புதன் கிரகத்தால் ஏற்படும் பத்ரயோகம் யாருக்கெல்லாம் கிடைக்கும்? | Who can get the benefits of Pathra Yogam, which is given by the planet Mercury?

வெளியிடப்பட்ட நேரம்: 09:27 (21/04/2019)

கடைசி தொடர்பு:15:55 (23/04/2019)

புதன் கிரகத்தால் ஏற்படும் பத்ரயோகம் யாருக்கெல்லாம் கிடைக்கும்?

பஞ்ச மகா புருஷயோகங்களில் புதன் கிரகம் வழங்கும் பத்ரயோகம் பற்றியும், ஜாதகருக்கு அதனால் ஏற்படக்கூடிய பலன்கள் பற்றியும் கூறுகிறார் 'ஜோதிடக்கலை அரசு' ஆதித்ய குருஜி. 

புதன் கிரகத்தால் ஏற்படும் பத்ரயோகம் யாருக்கெல்லாம் கிடைக்கும்?

நவகிரகங்களில் புதன் வித்யைக்கு அதிபதி. சகல வித்யைகளிலும் தேர்ச்சி பெறவும், எத்தகைய இக்கட்டான சூழ்நிலையிலும், தன் சொந்த அறிவின் மூலம் பிரச்னைகளைக் கடந்து, முன்னேறவும் வேண்டும் என்றால், அவருடைய ஜாதகத்தில் புதன் வலுவாக இருக்கவேண்டும்.

பஞ்ச மகா புருஷ யோகங்களில் புதனால் ஒருவருக்கு ஏற்படும் யோகத்தை, 'பத்ரயோகம்' என்கிறது ஜோதிட சாஸ்திரம். புதனால் ஏற்படக்கூடிய பத்ர யோகம் பற்றியும், ஜாதகருக்கு அதனால் ஏற்படக்கூடிய பலன்கள் பற்றியும் கூறுகிறார் 'ஜோதிடக்கலை அரசு' ஆதித்ய குருஜி. 

புதன்

''பஞ்ச மகா புருஷ யோகங்களில் புதனால் வழங்கப்படும் யோகம் பத்ர யோகம். பஞ்ச மகா புருஷ யோகங்களைத் தரும் கிரகங்களில் சுக்கிரன் மட்டுமே அனைத்து லக்னங்களுக்கும் யோகம் தருவார். ஆனால், புதன்  நான்கு லக்னங்களுக்கு மட்டுமே பத்ரயோகத்தை அளிப்பார். பத்ர யோகம் ஒன்றே ஒரு மனிதனின் அறிவு விலாசத்தைக் காட்டும். நவகிரகங்களில் புதன் மதிநுட்பத்துக்குக் காரகத்துவம் பெற்ற கிரகம். அறிவுக்கு அரசன், வித்தைகளின் தலைவன், எழுத்தை ஆளுபவன் என புதன் பலவாறாகப் புகழப்படுகிறார்.

ஜோதிடர்கள் அனைவரும் புதனின் அருளைப் பெற்றவர்களாகவே இருப்பார்கள்.  புதன் கன்னியிலோ, மிதுனத்திலோ, பலமாக அமைந்த பலர், புகழ் பெற்ற ஜோதிடர்களாக இருக்கின்றனர். பெரிய வியாபாரிகள், மேடைப் பேச்சாளர்கள், பட்டிமன்ற நடுவர்கள், நகைச்சுவை நடிகர்கள், அறிவுப்பூர்வமான விவாதம் செய்பவர்கள், கணக்குத் துறையினர் உள்ளிட்ட பலர் புதனால் உருவாக்கப்பட்டவர்கள்தான்.

சந்திர கேந்திரத்தில் நிற்கும் புதனுக்கு அதிக வலிமை உண்டு. ஒருவருடைய ஜாதகத்தில் சந்திரனும் வலுப் பெற்று அவருக்குக் கேந்திரத்தில் புதனும் வலுப்பெற்றால் அவருக்கு ஜோதிடத்தில் ஆர்வம் வரும். அவர் ஜோதிடத் துறையில் இருக்க முடியும். 

ராசிகள்

புதன், பத்ர யோகத்தைத் தரும் நிலையில் இருக்கும்போது செவ்வாய், சனி ஆகியோருடன் இணைவதும் அவர்களின் பார்வையைப் பெறுவதும் யோகத்தை பங்கப்படுத்தும். அதேபோல என்னதான் 'குரு பார்க்க கோடி நன்மை' என்றாலும் சில நிலைகளில் குரு புதனைப் பார்ப்பது புதனின் தனித்துவத்தைப் பலவீனப்படுத்தும். மேலும் கன்னி ராசியில் அவர் வக்ர நிலை அடையாமல் இருப்பதும் மிகவும் முக்கியம். உச்சத்தில் வக்ரம் பெறுவது நீச நிலை என்பதால் கன்னியில் வக்ரம் பெறும் புதனால் முழுமையான யோகத்தைத் தர இயலாது.

வலுப்பெற்ற புதன் தனது தசையில் கணிதம், திறமையான பேச்சு, வியாபாரம், உண்மை, மிகப்பெரிய புத்திசாலித்தனம், ஆராய்ச்சி,ஜோதிடம், கல்வி,  கவிதை, எழுத்து, பிரிண்டிங் பிரஸ், நல்ல ஆலோசனைகளைச் சொல்லுதல், உள்அலங்காரம், மற்றும் தகவல் தொழில் நுட்பத் துறை, அஞ்சல், கப்யூட்டர் தொடர்பான வேலைகள் ஆடிட்டர், நகைச்சுவை நடிப்பு, விஞ்ஞானம், தர்க்க வாதம் ஆகியவற்றில் சிறந்து விளங்குவார். வாக்கு சாதுரியம், தலைமைப் பொறுப்பு போன்ற பலன்களையும் புதனே வழங்குகிறார். ஏற்றுக்கொண்ட எந்தத் துறையிலும் நிபுணத்துவத்தை வழங்குபவர் புதன்.

இனி உபய லக்னங்களான மிதுனம், கன்னி, தனுசு, மீனம் ஆகியவற்றுக்குப் புதன் தரும் பத்ர யோகப் பலன்களைப் பார்ப்போம்.

மிதுனம்:

மிதுன லக்னத்துக்கு புதன் லக்னாதிபதியும் நாலுக்குடைய சுகாதிபதியும் ஆகும் நிலையில், லக்னத்தில் இருந்தால் பத்ர யோகம் முழுமையாகக் கிடைக்கும். புதனால் ஜாதகர் நல்ல உடலமைப்பு, கிரகிக்கும் திறன், நல்ல பேச்சாற்றல் ஆரோக்கியம், நேர்மையான குணங்கள், நீண்ட ஆயுள், கணிதத்தில் திறமை. நல்ல கல்வி, ஜோதிட ஆர்வம் ஆகியவற்றைப் பெற்றிருப்பார். இங்கிருந்து ஏழாமிடத்தைப் பார்ப்பார் என்பதால் மாமன் வழிமுறையில் வாழ்க்கைத் துணை அமையும் வாய்ப்பு இருக்கிறது. நல்ல நண்பர்கள், தொழில் பங்குதாரர்கள் ஆகியோரும் புதனால் கிடைப்பார்கள்.

ஆனந்தம்

கன்னி:

கன்னி லக்னத்துக்கு புதன் லக்னாதிபதி மற்றும் ஜீவனாதிபதியாக வும் இருக்கிறார். லக்னத்திலிருக்கும் புதன் நல்ல மனைவி, நண்பர் கள், பங்குதாரர்கள், சொகுசு வாழ்க்கை, அறிவால் பிழைக்கும் தன்மை, நீடித்த ஆயுள், ஆரோக்கியம் ஆகியவற்றைத் தருவார். கணிதம் மற்றும் புள்ளி விவரத்துறைகள் ஜாதகருக்குக் கை கொடுக்கும். சமுதாயத்தில் மதிப்பு, மரியாதை, ஒழுக்கம், எதையும் சமாளிக்கும் திறமை, வாழ்க்கையில் வெற்றி, பெற்றோருக்கு நற்பெயர் ஆகியவற்றை லக்ன புதன் தருவார்.

ஆதித்ய குருஜிதனுசு:

தனுசு லக்னத்துக்கு புதன் ஜீவனாதிபதியாகி, மிதுனத்தில் இருக்கும் நிலையில் தொழில் வகையில் நிறைவைத் தந்து நல்ல லாபங்களையும் சொகுசு வாழ்க்கையையும் தருவார். பத்தாமிடமான கன்னியில் அவர் தனித்திருப்பது நல்லதல்ல. ஆனால், புதன் இங்குச் சூரியனுடன் இணைந்திருந்தால் தர்ம கர்மாதிபதி யோகத்துடன் பத்ர யோகத்தையும் தருவார். ஜாதகரை ஸ்டேஷனரி, கணக்கு, அச்சுத் தொழில், எழுத்து, வியாபாரம், பத்திரிகை, கணினி போன்ற துறைகளில் வழிநடத்தி தனது தசையில் செல்வந்தர் ஆக்குவார். 

மீனம்:

மீனத்துக்குப் புதன், நான்காமிடமான சுகஸ்தானத்துக்கும், ஏழாமிடமான களத்திர ஸ்தானத்துக்கும் உரியவராகிறார். அவர் நான்காமிடமான மிதுனத்தில் ஆட்சி பெறும் நிலையில் நல்ல கல்வி, தாயார் வழி நன்மை, வீடு, வாகனம், நிர்வாகப் பதவி, அறிவால் பிழைக்கும் தன்மை, புத்திசாலியாகப் போற்றப்படுதல் போன்ற தன் காரகத்துவங்கள் ஏதேனும் ஒன்றில் ஜாதகரை வழிநடத்தி,  செல்வ வளங்களை அள்ளித் தருவார். ஆயினும், இங்கு அவர் தனித்திருப்பது நல்லதல்ல. நான்காமிடத்திலிருந்து புதன் பத்தாமிட தனுசைப் பார்க்கும் நிலையில் ஜீவனஸ்தானம் குருவின் வீடு என்பதால் சொல்லிக்கொடுக்கும் துறைகளிலும், கல்வி, ஆன்மிக குரு  போன்று புதனின் காரகத்துவங்களில் ஜாதகரின் ஜீவனம் அமையும்'' என்கிறார் ஜோதிடக்கலை அரசு ஆதித்ய குருஜி.

வீடியோ: கிராபியென் ப்ளாக்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்