன்களைத் தரும் நிலையில் உள்ளனர். அனைத்து காரியங்களிலும் வெற்றி உண்டாகும். பணவரவு மகிழ்ச்சி தருவதாக இருக்கும். புதிய வாகனம் வாங்கும் யோகமும் உண்டாகும். சிலருக்கு எதிர்பாராத அதிர்ஷ்ட வாய்ப்புகளும் ஏற்படக்கூடும். தெய்வபக்தியும் ஆன்மிகத்தில் நாட்டமும் அதிகரிக்கும். புண்ணியத் தலங்களுக்குச் சென்று வரும் வாய்ப்பும் ஏற்படும். பெண்களால் பொருள் சேர்க்கை உண்டாகும்.  உறவினர்களால் அடிக்கடி பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்பதால் கூடுமானவரை அளவோடு பழகவும். கணவன் - மனைவிக்கிடையே சிறுசிறு அளவில் கருத்துவேறுபாடு ஏற்பட வாய்ப்பு உள்ளதால், ஒருவரையொருவர் அனுசரித்துச் செல்வது நல்லது. குடும்பத்தில் அடிக்கடி பிரச்னைகள் ஏற்படக்கூடும். பிள்ளைகளால் சில சங்கடங்களைச் சந்திக்க நேரிடும். வெளிநாட்டில் இருந்து எதிர்பார்த்த செய்தி கிடைப்பதில் தாமதம் ஏற்படும். தந்தையின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. அவருடைய தேவைகளை நிறைவேற்ற முயற்சி செய்யவும்.நண்பர்களிடம் எதிர்பார்க்கும் உதவிகள் கிடைக்கும். நண்பர்களால் வாழ்க்கையில் நல்ல திருப்பம் ஏற்படக்கூடும்.

அலுவலகத்தில் பதவி உயர்வு, ஊதிய உயர்வு போன்ற சலுகைகள் கிடைக்கும். ஆனாலும், பணிச்சுமை அதிகரிக்கவே செய்யும். சக ஊழியர்கள் உங்கள் பணிகளில் உதவிகரமாக இருப்பார்கள். சிலருக்கு வேலையில் இடமாற்றமும் ஊர்மாற்றமும் ஏற்பட வாய்ப்பு உண்டாகும்.

தொழில் மற்றும் வியாபாரத்தில் மாத முற்பகுதியில் விற்பனை அதிகரிப்பதுடன் லாபமும் படிப்படியாக உயரும். ஆனால், முன்பின் தெரியாதவர்களுடன் ஒப்பந்தம் செய்துகொள்ள வேண்டாம். ஷேர் மூலம் ஆதாயம் வரும். 

கலைத்துறையைச் சேர்ந்த அன்பர்களுக்கு தடைப்பட்ட வாய்ப்புகள் கைகூடி வரும். வருமானமும் அதிகரிக்கும். பாராட்டுகள் குவியும். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். சிலருக்கு வெளியூர், வெளிநாடு செல்லும் வாய்ப்பும் உண்டாகும்.

மாணவர்கள் படிப்பில் கூடுதல் கவனம் எடுத்துப் படிக்கவேண்டியது அவசியம். பொழுதுபோக்கு களைக் குறைத்துக்கொள்வது நல்லது. ஆசிரியர்கள் பாடங்கள் நடத்தும்போது கூர்ந்து கவனிப்பது அவசியம்.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு குடும்பத்தை நிர்வகிப்பதில் சற்று சிரமம் இருக்கவே செய்யும். பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது. வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு வேலைச்சுமை கூடுதலாக இருக்கும்.

அதிர்ஷ்ட நாள்கள்: ஏப்: 17, 18, 19, 20, 21, 28, 29, 30, மே: 4, 5, 8, 9
சந்திராஷ்டம நாள்: ஏப்: 22, 23
அதிர்ஷ்ட எண்கள்: 1,9

வழிபடவேண்டிய தெய்வம்: சிவபெருமான், ஆஞ்சநேயர்
பரிகாரம்: திங்கள்தோறும் சிவபெருமானுக்கு வில்வதளத்தால் அர்ச்சனை செய்வதும், சிவஸ்துதிகளைப் பாராயணம் செய்வதும் நன்மை தரும். சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை சாத்தி வழிபடவும்.

 

ரிஷப ராசி ரிஷபம்:  

12-ல் சூரியன்; 10, 11-ல் சுக்கிரன்; 11, 12-ல் புதன்; 1, 2-ல் செவ்வாய்; 8-ல் குரு (அதிசாரம்), சனி, கேது; 2-ல் ராகு.

சூரியன், சுக்கிரன், மாத முற்பகுதியில் புதன் ஆகியோர் சாதகமான நிலையில் உள்ளனர். பணப்புழக்கம் கணிசமாக அதிகரிக்கும். உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். முன்னேற்றத்துக்கான வழிவகைகள் பிறக்கும். புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கும் யோகம் உண்டாகும். பிரிந்திருந்த கணவன் - மனைவி ஒன்று சேருவீர்கள். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். மாதப் பிற்பகுதியில் சிலருக்கு புது வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டா கும். நவீன ரக மின்சார, மின்னணு சாதனங்கள் வாங்குவீர்கள். பிள்ளைகள் வழியில் பெருமைப் படத்தக்க செய்திகளைக் கேட்பீர்கள். திருமண முயற்சிகள் சாதகமாக முடியும். மகளுக்கு நல்ல இடத்தில் வரன் அமையும். ஆனால், குடும்பத்தில் தந்தை வழியில் அவ்வப்போது சிறுசிறு சங்கடங்கள் ஏற்படக்கூடும். மாதப் பிற்பகுதியில் உறவினர்களால் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்பதால், உறவினர்களிடம் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். குடும்ப விஷயங்களில் அவர்களின் தலையீட்டை அனுமதிக்க வேண்டாம். அதன் மூலம் தேவையற்ற பிரச்னைகள் ஏற்படாமல் தவிர்த்துவிடலாம்.  

அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். சிலருக்கு பதவி மாற்றமும், இட மாற்றமும் ஏற்படக்கூடும். அலுவலகத்தில் உயர் அதிகாரிகளிடம் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். 

தொழில் மற்றும் வியாபாரத்தில் லாபம் எதிர்பார்த்தபடியே இருக்கும். மறைமுக எதிரிகளால் பிரச்னைகள் ஏற்படக்கூடும். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் எதுவும் இந்த மாதம் வேண்டாம். மாதப் பிற்பகுதியில் ஓரளவுக்கு நன்மைகளை எதிர்பார்க்கலாம்.
கலைத்துறையைச் சேர்ந்த அன்பர்களுக்கு எதிர்பார்த்தபடியே புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். நியாயமாக உங்களுக்குக் கிடைக்கவேண்டிய பாராட்டுகள் மறுக்கப்படும். மாதப் பிற்பகுதியில் நிலைமை சீராகும். புகழும் கௌரவமும் ஒருபடி உயரும். பரிசுகளும் பாராட்டுகளும் கிடைக்கும்.

மாணவர்களுக்குப் பாடங்களில் கூடுதல் கவனம் தேவைப்படும். கஷ்டப்பட்டு படித்தால்தான், பாடங்களில் நல்ல மதிப்பெண்கள் பெற்று, ஆசிரியர்களின் பாராட்டுகளைப் பெற முடியும்.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு மகிழ்ச்சி தரும் மாதமாகவே இருக்கும்.உறவினர்களுடன் இணக்கமான சூழ்நிலையே காணப்படும். குடும்ப உறுப்பினர்கள் உங்கள் ஆலோசனைகளுக்கு மதிப்பு தருவார்கள். அலுவலகத்துக்குச் செல்லும் பெண்களுக்கு எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்க வாய்ப்பு உள்ளது.

அதிர்ஷ்ட நாள்கள்: ஏப்: 14, 19, 20, 21, 22, 23, 29, 30, மே: 1, 2, 3, 6, 7, 10, 11
சந்திராஷ்டம நாள்: ஏப்: 24, 25
அதிர்ஷ்ட எண்கள்: 2,7

வழிபடவேண்டிய தெய்வம்: முருகப்பெருமான், விநாயகர்
பரிகாரம்: செவ்வாய்க்கிழமைகளில் முருகப் பெருமானுக்கு செவ்வரளி மலர்களால் அர்ச்சனை செய்வதும், கந்த சஷ்டி கவசம் பாராயணம் செய்வதும், வெள்ளிக்கிழமைகளில் விநாயகருக்கு அறுகம்புல்லால் அர்ச்சனை செய்வதும் நன்மை தரும்.

 

மிதுனம் மிதுனம்:

11-ல் சூரியன்; 9, 10 -ல் சுக்கிரன்; 10, 11-ல் புதன்; 12, 1-ல் செவ்வாய்; 7-ல் குரு (அதிசாரம்), சனி, கேது; 1-ல் ராகு.

சூரியன், சுக்கிரன், குரு, புதன் ஆகியோர் சாதகமாக உள்ளனர். வெளிவட்டாரத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். அரசாங்க வகையில் எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாக முடியும். தந்தை வழி உறவுகளால் ஆதாயம் உண்டாகும். பணப்புழக்கம் அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் உற்சாகமும் நிலவும். கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். உறவினர்கள் வருகையும், அவர்களால் மகிழ்ச்சியும் உண்டாகும். அவர்களிடம் எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாகும். சிலருக்கு புதிய சொத்துக்களின் சேர்க்கை ஏற்படும். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். நண்பர்கள் மூலம் ஆதாயம் கிடைக்கக்கூடும்.  உங்கள் முயற்சிகளுக்கு மனைவி, மகள் உள்ளிட்ட குடும்பப் பெண்கள் பக்கபலமாக இருப்பார்கள்.  அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுடன் அனுசரித்துச் செல்வது நல்லது. உடல் ஆரோக்கியம் மேம்படும். புதிய ஆடை, ஆபரணங்களின் சேர்க்கைக்கு வாய்ப்பு உண்டு. பழைய வாகனத்தை மாற்றி, புதிய வாகனம் வாங்குவீர்கள். வெளிநாட்டில் இருப்பவர்கள் மூலம் பணவரவும் பொருள்சேர்க்கையும் உண்டாகும்.

அலுவலகத்தில் ஓரளவுக்கு முன்னேற்றமான சூழ்நிலையே  காணப்படும். எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். சக ஊழியர்கள் உங்கள் பணிகளில் ஒத்துழைப்பு தருவார்கள். உங்கள் கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்படும். சிலருக்குப் பதவி உயர்வு, ஊதிய உயர்வு கிடைப்பதில் இருந்த தடைகள் விலகும். 

தொழில் மற்றும் வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். விற்பனையும் லாபமும் எதிர்பார்த்த படியே இருக்கும். அரசாங்கத்திடம் எதிர்பார்த்த லைசென்ஸ் போன்ற விஷயங்கள் எளிதாக முடியும். வியாபாரத்தை விரிவுபடுத்தும் முயற்சிகள் வெற்றி பெறும்.
கலைத்துறையைச் சேர்ந்த அன்பர்களுக்கு எதிர்பார்த்தபடியே வாய்ப்புகள் கிடைக்கும். சக கலைஞர்கள் அனுசரணையாக இருப்பார்கள். படைப்புகளுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும். 

மாணவர்களுக்குப் படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும்.தேர்வுகளில் நல்ல மதிப்பெண்கள் பெறுவீர்கள். ஆசிரியர்களின் பாராட்டுகள் மனதுக்கு மகிழ்ச்சி தரும். போட்டி, பந்தயங்களில் வெற்றி பெறுவீர்கள்.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு மாதத்தின் பெரும்பகுதி மகிழ்ச்சி தருவதாக இருக்கும். வாழ்க்கைத்துணையிடம் எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாகும். உறவினர்களிடையே மதிப்பு மரியாதை அதிகரிக்கும். அலுவலகத்துக்குச் செல்லும் பெண்களுக்கு எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட நாள்கள்: ஏப்: 15, 16, 22, 23, 24, 25, மே: 1, 2, 4, 5, 9, 12, 13, 14
சந்திராஷ்டம நாள்கள்: ஏப்: 26, 27, 28
அதிர்ஷ்ட எண்கள்: 1, 7, 9

வழிபடவேண்டிய தெய்வம்: விநாயகர், பெருமாள்
பரிகாரம்: விநாயகர் அகவல் பாராயணம் செய்வதும், விநாயகருக்கு அறுகம்புல் மாலை அணிவித்து, தும்பைப் பூக்களால் அர்ச்சனை செய்வதும் நன்மைகளைத் தரும். சனிக்கிழமைகளில் பெருமாளுக்கு துளசி மாலை அணிவித்து நெய்தீபம் ஏற்றி வழிபடுவது நல்லது.

 

கடகம் கடகம்:

10-ல் சூரியன்; 8, 9 -ல் சுக்கிரன்; 9, 10 -ல் புதன்; 11, 12 -ல் செவ்வாய்; 6-ல் குரு (அதிசாரம்), சனி, கேது; 12-ல் ராகு.

சூரியன், சுக்கிரன், சனி, கேது ஆகியோரால் நன்மைகள் ஏற்படும். புதனால் ஓரளவு நன்மைகளை எதிர்பார்க்கலாம். பணவரவு திருப்தி தருவதாக இருக்கும். காரியங்கள் அனுகூலமாக முடியும். குடும்பத்தில் வசதி வாய்ப்புகள் பெருகும். வீட்டில் மகிழ்ச்சியும் நிம்மதியும் குடிகொள்ளும். பெண்களால் நன்மை உண்டாகும். புதிய ஆடை, ஆபரணங்களின் சேர்க்கை உண்டாகும். கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். உறவினர்களால் நன்மைகள் ஏற்படும். குடும்பத் தேவைகள் ஒவ்வொன்றாக நிறைவேறும். தந்தை வழியில் எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாக முடியும். பெண்களால் நன்மை உண்டாகும். அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும். பூர்விகச் சொத்துப் பிரச்னையில் பொறுமையைக் கடைப்பிடிக்கவும்.  சிலருக்கு தடைப்பட்ட திருமணம் கூடி வரும். வீட்டில் சுபநிகழ்ச்சிகள் ஏற்பாடாகும். சகோதரர்களுடன் அனுசரணையாக நடந்துகொள்வது நல்லது. வெளியூர்ப் பயணங்களின்போது தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியம். தந்தைவழி உறவினர்கள் வழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும்.

அலுவலகத்தில் உற்சாகமாகச் செயல்படுவீர்கள். உங்கள் ஆலோசனைகள் நிர்வாகத்தினரால் ஏற்றுக்கொள்ளப்படும். மேலதிகாரிகளின் ஆதரவும் உங்களுக்குக் கிடைக்கும். சிலருக்கு பதவி உயர்வு, ஊதிய உயர்வு போன்ற சலுகைகள் கிடைப்பதற்கான வாய்ப்பு உண்டு. சக ஊழியர் களிடையே செல்வாக்கு அதிகரிக்கும்.

தொழில் மற்றும் வியாபாரத்தில் லாபம் அதிகமாகக் கிடைக்கும். சக போட்டியாளர்களின் மறைமுக எதிர்ப்புகளை முறியடிப்பீர்கள். பங்குதாரர்களுடன் இணக்கமான சூழ்நிலை ஏற்படும். வியாபாரத்தை விரிவுபடுத்தவோ அல்லது புதிய முதலீடு செய்வதையோ தவிர்ப்பது நல்லது. 

கலைத்துறையைச் சேர்ந்த அன்பர்களுக்கு புதுப் புது வாய்ப்புகள் தேடி வரும். சக கலைஞர்களால் ஏற்பட்ட மறைமுகத் தொல்லைகள் விலகும். உங்களைப் பற்றி கிசுகிசுக்கள் தோன்றினாலும், அதனால் பாதிப்பு இருக்காது.

மாணவர்களுக்குப் படிப்பில் ஆர்வம் குறையக்கூடும். கஷ்டப்பட்டு படித்தால் மட்டுமே தேர்வுகளில் தேர்ச்சி பெற முடியும். ஆசிரியர்களின் ஆலோசனைகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு மகிழ்ச்சி தரும் மாதமாக இருக்கும். குடும்பத்தில் உங்கள் ஆலோசனைகள் மற்றவர்களால் ஏற்றுக்கொள்ளப்படும். உறவினர்களும் உங்களுக்கு உதவியாக இருப்பார்கள். அக்கம்பக்கத்தில் இருப்பவர்களால் அனுகூலம் உண்டாகும். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட நாள்கள்: ஏப்: 16, 17, 18, 19, 20, 23, 24, 27, 28, மே: 4, 5, 6, 7, 14
 சந்திராஷ்டம நாள்கள்: ஏப்: 29, 30
அதிர்ஷ்ட எண்கள்: 7, 9

பரிகாரம்: வியாழனன்று தட்சிணாமூர்த்திக்கு நெய் தீபம்
வெள்ளியன்று  துர்கை வழிபாடு
வழிபடவேண்டிய தெய்வம்; தட்சிணாமூர்த்தி, ஆஞ்சநேயர்
பரிகாரம்: வியாழக்கிழமைகளில் நவகிரகங்களில் குருபகவானுக்கு மஞ்சள் மலர்களால் அர்ச்சனை செய்து வழிபடுவதும், சனிக்கிழமைகளில் அனுமனுக்கு அர்ச்சனை செய்து, அனுமன் சாலீசா படிப்பதும் நன்மை தரும்.

 

சிம்மம்சிம்மம்: 

9-ல் சூரியன்; 7, 8 -ல் சுக்கிரன்; 8, 9 -ல் புதன்; 10, 11 -ல் செவ்வாய்; 5-ல் குரு (அதிசாரம்), சனி, கேது; 11-ல் ராகு.

மாதம் முழுவதும் அதிசார குருவால் நன்மைகள் ஏற்படும். புதன், சுக்கிரன், செவ்வாய் ஆகியோரும் ஓரளவு நன்மை செய்வார்கள். பொருளாதார வசதி திருப்தி தருவதாக இருக்கும். எதிரிகள் பணிந்து போவார்கள். ஆடை, ஆபரணங்கள் சேரும் வாய்ப்பு உண்டாகும். சிலருக்கு புதிய வாகனம் வாங்கும் யோகம் உண்டு. ஆனால், உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. மற்றபடி வசதி வாய்ப்புகளுக்குக் குறைவு இருக்காது. உங்களுக்கு ஏற்பட்டிருந்த அவப்பெயர் விலகும். குடும்பத்தில் மனைவி மற்றும் மகளின் ஆலோசனையைக் கேட்டுச் செயல்படுவது நல்லது. பிள்ளைகளால் தர்மசங்கடமான நிலைமை களைச் சமாளிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படக்கூடும். தந்தை வழியில் எதிர்பார்த்த காரியங்கள் முடிவதில் தடை, தாமதங்கள் ஏற்படும். அவருடன் மனக்கசப்பு ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. தந்தையை அனுசரித்துச் செல்வது நல்லது. அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொள்வீர்கள். நவீன ரக மின்சார, மின்னணு சாதனங்களை வாங்குவீர்கள். உறவினர்களால் அனுகூலம் ஏற்படும் என்றாலும், சில பிரச்னைகளும் ஏற்படக் கூடும். சகோதரி களின் அன்பும் ஆதரவும் உங்களுக்கு மகிழ்ச்சி தரும். தாய்மாமன்வழியில்  தர்மசங்கடமான சூழ்நிலையை எதிர்கொள்ள நேரிடும்.

ராசிபலன்

அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். எதிர்பார்த்த சலுகைகள் கிடைப்பதில் தடை, தாமதங்கள் ஏற்படக்கூடும். சக ஊழியர்களிடம் போதுமான ஒத்துழைப்பு கிடைக்காது. மேலதிகாரிகள் கண்டிப்பு காட்டினாலும் பொறுமையுடன் அனுசரித்துச் செல்வது எதிர்காலத்துக்கு நல்லது. 

தொழில் மற்றும் வியாபாரத்தில் எவ்வளவுக்கு எவ்வளவு உழைக்கிறீர்களோ அவ்வளவுக்கு லாபம் கிடைக்கும். பற்று வரவு சுமுகமாக நடைபெறும். மறைமுகப் போட்டிகளை முறியடிப்பீர்கள். சக வியாபாரிகளுடன் இணக்கமாகப் பழகுவது நல்லது.

கலைத்துறையைச் சேர்ந்த அன்பர்களுக்கு வாய்ப்புகள் கிடைப்பதில் பிரச்னை எதுவும் இருக்காது.  அரசாங்கத்தால் கௌரவிக்கப்படுவீர்கள். படப்பிடிப்பு தொடர்பாக வெளிமாநில, வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்ள நேரிடலாம்.

மாணவர்கள் கஷ்டப்பட்டு படித்தால் மட்டுமே தேர்வுகளில் நல்ல மதிப்பெண்கள் பெற முடியும். நண்பர்களுடன் பழகுவதில் மிகவும் கவனம் தேவை.  சந்தேகங்களை அவ்வப்போது ஆசிரியர் களிடம் கேட்டுத் தெரிந்துகொள்வது நல்லது.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு சற்று சிரமம் தரும் மாதமாக இருக்கும். ஆனாலும், பெரிய அளவில் பாதிப்பு எதுவும் இருக்காது. அலுவலகத்துக்குச் செல்லும் பெண்களுக்கு அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட நாள்கள்: ஏப்: 15, 16, 19, 20, 21, 26, 27, 29, 30, மே: 6, 7, 9, 12, 13, 14
சந்திராஷ்டம நாள்கள்: மே 1, 2, 3
அதிர்ஷ்ட எண்கள்: 5,7

வழிபடவேண்டிய தெய்வம்: தட்சிணாமூர்த்தி, விநாயகர்
பரிகாரம்: விநாயகருக்கு வெள்ளிக்கிழமைகளில் தேங்காய் எண்ணெயில் தீபம் ஏற்றி, அறுகம் புல்லால் அர்ச்சனை செய்வது நல்லது. மேலும் வியாழக்கிழமைகளில் தட்சிணா மூர்த்திக்கு மஞ்சள் மலர் கொண்டு அர்ச்சித்து வழிபடுவதும் நன்மை தரும்.

 

கன்னி கன்னி:

8-ல் சூரியன்; 6, 7 -ல் சுக்கிரன்; 7, 8 -ல் புதன்; 9, 10 -ல் செவ்வாய்; 4-ல் குரு (அதிசாரம்), சனி, கேது; 10-ல் ராகு.

செவ்வாய், புதன் ஆகியோர் மட்டுமே ஓரளவு நன்மை தரும் நிலையில் இருக்கிறார்கள். புதிய முயற்சிகளில் சற்று கடின முயற்சியின் பேரில் வெற்றி கிடைக்கும். எதிரிகள் பணிந்து போவர். அவர்களால் மறைமுக ஆதாயமும் உண்டா கும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும், திடீர் செலவுகளுக்கும் வாய்ப்பு உண்டு. ஆனால், மாதப் பிற்பகுதியில் சகோதரர்களுடன் சிறுசிறு கருத்துவேறுபாடு ஏற்பட்டு சரியாகும். காரியங்கள் அனுகூலமாக முடியும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். குரு அனுகூலமாக இருப்பதால், திருமண முயற்சிகள் கை கூடும். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.  உறவினர்களாலும் நண்பர்களாலும் ஆதாயம் உண்டாகும். அவர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகளும் ஏற்படக்கூடும். வாகனத்தில் செல்லும்போது எச்சரிக்கையாக இருக்கவும். அரசாங்க வகையில் எதிர்பார்த்த காரியம் முடிவதில் சில தடைகள் ஏற்படும். தந்தையின் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படக்கூடும். தந்தைவழி உறவினர் களால் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும். கணவன் - மனைவிக்கிடையே சிறுசிறு கருத்து வேறு பாடுகள் ஏற்பட்டு நீங்கும். பிள்ளைகள் வழியில் மகிழ்ச்சி தரும் செய்தி ஒன்று கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு. மாத முற்பகுதியில் எதிரிகளால் மறைமுகத் தொல்லைகள் ஏற்படக்கூடும் என்பதால் கவனம் தேவை.

உத்தியோகத்தில் வேலைச் சுமை அதிகரிக்கும்.  சக ஊழியர்களின் ஒத்துழைப்பால் மிகச் சிறப்பாகச் செய்து, அதிகாரிகளின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். சிலருக்கு தடைப்பட்ட பதவி உயர்வு, ஊதிய உயர்வு போன்ற பலன்கள் கிடைக்கும். 
தொழில், வியாபாரம் சிறப்பாக நடைபெறும். எதிர்பார்த்ததை விடவும் பணவரவு கூடுதலாகக் கிடைக்கும். ஆனால், அரசாங்க வகையில் எதிர்பார்க்கும் லைசென்ஸ் போன்ற விஷயங்கள் கிடைப்பதில் தடை, தாமதம் ஏற்படக்கூடும்.

ஜோதிட மாமணி கிருஷ்ண துளசி கலைத்துறையைச் சேர்ந்தவர்களுக்கு மாத முற்பகுதியில் எதிர்பார்த்த வாய்ப்புகள் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டாலும், மாதப் பிற்பகுதியில் வாய்ப்புகள் கிடைப்பதில் சிரமம் இருக்காது. சக கலைஞர்களால் அனுகூலமான பலன்கள் ஏற்படக்கூடும். 
மாணவர்களுக்குப் படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். தேர்வுகளில் மிகச் சிறப்பான மதிப்பெண்கள் பெற்று, ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். ஆனால், சக மாணவர்களிடம் கவனமாகப் பழகவும்.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு குடும்பச் சூழ்நிலை மகிழ்ச்சி தருவதாக இருக்கும்.  அலுவலகத்துக்குச் செல்லும் பெண்களுக்கு அலுவலகச் சூழ்நிலை உற்சாகம் தருவதாக இருக்கும். எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட நாள்கள்: ஏப்: 14, 17, 18, 22, 23, 29, 30, மே: 1, 2, 3, 9, 10, 11
சந்திராஷ்டம நாள்: மே: 4, 5
அதிர்ஷ்ட எண்கள்: 4,6

வழிபடவேண்டிய தெய்வம்: முருகப் பெருமான், பைரவர்
பரிகாரம்: அஷ்டமி தினத்தில் பைரவருக்கு அர்ச்சனை செய்து வழிபடுவதும், செவ்வாய்க் கிழமைகளில் முருகப் பெருமானுக்கு அர்ச்சனை செய்து வழிபடுவதும் நன்மை தரும்.

துலாம் முதல் மீனம் வரை 6 ராசிகளுக்கான ராசிபலன்களைப் படிக்க இங்கு க்ளிக் செய்யவும் 

 


டிரெண்டிங் @ விகடன்