``சித்திரை பிரம்மோற்சவம்" - திருத்தணி முருகன் கோயிலில் 16 -ம் தேதி தேரோட்டம்! | chithirai brahmotsavam at tiruthani

வெளியிடப்பட்ட நேரம்: 07:25 (13/04/2019)

கடைசி தொடர்பு:07:25 (13/04/2019)

``சித்திரை பிரம்மோற்சவம்" - திருத்தணி முருகன் கோயிலில் 16 -ம் தேதி தேரோட்டம்!

திருத்தணி முருகன் கோயிலில் சித்திரை பிரம்மோற்சவம் சிறப்பாக நடைபெற்றுவருகிறது. இதன் ஒரு பகுதியாக வரும் 16 -ம் தேதி தேரோட்டம் நடைபெற உள்ளது.

தேரோட்டம்

முருகனின் அறுபடைவீடுகளுள் ஒன்று திருத்தணி. தேவர்களது துயர் தீர்க்க சூரபதுமனுடன் போர் முடித்துப் பின் வள்ளிக் குறத்தியின் உறவினர்களோடு செய்த சிறு திருவிளையாடல்  நிகழ்த்தி, முருகப்பெருமான் தன் சீற்றம் தணிந்து அமர்ந்த தலம் ஆதலால், இது தணிகை எனும் பெயர் பெற்றது. 

தணிகை மலையை நினைத்தாலோ, அல்லது அதன் திசை நோக்கித் தொழுதாலோ பக்தர்கள் குறை தீரும் என்பது ஐதீகம். இந்தத் தலத்தில் முருகக் கடவுளை  மும்மூர்த்திகளும்,  நந்திதேவர்,  நாகர்குல தெய்வமான வாசுகி மற்றும் அகத்திய முனிவர் ஆகியோர் வழிபட்டனர். இத்தகைய சிறப்புகள் மிக்க இந்தத் தலத்தில் சித்திரை பிரம்மோற்சவம், கடந்த புதன்கிழமை  (10.4.19) அன்று சீரும் சிறப்புமாய் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதை ஒட்டி தினமும் மூலவருக்குச் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று வருகின்றன. 

தேரோட்டம்

இந்த விழாவின் ஒரு பகுதியாக வரும் 16.4.19 அன்று தேரோட்டம் நடைபெற இருக்கிறது. மறுநாள் 17.4.19 அன்று தெய்வானை திருக்கல்யாணம் நடைபெற உள்ளது. இந்த நிகழ்வுகளில் திரளான பக்தர்கள் கலந்துகொள்வர் என்பதால் கோயில் நிர்வாகம் விரிவான ஏற்பாடுகளைச் செய்துள்ளது.
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க