12 லக்னக்காரர்களில் யாருக்கெல்லாம் மாளவ்ய யோகம் கிடைக்கும்? #Astrology | Who can get the Malavya Yogam and its benefits?

வெளியிடப்பட்ட நேரம்: 10:16 (14/04/2019)

கடைசி தொடர்பு:18:52 (17/04/2019)

12 லக்னக்காரர்களில் யாருக்கெல்லாம் மாளவ்ய யோகம் கிடைக்கும்? #Astrology

12 லக்னக்காரர்களில் யாருக்கெல்லாம்  மாளவ்ய யோகம்  கிடைக்கும்? #Astrology

சுக்கிரன் சுபகிரகம். சகலவிதமான சுகபோகங்களுக்கும் அதிபதி. ஒருவருக்கு இளமையிலேயே சுக்கிரதசை வந்துவிட்டால், அவர் வாழ்க்கையில் அனைத்து வசதி வாய்ப்புகளுடன் மகிழ்ச்சியாக வாழ்வார். சுக்கிரனால் ஏற்படக்கூடிய யோகம் மாளவ்ய யோகம். ஒருவருக்கு ஜாதகத்தில் சுக்கிரன் எந்த இடத்தில் அமையப் பெற்றால் அவருக்கு மாளவ்ய யோகம் ஏற்படும் என்பது குறித்து விளக்குகிறார் 'ஜோதிடக்கலை அரசு' ஆதித்ய குருஜி.

யோகம் வழங்கும் சுக்கிரன்

''ஜாதகத்தில் 1, 4, 7 மற்றும் 10 ஆகிய இடங்களில் சுக்கிரன் இருந்தால், அவர்களுக்கு மாளவ்ய யோகம் சிறப்பாக வேலை செய்யும். ஜாதகர் ளௌகீக வாழ்வின் சகல சுகங்களையும் பெற்று வாழ்வார். ஜாதகர் இருக்குமிடம் எப்போதும் கலகலப்பாக இருக்கும். அவருடன் எப்போதும் நண்பர்கள் பலர் இருந்துகொண்டே இருப்பார்கள்'' என்றவர் தொடர்ந்து மாளவ்ய யோகத்தின் தனிச் சிறப்புகள் குறித்து விளக்கினார். 

ஆதித்ய குருஜி.பஞ்ச மகா புருஷயோகங்களில், சுக்கிரனால் உண்டாகும் யோகத்தை மாளவ்ய யோகம் என்றழைக்கிறார்கள். பொதுவாக, எந்த ஒரு யோகமாக இருந்தாலும், எல்லா லக்கினக்காரர்களுக்கும் கிடைக்காது. ஆனால், ஜோதிட விதிவிலக்காக சுக்கிரனால் கிடைக்கும் 'மாளவ்ய யோகம்' மட்டும் பன்னிரண்டு லக்கினக்காரர் களுக்கும் கிடைக்கும்.

பஞ்சபூத கிரகங்களான குரு, சுக்கிரன், புதன், செவ்வாய், சனி ஆகியோரில் சுக்கிரன் ஒருவர் மட்டுமே எல்லா லக்கினங்களுக்கும் கேந்திரம் எனும் 1, 4, 7, 10 ஆகிய இடங்களில் ஆட்சியோ, உச்சமோ பெறுவார். குரு உட்பட மற்ற நான்கு கிரகங்களும்... ஏன்? சூரிய, சந்திரர்கள் உள்ளிட்ட ஆறு கிரகங்களும் சில லக்கினங்களுக்கு மட்டுமே கேந்திரங்களில் வலுப்பெறுவார்கள். எல்லா லக்கினங்களுக்கும் இவர்கள் கேந்திரஸ்தானங்களில் வலிமையடைவதில்லை. நவகிரகங்களில் குருவுக்கு அடுத்த இடத்தில் உள்ள இயற்கைச் சுபரான சுக்கிரன் சுப பலம் பெற்றவர்.   

இறைவன் எல்லா உயிர்களையும் படைத்துக் காத்து வந்தாலும், ஒவ்வோர் உயிருக்கும் இயற்கையுடன் இணைந்த ஒவ்வொருவிதமான வாழ்க்கை முறையை வகுத்துத் தந்திருக்கிறார். குறிப்பாக, மனித இனத்தைப் பொறுத்தவரை படித்தவர், படிக்காதவர், ஏழை, பணக்காரர், நல்லவர், தீயவர் எனப் பலவிதமாக இருந்தாலும், அவரவர் அனுபவிக்கத்தக்க இன்பத்தையும் துன்பத்தையும், அவரவரின் கர்ம பலனுக்கேற்ப வழங்குகிறார். 

கிரக சஞ்சாரம்

எல்லாவிதமான சொத்துகள், கை நிறைய பணம், மாளிகைபோல் வீடு என இருந்தாலும், அவற்றை ஒரு ஜாதகர் அனுபவிக்க வேண்டுமென்றால் அவர்களுக்கு சுக்கிரன் வழங்கும் மாளவ்ய யோகம் இருந்தால்தான் முடியும். மேலும் களத்திரக்காரகனாகவும் சுக்கிரன் இருப்பதால் தாம்பத்ய சுகம், வம்சவிருத்தி ஆகியவற்றுக்கும் இவரே காரணகர்த்தாவாகிறார். 

இந்த யோகம் கிடைக்கப்பெற்றவர்கள் தோற்றப்பொலிவு, திடசிந்தனை மற்றும் வைராக்கியத்துடன் செயல்பட்டு எடுத்த காரியங்களில் வெற்றிபெறுவார்கள். அப்படியே தோல்வி கிடைத்தாலும், அதையும் மகிழ்ச்சியாகவும் எளிதாகவும் எடுத்துக்கொள்வார்கள்.

நவகிரகங்கள்

ஜாதகத்தில் 4-ம் இடத்தில் திக்பலம் பெற்று நல்லவிதமாக அமைந்திருந்தால் அங்கிருந்து ஜீவன ஸ்தானத்தைப் பார்ப்பார் என்பதால், தன் காரகத்துவங்களில் தொழில் அமைப்புகளைத் தருவார். இத்தகைய அமைப்புள்ளவர்கள், கலைத்துறை, இசை, நடனம், அழகுசாதனப் பொருள்கள் விற்பனை, பத்திரிகைத்துறை, தொலைக்காட்சி, ஹோட்டல் தொழில், ஆடம்பரம், டெக்ஸ்டைல்ஸ், கவிதை, இலக்கியம், சினிமா போன்ற தொழில்கள் நல்ல லாபம் தரும். இந்த யோகம் அமையப்பெற்றவர்கள் மேடைப் பேச்சாளராக அரசியல்வாதியாக  மற்றவர்களை ஈர்க்கும் வசீகர சக்திமிக்கவர்களாக இருப்பார்கள்.  

யோகம்

மாளவ்ய யோகம் உள்ளவர்களுக்கு சுக்கிர தசை இளம் வயதில் வருவதைவிட 30 வயதுக்கு மேல் வருவது மிகவும் சிறப்பு. அதுவும் நவகிரக தசைகளில் சுக்கிர தசையே அதிக காலம் கொண்டது. 20 வருடங்கள் இந்த தசை நடக்கும் நேரத்தில் மாளவ்ய யோகமும் இருந்தால் ஜாதாகர் பார் போற்றும் மனிதராக வலம் வருவதுடன் எல்லா வளங்களையும் பெற்று வாழ்வாங்கு வாழ்வார்.

ஒருவரின் ஜாதகத்தில் சுக்கிரன் கேந்திர ஸ்தானங்களில் இருந்தாலும்கூட, அவருடன் ராகு, கேது, சூரியன், சனி, செவ்வாய் ஆகிய கிரகங்கள் ஒன்றின் சேர்க்கையோ அல்லது தொடர்போ ஏற்பட்டி ருந்தால், அவருக்கு சுக்கிரனால் ஏற்படக்கூடிய மாளவ்ய யோகத்தின் பலன்கள் கிடைக்காது.

வீடியோ: கிராபியென் ப்ளாக்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்