இந்த வார ராசிபலன் ஏப்ரல் 15 முதல் 21 வரை! | weekly horoscope from april 15th to 21st

வெளியிடப்பட்ட நேரம்: 09:18 (15/04/2019)

கடைசி தொடர்பு:11:12 (15/04/2019)

இந்த வார ராசிபலன் ஏப்ரல் 15 முதல் 21 வரை!

கடகராசி அன்பர்களே! பொருளாதார நிலை திருப்திகரமாக இருக்கும். ஆனாலும் எதிர்பாராத செலவுகளும் ஏற்படும். பிள்ளைகள் வகையில் மகிழ்ச்சி தரும் செய்தி கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு. பொருளாதார நிலை திருப்திகரமாக இருக்கும். ஆனாலும் எதிர்பாராத செலவுகளும் ஏற்படும். பிள்ளைகள் வகையில் மகிழ்ச்சி தரும் செய்தி கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு

இந்த வார ராசிபலன்  ஏப்ரல் 15 முதல் 21 வரை!

இந்த வார ராசிபலன்  ஏப்ரல் 15 முதல் 21 வரை
'ஜோதிட மாமணி' கிருஷ்ணதுளசி

மேஷ ராசி மேஷராசி அன்பர்களே!

பணவரவு திருப்தி தரும். உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சியும் உற்சாகமும் நிறைந்திருக்கும். பள்ளி, கல்லூரிக் கால நண்பர்களைச் சந்தித்து மகிழும் வாய்ப்பு ஏற்படும். முக்கிய முடிவுகளைக் குடும்பப் பெரியவர்களின் ஆலோசனையுடன் எடுப்பது நல்லது. தந்தைவழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். பிள்ளைகளால் உறவினர்களிடையே கௌரவம் உயரும். வாழ்க்கைத்துணை அனுசரணையாக இருப்பார்.

அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். என்றாலும் சக ஊழியர்கள் உங்கள் பணிகளில் உதவி செய்வார்கள். அதிகாரிகளின் ஆலோசனை பயனுள்ளதாக இருக்கும். எதிர்பார்த்த சலுகை கிடைக்கும்.

வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் அதிகரிக்கும். பணியாளர்களின் ஒத்துழைப்பு நன்றாக இருக்கும். பங்குதாரர்களால் ஆதாயம் உண்டாகும். புதிய வாடிக்கையாளர்களின் அறிமுகம் கிடைக்கும்.

கலைத்துறையினருக்கு எதிர்பார்த்தபடி வாய்ப்புகள் கிடைக்கும். வருமானமும் அதிகரிக்கும். சக கலைஞர்கள் உதவிகரமாக இருப்பார்கள். 
மாணவர்கள் விரும்பிய கல்வி நிறுவனத்தில் விரும்பிய பாடப்பிரிவில் சேருவீர்கள். மேற்படிப்புக்கான வங்கிக் கடனுதவி கிடைக்கும்.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு மகிழ்ச்சியும் நிம்மதியும் தரும் வாரம் இது. வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு அலுவலகத்தில் எதிர்பாராத சலுகைகள் கிடைக்கும். 

அதிர்ஷ்டம் தரும் நாள்கள்: 18, 19, 20, 21
அதிர்ஷ்டம் தரும் எண்கள்: 3, 5

வழிபடவேண்டிய தெய்வம்: தட்சிணாமூர்த்தி
பரிகாரம்:தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபமேற்றி, கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.

வேயுறு தோளிபங்கன் விடமுண்ட கண்டன்  மிகநல்ல வீணை தடவி    
மாசறு திங்கள் கங்கை முடிமேலணிந்தென் உளமே புகுந்த அதனால்    
ஞாயிறு திங்கள்செவ்வாய் புதன் வியாழம் வெள்ளி சனிபாம்பி ரண்டு முடனே    
ஆசறு நல்லநல்ல அவைநல்ல நல்ல அடியாரவர்க்கு மிகவே


ரிஷபம் ரிஷபராசி நேயர்களே!

குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலையே காணப்படும். பணவசதிக்குக் குறைவில்லை. ஆனால், அதிகரிக்கும் செலவுகளால் சேமிக்க முடியாது. பிள்ளைகள் பிடிவாதம் பிடித்தாலும், விட்டுப் பிடிப்பது நல்லது. உறவினர்கள் வருகை ஆதாயம் தருவதாக இருக்கும். திருமண முயற்சிகள் அனுகூலமாக முடியும். சகோதரர்களால் சில சங்கடங்கள் ஏற்பட்டாலும் அதனால் பாதிப்பு எதுவும் இருக்காது. தந்தையின் உடல்நலனில் கவனம் தேவை.

அலுவலகத்தில் எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். வேலை தேடிக்கொண்டிருப்பவர்களுக்கு நல்ல நிறுவனத்தில் வேலை கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு. பணியிடத்தில் புதிய தொழில்நுட்பங் களைக் கற்றுக்கொள்ளும் வாய்ப்பு சிலருக்கு ஏற்படும்.

வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். லாபம் அதிகரிக்கும். கொடுக்கல் வாங்கலில் சற்று கவனமாக இருப்பது அவசியம். பணியாளர்கள் முரண்டு பிடிப்பார்கள். தட்டிக்கொடுத்து வேலை வாங்குவது நல்லது.

கலைத்துறையினருக்கு வாய்ப்புகள் கிடைப்பதில் பிரச்னைகள் எதுவும் இல்லை. வருமானமும் திருப்தி தரும். மூத்த கலைஞர்களின் ஆலோசனை மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

மாணவர்கள் விரும்பிய கல்லூரியில் சேருவதற்கு சிலரின் சிபாரிசு தேவைப்படும். விடுமுறைக் காலத்தை புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்வதில் ஆர்வம் காட்டுவர்.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு செலவுகள் அதிகரிப்பதால் சற்று சிரமப்பட நேரிடும். ஆனால், உறவினர்கள் வருகையால் ஆதாயம் ஏற்படும். கணவரின் அன்பும் ஆதரவும் மகிழ்ச்சி தரும். அலுவலகத்தில் பணிச்சுமை குறையும். சலுகைகளும் கிடைக்கும்.

அதிர்ஷ்டம் தரும் நாள்கள்: 19, 20, 21
அதிர்ஷ்டம் தரும் எண்கள்: 5, 8

வழிபடவேண்டிய தெய்வம்: விநாயகர்
பரிகாரம்:தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபமேற்றி, கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.

அல்லல்போம் வல்வினைபோம் அன்னை வயிற்றில்
பிறந்த தொல்லைபோம் போகாத் துயரம்போம்
நல்ல குணமதிகமாம் அருணைக் கோபுரத்தில்
மேவும் கணபதியைக் கைதொழுதக்கால்

 

மிதுனம் மிதுனராசி அன்பர்களே!

உடல் ஆரோக்கியம் மேம்படும். எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். நீண்டநாளாகச் செல்ல நினைத்த புனிதத் தலங்களுக்குச் சென்று வருவீர்கள். சிலருக்குக் குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும். வாழ்க்கைத்துணைவழி உறவினர்களால் ஆதாயம் கிடைக்கும்.

அலுவலகத்தில் உங்கள் திறமைக்கு உரிய அங்கீகாரமும் அதிகாரிகளின் பாராட்டும் கிடைக்கும். பதவி உயர்வோ அல்லது ஊதிய உயர்வோ கிடைக்கக்கூடும். சக ஊழியர்களிடையே செல்வாக்கு அதிகரிக்கும்.

வியாபாரத்தில் கடையை விரிவுபடுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொள்வது சாதகமாக முடியும். சக வியாபாரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும். பணியாளர்கள் நல்லபடி ஒத்துழைப்புத் தருவார்கள்.

கலைத்துறையினருக்கு எதிர்பார்த்தபடி வாய்ப்புகள் கிடைத்தாலும் பயன்படுத்திக்கொள்வதில் சில தடைகள் ஏற்படக்கூடும். ஆனால், வருமானத்துக்குக் குறைவிருக்காது. 

மாணவர்களுக்குத் தாங்கள் எழுதிய தேர்வுகளில் நல்ல மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெறமுடியுமோ என்ற அச்சத்தின் காரணமாக மனதில் கலக்கம் ஏற்படக்கூடும். பெற்றோருடன் மனம் விட்டுப் பேசுவதன் மூலம் தெளிவு பெறலாம்.

குடும்ப நிர்வாகத்தில் இருக்கும் பெண்களுக்கு அனுகூலமான வாரம். குடும்பச் செலவுகளுக்குத் தேவையான பணம் கிடைக்கும். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு அலுவலகச் சூழ்நிலை சாதகமாக இருக்கும்.

அதிர்ஷ்டம் தரும் நாள்கள்: 15, 16
அதிர்ஷ்டம் தரும் எண்கள்: 3, 7

வழிபடவேண்டிய தெய்வம்: துர்கை
பரிகாரம்:தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபமேற்றி, கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.

பைரவி, பஞ்சமி, பாசாங்குசை, பஞ்சபாணி, வஞ்சர்
உயிரவி உண்ணும் உயர் சண்டி, காளி, ஒளிரும் கலா
வைரவி, மண்டலினி, மாலினி, சூலி, வராகி என்றே
செயிர் ஆவி நான்மறை சேர் திரு நாமங்கள் செப்புவரே!


கடகம்கடகராசி அன்பர்களே!

பொருளாதார நிலை திருப்திகரமாக இருக்கும். ஆனாலும் எதிர்பாராத செலவுகளும் ஏற்படும். பிள்ளைகள் வகையில் மகிழ்ச்சி தரும் செய்தி கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு. சிலருக்கு சிறிய அளவில் ஆரோக்கியம் பாதிக்கக்கூடும்.  கணவன் - மனைவிக்கிடையே இருந்து வந்த கருத்துவேறுபாடு நீங்கி அந்நியோன்யம் அதிகரிக்கும். தந்தைவழி உறவினர்களால் சில காரியங்கள் அனுகூலமாக முடியும்.

அலுவலகத்தில் நீங்கள் எவ்வளவுதான் உழைத்தாலும் அதற்கேற்ற அங்கீகாரம் கிடைக்காது. சக பணியாளர்கள் அனுசரணையாக இருப்பது ஆறுதல் தரும். சலுகைகள் இழுபறிக்குப் பிறகு கிடைக்கும்.

வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் திருப்தி தருவதாக இருக்கும். பங்குதாரர்கள் உங்கள் முயற்சிகளுக்கு உதவி செய்வார்கள். பணியாளர்களின் ஒத்துழைப்பு சுமாராகத்தான் இருக்கும்.

கலைத்துறையினருக்கு வாய்ப்புகள் கிடைப்பது தள்ளிப்போகும். பண வசதியும் சொல்லிக் கொள்ளும்படியாக இல்லை. ஆனால், சக கலைஞர்களால் ஆதாயம் உண்டு.

மாணவர்களுக்கு மேற்படிப்பில் சேருவதற்குச் சிலரின் சிபாரிசு தேவைப்படும். படிப்பதற்குத் தேவையான பண உதவி கிடைப்பதில் சற்று இழுபறியான நிலை காணப்பட்டாலும் சாதகமாக முடியும்.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு குடும்பத்தில் செலவுகள் அதிகரிக்கும் என்பதால் கையிருப்பு கரையும். உறவினர்கள் வருகை ஆதாயம் தருவதாக இருக்கும். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு அலுவலகச் சூழ்நிலை மகிழ்ச்சி தருவதாக அமையும்.

அதிர்ஷ்டம் தரும் நாள்கள்: 16, 18, 19, 20
அதிர்ஷ்டம் தரும் எண்கள்: 5, 7

வழிபட வேண்டிய தெய்வம்: ரங்கநாத பெருமான்
பரிகாரம்: தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபமேற்றி, கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.

பச்சை மா மலை போல் மேனி பவள வாய் கமலச் செங்கண்
அச்சுதா அமரர் ஏறே ஆயர் தம் கொழுந்தே என்னும்
இச்சுவை தவிர யான் போய் இந்திர லோகம் ஆளும்
அச்சுவை பெறினும் வேண்டேன் அரங்க மா நகர் உளானே.


சிம்மம் சிம்மராசி அன்பர்களே!

குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். எதிர்பாராத செலவுகள் ஏற்பட்டாலும், தேவையான பணம் இருப்பதால் சமாளித்துவிடுவீர்கள். வாரப் பிற்பகுதியில் நீண்டநாளாகச் சந்திக்காமல் இருந்த நண்பர்களைச் சந்தித்து மகிழும் வாய்ப்பு ஏற்படும். திருமணத்துக்கான முயற்சிகளை மேற்கொள்ளலாம். நல்ல இடத்தில் வரன் அமைவதற்கு வாய்ப்பு உள்ளது. தெய்வப் பணிகளில் ஈடுபடும் வாய்ப்பு ஏற்படும்.
அலுவலகத்தில் வழக்கமான நிலையே காணப்படும். எதிர்பார்த்த சலுகைகள் கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு. அதிகாரிகளிடம் பாராட்டு பெறும் வாய்ப்பு ஏற்படும். சக ஊழியர்களால் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும்.

வியாபாரத்தில் விற்பனையை அதிகரிக்கக் கூடுதலாக உழைக்க வேண்டியிருக்கும். பணியாளர்க ளால் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும். சக வியாபாரிகளால் மறைமுக இடையூறுகள் ஏற்பட்டா லும், அதனால் பாதிப்பு எதுவும் இருக்காது.
கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். ஆனால், வருமானம் ஓரளவுக்குதான் இருக்கும். சக கலைஞர்களிடம் அனுசரணையாக நடந்துகொள்ளவும். 

மாணவர்களுக்கு மேற்கொண்டு படிப்பதில் ஆர்வம் அவ்வளவாக இருக்காது. பெற்றோரின் ஆலோசனை கேட்டு அதன்படி நடப்பது நல்லது.
குடும்ப நிர்வாகத்தில் இருக்கும் பெண்களுக்கு மகிழ்ச்சி தரும் வாரமாக இருக்கும். அலுவலகம் செல்லும் பெண்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கும். ஆனால், எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும்.

அதிர்ஷ்டம் தரும் நாள்கள்: 15, 16, 19, 20
அதிர்ஷ்டம் தரும் எண்கள்:1, 9

வழிபடவேண்டிய தெய்வம்: ஆஞ்சநேயர்
பரிகாரம்:தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபமேற்றி, கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.

அஞ்சனை மைந்தா போற்றி அஞ்சினை வென்றாய் போற்றி
வெஞ்சினைக்கதிர்பின் சென்று பிழுமறையுணர்ந்தாய் போற்றி
மஞ்சன மேனிராமன் மலர்ப்பதம் மறவாய் போற்றி
எஞ்சலில் ஊழியெல்லாம் இன்றென விருப்பாய் போற்றி


கன்னி கன்னிராசி அன்பர்களே!

வருமானத்துக்குக் குறைவிருக்காது. உறவினர்கள் வருகையால் வீட்டில் சுபநிகழ்ச்சிகள் ஏற்பா டாகும். கணவன் - மனைவிக்கிடையே இருந்து வந்த கருத்துவேறுபாடு மறைந்து, அந்நியோன்யம் அதிகரிக்கும். பிள்ளைகள் வழியில் பெருமைப்படும் செய்தி கிடைக்கும். சகோதரர்களால் அனுகூலம் உண்டாகும். வாரத் தொடக்கத்தில் புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும்.
வேலைக்கு விண்ணப்பித்து இருந்தவர்களுக்கு வேலை கிடைக்கும். பணியின் காரணமாக சிலர் வெளியூர்ப் பயணம் மேற்கொள்ள நேரிடும். சலுகைகள் இழுபறிக்குப் பிறகு கிடைக்கும்.

வியாபாரத்தை விரிவுபடுத்தவும், சரக்குகளைக் கொள்முதல் செய்யவும் சிலருக்கு வெளிமாநிலப் பயணம் மேற்கொள்ளவேண்டி வரும். எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.

கலைத்துறையினருக்கு எதிர்பார்த்தபடி  வாய்ப்புகள் கிடைப்பதில் பிரச்னை எதுவும் இல்லை. சக கலைஞர்களை அனுசரித்துச் செல்லவும்.
மாணவர்களுக்கு நினைவாற்றல் அதிகரிக்கும். ஆசிரியர் பாடம் நடத்தும்போது கூர்ந்து கவனிப்பதில் ஆர்வம் ஏற்படும். ஆசிரியர்களிடம் பாராட்டு பெறும் வாய்ப்பு ஏற்படும். 

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்குத் தேவையான பணம் இருப்பதால் சிரமம் எதுவும் இருக்காது. வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு அலுவலகத்தில் பணிச்சுமை குறையும். எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.

அதிர்ஷ்டம் தரும் நாள்கள்: 17, 18
அதிர்ஷ்டம் தரும் எண்கள்:6, 9

வழிபடவேண்டிய தெய்வம்: முருகப்பெருமான்.
பரிகாரம்:தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபமேற்றி, கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.

அஞ்சுமுகம் தோன்றின் ஆறுமுகம் தோன்றும்
வெஞ்சமரில் 'அஞ்சல்!' எனவேல் தோன்றும் - நெஞ்சில்
 ஒருகால் நினைக்கின் இருகாலும் தோன்றும்
 'முருகா!' என்று ஓதுவார் முன்

 

துலாம் துலாராசி அன்பர்களே!

புதிய முயற்சிகளை எதையும் வார ஆரம்பத்தில் தொடங்கி விடுவது நல்லது. நீண்டநாளாக நினைத்த சுபநிகழ்ச்சி நடைபெறுவதற்கான வாய்ப்பு உண்டு. திருமண முயற்சிகள் சாதகமாக முடியும். வாரப் பிற்பகுதியில் உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் சிற்சில பிரச்னைகள் ஏற்பட்டாலும் பாதிப்பு இருக்காது. வாழ்க்கைத்துணையுடன் அனுசரித்துச் செல்வது நல்லது. வேலைக்கு விண்ணப்பித்து இருந்தவர்களுக்கு வேலை கிடைக்கும். ஏற்கெனவே வேலையில் இருப்பவர்களுக்கு நிர்வாகத்தினரின் ஆதரவும் சலுகைகளும் கிடைக்கும். சிலருக்கு இடமாற்றம் ஏற்படக்கூடும். 

புதிதாக வியாபாரம் தொடங்க விரும்புபவர்கள் இந்த வாரம் தொடங்கலாம். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். பணியாளர்கள் விற்பனையை அதிகரிக்கப் பாடுபடுவார்கள்.

சக கலைஞர்களுடன் இணக்கமாகப் பழகுவது நல்லது.வாய்ப்புகளும் வருமானமும் எதிர்பார்த்தபடியே இருக்கும். சிலருக்கு வெளியூர்ப் பயணம் மேற்கொள்ள நேரிடும்.

மாணவர்கள் விரும்பிய மேற்படிப்பில் விரும்பிய கல்வி நிறுவனத்தில் சேர மேற்கொள்ளும் முயற்சி சாதகமாக முடியும். சிலருக்கு விடுமுறைக் காலப் பயிற்சி வகுப்புகளில் கலந்துகொள்ளும் வாய்ப்பு ஏற்படும்.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு நிம்மதியான வாரம். வேலைக்குச் செல்லும் பெண்கள் அலுவலகத்தில் பணிகளைப் பொறுப்பாகச் செய்வது நல்லது.

அதிர்ஷ்டம் தரும் நாள்கள்: 15, 16, 19, 20, 21
அதிர்ஷ்டம் தரும் எண்கள்: 3, 5

வழிபடவேண்டிய தெய்வம்: ஶ்ரீமஹாவிஷ்ணு
பரிகாரம்:தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபமேற்றி, கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.

செடியாய வல்வினைகள் தீர்க்கும் திருமாலே
நெடியானே வேங்கடவா நின்கோயி லின்வாசல்
அடியாரும் வானவரு மரம்பையரும் கிடந்தியங்கும்
படியாய்க் கிடந்துன் பவளவாய் காண்பேனே

 

விருச்சிகம் விருச்சிகராசி அன்பர்களே!

குடும்பத்தில் உற்சாகமும் மகிழ்ச்சியும் நிறைந்திருக்கும். பணவரவுக்குக் குறைவிருக்காது. கணவன்  - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். வாழ்க்கைத் துணைவழி உறவினர்களால் அனுகூலம் உண்டாகும். சகோதரர்கள் உதவி கேட்டு வருவார்கள். சிலருக்கு எதிர்பாராத பொருள்சேர்க்கைக்கு வாய்ப்பு உண்டாகும். பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும்.

அலுவலகத்தில் பதவி உயர்வு, ஊதிய உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்பு உள்ளது. சக ஊழியர்கள் அனுசரணையாக இருப்பார்கள். சிலருக்கு பணியிடத்தில்  மாற்றம் ஏற்படக்கூடும். 

வியாபாரத்தில் புதிய முயற்சிகள் எதுவும் இப்போது வேண்டாம். விற்பனையும் லாபமும் வழக்கம்போலவே காணப்படும். பணியாளர்களின் ஒத்துழைப்பு நன்றாக இருக்கும்.

கலைத்துறையினருக்கு வாய்ப்புகள் கிடைப்பதிலும், வருமானத்துக்கும் குறைவிருக்காது.
மாணவர்களுக்கு மேற்படிப்பில் ஆர்வம் குறைந்து காணப்பட வாய்ப்பு உண்டு. பெற்றோர், ஆசிரியர்களின் ஆலோசனை கேட்டுச் செயல்படுவது நல்லது.

குடும்ப நிர்வாகத்தை கவனித்து வரும் பெண்கள் குடும்ப நிர்வாகத்தில் பொறுமையைக் கடைப்பிடிப்பது அவசியம். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு சில சலுகைகள் கிடைக்கும்.

அதிர்ஷ்டம் தரும் நாள்கள்: 15, 16, 18
அதிர்ஷ்டம் தரும் எண்கள்: 2, 6

வழிபடவேண்டிய தெய்வம்: அம்பிகை
பரிகாரம்:தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபமேற்றி, கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.

வையம் துரகம் மதகரி மாமகுடம் சிவிகை
பெய்யும் கனகம் பெருவிலை ஆரம் பிறை முடித்த
ஐயன் திருமனையாள் அடித் தாமரைக்கு அன்பு முன்பு
செய்யும் தவமுடையார்க்கு உளவாகிய சின்னங்களே

ராசிபலன்

 

தனுசுதனுசுராசி அன்பர்களே!

பணவரவு மகிழ்ச்சி தருவதாக இருக்கும். வீண் செலவுகளும் ஏற்படுவதற் கில்லை. நண்பர்களின் சந்திப்பு ஆதாயம் தருவதாக இருக்கும். தந்தைவழி உறவினர்களால் சில பிரச்னைகள் ஏற்படக் கூடும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. கணவன் - மனைவிக்கி டையே கருத்துவேறுபாடு ஏற்படக்கூடும் என்பதால் ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. பிள்ளைகளால் செலவுகள் ஏற்படும்.

அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரித்தாலும் அதற்கேற்ப சலுகைகளும் கிடைக்கும். அதிகாரி களின் ஆதரவு உற்சாகம் தரும். சக ஊழியர்களின் விஷயங்களில் தலையிடவேண்டாம்.

வியாபாரம் வழக்கம்போலவே காணப்படும். சக வியாபாரிகளுடன் ஏற்பட்ட பிரச்னைகள் நீங்கி, சுமுகமான உறவு ஏற்படும்.

கலைத்துறையினருக்கு வாய்ப்புகள் கடும் முயற்சியின் பேரிலேயே கிடைக்கும். கிடைக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்வதில் சில தடைகள் ஏற்படும்.

மாணவ மாணவியர் கடுமையாக உழைத்துப் படித்தால்தான் நல்ல மதிப்பெண்கள் பெற முடியும். ஆசிரியர்களின் ஆலோசனை பயனுள்ளதாக இருக்கும்.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு வாரப் பிற்பகுதியில் மனதில் சிறுசிறு சலனம் ஏற்படக் கூடும். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு சக பணியாளர்களால் நிம்மதியும் சந்தோஷமும் கிடைக்கும்.

அதிர்ஷ்டம் தரும் நாள்கள்: 17, 18, 19, 20
அதிர்ஷ்ட எண்கள்: 7,9

வழிபடவேண்டிய தெய்வம்: விநாயகர்
பரிகாரம்:தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபமேற்றி, கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.

விநாயகனே வெவ்வினையை வேரறுக்க வல்லான்
விநாயகனே வேட்கைதணி விப்பான் விநாயகனே
விண்ணிற்கும் மண்ணிற்கும் நாதனுமாம் தன்மையினால்
கண்ணிற் பணிமின் கனிந்து

 

மகரம் மகரராசி அன்பர்களே!

பணவரவு திருப்திகரமாக இருக்கும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உள்ளது. சகோதர வகையில் இருந்து வந்த கருத்துவேறுபாடுகளும் கசப்பு உணர்வுகளும் மாறி, சுமுகமான உறவு ஏற்படும். உங்கள் முயற்சிக்கு வாழ்க்கைத்துணையின் ஆதரவுடன் தேவை யான உதவியும் கிடைக்கும். பயணங்களால் ஆதாயம் உண்டாகும். தந்தையுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படக்கூடும். அவருடைய உடல்நலனிலும் கவனம் தேவை.

அலுவலகத்தில் கடுமையாக உழைத்தாலும் நல்ல பெயர் கிடைக்கும் என்று சொல்லமுடியாது. அலுவலகப்பணிகளில் கூடுதல் கவனம் தேவை. சிறிய தவறுகூட பாதிப்பை ஏற்படுத்தலாம்.

வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். பழைய கடன்கள் தீரும். பங்குதாரர்களால் தேவையான உதவி கிடைக்கும். பணியாளர்களால் செலவுகள் ஏற்படும்.

கலைத்துறையினருக்கு போதிய வருமானம் கிடைக்கும். புதிய வாய்ப்புகள் கிடைப்பதில் சில தடைகள் ஏற்படும்.

மாணவர்களுக்கு மேற்படிப்பு சம்பந்தமாக சிலரின் சிபாரிசை நாடவேண்டி வரும். படிப்புக்குத் தேவையான கடனுதவி கிடைப்பதில் தடையேதுமில்லை.

குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்களுக்கு செலவுகளைச் சமாளிப்பதில் சற்று சிரமம் ஏற்படும். வேலைக்குச் செல்லும் பெண்கள் வழக்கமான பணிகளில் மட்டுமே கவனம் செலுத்தவும்.

அதிர்ஷ்டம் தரும் நாள்கள்: 19, 20, 21
அதிர்ஷ்டம் தரும் எண்கள்: 3, 7
சந்திராஷ்டம நாள்கள்: 15, 16

வழிபடவேண்டிய தெய்வம்: அம்பிகை
பரிகாரம்:தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபமேற்றி, கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.

விழிக்கே அருள் உண்டு, அபிராம வல்லிக்கு; வேதம் சொன்ன
வழிக்கே வழிபட நெஞ்சு உண்டு எமக்கு, அவ்வழி கிடக்க,
பழிக்கே சுழன்று, வெம் பாவங்களே செய்து, பாழ் நரகக்
குழிக்கே அழுந்தும் கயவர் தம்மோடு, என்ன கூட்டு இனியே?

 

கும்பம்கும்பராசி அன்பர்களே!

பண வரவு போதுமான அளவு இருக்கும். செலவுகளும் அளவாகவே இருக்கும். கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். சிரமமான நேரங்களில் நண்பர்கள் உதவி செய்வார்கள். பழைய கடன்களைத் தந்து முடிப்பதற்கான வாய்ப்புகள் ஏற்படும். சுபநிகழ்ச்சிக்கான பேச்சுவார்த்தை சுமுகமாக முடியும். சிலருக்கு ஷேர் மூலம் எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு.

அலுவலகத்தில் வேலை செய்பவர்களுக்கு இடமாற்றம், பதவி மாற்றம் கிடைக்கும் என்றாலும் அதனால் நன்மையே நடக்கும். நிர்வாகத்தினரின் பாராட்டுகள் கிடைக்கும்.

வியாபாரத்தில் பங்குதாரர்களுடன் இருந்த கருத்து வேறுபாடு நீங்கி இணக்கமான சூழ்நிலை உண்டாகும். விற்பனையும் லாபமும் அதிகரிக்கும்.ஜோதிடமாமணி கிருஷ்ணதுளசி 

கலைத்துறையைச் சேர்ந்தவர்களுக்கு வாய்ப்புகள் வரும் என்றாலும் அதனால் போதிய வருமானம் வருவதற்கில்லை.
மாணவர்களுக்கு விரும்பிய கல்வி நிறுவனத்தில் விரும்பிய பாடப் பிரிவில் இடம் கிடைப்பதில் பிரச்னை எதுவும் இருக்காது.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு திருப்திகரமான வாரம். வேலைக்குச் சென்று வரும் பெண்களுக்கு சற்று சோர்வு ஏற்படக்கூடும்.

அதிர்ஷ்டம் தரும் நாள்கள்: 15, 16
அதிர்ஷ்டம் தரும் எண்கள்: 6, 9
சந்திராஷ்டம நாள்கள்: 17, 18

வழிபடவேண்டிய தெய்வம்: சிவபெருமான்
பரிகாரம்:தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபமேற்றி, கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.

வேற்றாகி விண்ணாகி நின்றாய் போற்றி மீளாமே ஆளென்னைக் கொண்டாய் போற்றி
ஊற்றாகி உள்ளே ஒளித்தாய் போற்றி ஓவாத சத்தத் தொலியே போற்றி
ஆற்றாகி யங்கே அமர்ந்தாய் போற்றி ஆறங்கம் நால்வேத மானாய் போற்றி
காற்றாகி யெங்குங் கலந்தாய் போற்றி கயிலை மலையானே போற்றி போற்றி


மீனம் மீனராசி அன்பர்களே!

குடும்பத்தில் கணவன் - மனைவிக்கிடையே சிறுசிறு மனஸ்தாபங்கள் ஏற்படக்கூடும். ஒருவரையொருவர் அனுசரித்து நடந்துகொள்வது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவைப்படும் வாரம். பணவரவைப் பொறுத்தவரை பிரச்னை எதுவும் இல்லை. உறவி னர்கள் வருகை மகிழ்ச்சி தருவதாக இருக்கும். பிள்ளைகளின் தேவைகளை நிறைவேற்றுவதில் சற்று அலைச்சல் ஏற்படும்.
வேலைக்குச் செல்லும் அன்பர்களுக்கு சக பணியாளர்களின் ஆதரவும் ஒத்துழைப்பும் கிடைக் கும். மேலதிகாரிகளை அணுகும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். 

வியாபாரத்தில் பங்குதாரர்களுடன் கருத்துவேறுபாடு ஏற்பட்டு பிரிவு உண்டாகும். பற்று வரவு விஷயத்தில் கவனமாக இருப்பது நல்லது.
கலைத்துறையைச் சேர்ந்தவர்களுக்கு வாய்ப்புகள் கிடைத்தாலும் அதைச் சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ளமுடியாதபடி சில தடைகள் உண்டாகும்.

மாணவர்கள் மேற்படிப்பில் சேருவதில் பிரச்னை எதுவும் இருக்காது. படிப்பதற்குத் தேவையான வங்கிக் கடனுதவி இழுபறிக்குப் பிறகு கிடைக்கும்.

குடும்பத்தை  நிர்வகிக்கும் பெண்கள் பொறுமையாக இருக்கவேண்டிய வாரம். வேலைக்குச் சென்று வரும் பெண்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கும். சலுகைகள் கிடைக்கும்.

அதிர்ஷ்டம் தரும் நாள்கள்: 15, 16, 18
அதிர்ஷ்டம் தரும் எண்கள்: 7, 9
சந்திராஷ்டம நாள்கள்: 19, 20, 21

வழிபடவேண்டிய தெய்வம்: முருகப்பெருமான்
பரிகாரம்:தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபமேற்றி, கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.

துதிப்போர்க்கு வல்வினைபோம், துன்பம் போம்,
நெஞ்சில் பதிப்போர்க்குச் செல்வம் பலித்துக் கதித்து ஓங்கும்,
நிஷ்டையுங் கைகூடும்,
நிமலர் அருள் கந்தர் சஷ்டி கவசந் தனை.
அமரர் இடர்தீர அமரம் புரிந்த
குமரன் அடி நெஞ்சே குறி.

 


டிரெண்டிங் @ விகடன்