இந்த வார ராசிபலன் ஏப்ரல் 22 முதல் 28 வரை | Horoscope for the week

வெளியிடப்பட்ட நேரம்: 06:30 (22/04/2019)

கடைசி தொடர்பு:11:27 (22/04/2019)

இந்த வார ராசிபலன் ஏப்ரல் 22 முதல் 28 வரை

இந்த வார ராசிபலன்  ஏப்ரல் 22 முதல் 28 வரை

இந்த வார ராசிபலன்  ஏப்ரல் 22 முதல் 28 வரை

'ஜோதிட மாமணி'கிருஷ்ணதுளசி


மேஷராசி அன்பர்களே!

மேஷ ராசிவருமானம் திருப்தி தருவதாக இருக்கும். வீண் செலவுகளும் ஏற்படு வதற்கில்லை. தந்தைவழியில் எதிர்பார்த்த காரியம் இழுபறியாகி முடியும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

பயணங்களால் அலைச்சலுடன் ஆதாயமும் உண்டாகும். கணவன் - மனைவிக் கிடையே சிறு சிறு கருத்துவேறுபாடுகள் ஏற்படக்கூடும் என்றாலும், அதனால் பாதிப்பு எதுவும் இருக்காது. பிள்ளைகள் வழியில் சில சங்கடங்கள் ஏற்பட்டு நீங்கும்.அலுவலகத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலையே காணப்படும். சக பணியாளர்கள் உங்கள் பணிகளில் உதவிகரமாக இருப்பார்கள். ஒரு சிலருக்கு அவர்கள் விரும்பியபடி சலுகைகளுடன் கூடிய இட மாறுதல் கிடைக்கும்.

வியாபாரத்தின் காரணமாக சிலர் தொலைதூர பயணங்களை மேற்கொள்ள நேரும். பணியாளர்கள் நல்லமுறையில் ஒத்துழைப்பு தருவார்கள். சக வியாபாரிகளுடன் இணக்கமான சூழ்நிலை உண்டா கும். பங்குதாரர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.கலைத்துறையினருக்கு எதிர்பார்த்த வாய்ப்புகள் கிடைக்கும். சக கலைஞர்கள் உதவிகரமாக இருப்பார்கள். மூத்த கலைஞர்களின் ஆலோசனை பயனுள்ளதாக இருக்கும். பணவரவும் திருப்தி தரும்.மாணவர்களுக்கு கல்விச் சுற்றுலா செல்வதற்கான வாய்ப்பு ஏற்படக்கூடும்.

புதுப் புது விஷயங்களைக் கற்றுக்கொள்வதில் ஆர்வம் ஏற்படும். பெற்றோரின் அன்பும் ஆதரவும் மகிழ்ச்சி தருவதாக இருக்கும்.குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு உற்சாகமான வாரம். உறவினர்கள் வருகை மகிழ்ச்சி தரும். கணவர் வழி உறவினர்களிடையே மதிப்பு உயரும். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு அலுவலகத்தில் எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். 

அதிர்ஷ்ட நாள்கள்: 22, 23, 28

அதிர்ஷ்ட எண்கள்: 5, 9

சந்திராஷ்டம நாள்கள்: ஏப்: 22, 23

வழிபடவேண்டிய தெய்வம்: விநாயகர்

பரிகாரம்: தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்

.திருவாக்கும் செய்கருமம் கைகூட்டும் செஞ்சொல்

பெருவாக்கும் பீடும் பெருக்கும் - உருவாக்கும்

ஆதலால் வானோரும் ஆனைமுகத்தானைக்

காதலால் கூப்புவர் தம்கை

 

ரிஷபராசி அன்பர்களே!

ரிஷப ராசிதேவைக்கேற்ப பணம் இருப்பதால் குடும்பத்தை நிர்வகிப்பதில் சிரமம் எதுவும் இருக்காது. கணவன் - மனைவிக்கிடையே மூன்றாவது நபரால் சில பிரச்னைகள் ஏற்படக் கூடும் என்பதால், சற்று எச்சரிக்கையாக இருக்கவும். வழக்குகளில் பொறுமை அவசியம். பிள்ளைகளால் வீண்செலவுகள் ஏற்பட வாய்ப்பு உண்டு. சிலருக்கு தெய்வப் பணிகளில் கலந்துகொள்ளும் வாய்ப்பு ஏற்படும்.

தந்தைவழி உறவுகளால் ஆதாயம் ஏற்படும்.அலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலையே காணப்படும். இருக்கும் வேலையிலிருந்து வேறு வேலைக்கு முயற்சி செய்வதில் பொறுமை அவசியம். அதிகாரிகள் கண்டிப்பு காட்டினாலும், சக ஊழியர்கள் அனுசரணையாக இருப்பார்கள்.வியாபாரத்தில் எதிர்பார்க்கும் லாபம் கிடைக்கும். சிலர் வாடகை இடத்தில் இருந்து சொந்த இடத்துக்கு கடையை மாற்றி விரிவு படுத்துவீர்கள். பணியாளர்களால் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும். கலைத் துறையினருக்கு சிற்சில தடை தாமதங்களுக்குப் பிறகே எதிர்பார்க்கும் வாய்ப்புகள் கிடைக்கும்.

வருமானம் ஓரளவு திருப்தி தரும். சக கலைஞர்களை அனுசரித்துச் செல்லவும்.மாணவர்கள் மேற்கொண்டு படிப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ளலாம். சிலருக்கு விடுமுறைக் காலப் பயிற்சி வகுப்புகளில் கலந்துகொள்ளும் வாய்ப்பு ஏற்படும்.குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு மிகவும் மகிழ்ச்சியான வாரம் இது. வேலைக்குச் செல்லும் பெண்கள் அலுவலகத்தில் கூடுதல் வேலை செய்யவேண்டி இருக்கும். ஆனாலும், சலுகைகள் கிடைப்பது மகிழ்ச்சி தரும்.

அதிர்ஷ்ட நாள்கள்: 22, 23

அதிர்ஷ்ட எண்கள்: 3, 7

சந்திராஷ்டம நாள்கள்: ஏப்: 24, 25

வழிபடவேண்டிய தெய்வம்: தட்சிணாமூர்த்தி

பரிகாரம்: தினமும் காலையில் பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.

மாசில் வீணையும் மாலை மதியமும்

வீசு தென்றலும் வீங்கிள வேனிலும்

மூசு வண்டறை பொய்கையும் போன்றதே

ஈச னெந்தை யிணையடி நீழலே

 

மிதுனராசி அன்பர்களே!

மிதுனம் வருமானம் அதிகரிக்கும். சிலருக்கு எதிர்பாராத பணவரவு கிடைப்பதற் கான வாய்ப்புகள் உண்டாகும். உடல் ஆரோக்கியம் மேம்படும். கணவன் - மனைவிக்கிடையே ஏற்பட்டிருந்த கருத்துவேறுபாடுகள் மறைந்து அந்நியோன்யம் அதிகரிக்கும். மற்றவர்களுடன் பேசும்போது பொறுமை அவசியம். அரசாங்க வகையில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும்

. தந்தைவழி உறவினர்களுடன் சுமுகமான உறவு ஏற்படும்.அலுவலகத்தில் சக பணியாளர்களை அனுசரித்து நடந்துகொள்ளவும். உங்கள் வேலைகளில் மட்டுமே கவனம் செலுத்தவேண்டியது மிக முக்கியம். நீண்டநாள்களாக எதிர்பார்த்த பதவி உயர்வு, ஊதிய உயர்வு கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு.வியாபாரத்தில் விற்பனையை அதிகரிக்கச் சற்று கூடுதலாக உழைக்கவேண்டி இருக்கும்.

பற்று வரவு சுமுகமாக நடக்கும். பணியாளர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.கலைத்துறையினர் வாய்ப்புகளைப் பெறுவதில் சிற்சில தடைகள் ஏற்பட்டாலும், வாய்ப்பு எதிர்பார்த்தபடி கிடைத்துவிடும். வருமானமும் திருப்திகரமாக இருக்கும்.மாணவர்கள் விரும்பிய கல்வி நிறுவனத்தில் விரும்பும் பாடப் பிரிவில் சேருவதற்கு சிலரின் சிபாரிசு தேவைப்படும்.

படிப்பதற்கான வங்கிக் கடனுதவி கிடைப்பதில் தடை எதுவும் இருக்காது. குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு பிரச்னை இல்லாத வாரம். அலுவலகத்துக்குச் செல்லும் பெண்களுக்கு எதிர்பார்ப்புகள் ஓரளவு நிறைவேறும்.

அதிர்ஷ்ட நாள்கள்: 22, 23, 24, 25

அதிர்ஷ்ட எண்கள்: 6, 8'

சந்திராஷ்டம நாள்கள்: ஏப்: 26, 27, 28'

வழிபடவேண்டிய தெய்வம்: ஆஞ்சநேயர்

பரிகாரம்: தினமும் காலையில் பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை பாராயணம் செய்யவும்.

அஞ்சிலே ஒன்று பெற்றான் அஞ்சிலே ஒன்றை தாவி

அஞ்சிலே ஒன்று ஆறு ஆக ஆருயிர் காக்க ஏகி

அஞ்சிலே  ஒன்று பெற்ற அணங்கைகண்டு  ; அயலான் ஊரில

அஞ்சிலே ஒன்று வைத்தான் அவன்  நம்மை அளித்து காப்பான்

 

கடகராசி அன்பர்களே!

    பணப்புழக்கம் அதிகரிக்கும். கடகம்செலவுகளும் அவசியமான செலவுகளாகவே இருக்கும். குடும்பப் பொறுப்புகளின் காரணமாக சிலருக்கு வெளியூர்ப் பயணம் மேற்கொள்ள நேரிடும். உடல் ஆரோக்கியத்தில் மட்டும் கவனம் தேவை. வாகனங்கள் வகையில் பராமரிப்புச் செலவுகள் ஏற்படும். வாழ்க்கைத்துணைவழி உறவினர்களால் ஆதாயம் கிடைக்கும்.

பிள்ளை களால்  மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும்.அலுவலகத்தில் உங்கள் பணிகளில் கவனமாக இருக்கவேண்டியது மிகவும் அவசியம். ஒரு சிலருக்கு இருக்கும் இடத்தில் இருந்து வேறு ஊருக்கு மாறுதல் கிடைப்பதுடன் அதனால் நன்மையே ஏற்படும். சக ஊழியர்களிடம் இணக்கமாக நடந்துகொள்ளவும்.வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்.

சக வியாபாரிகளுடன் இருந்த கருத்துவேறுபாடுகள் நீங்கி சுமுகமான போக்கு ஏற்படும். சக வியாபாரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் விலகும்.கலைத்துறையினருக்கு புதுப்புது வாய்ப்புகள் வரும். அதனால் எதிர்பார்த்ததை விடவும் கூடுதல் வருமானம் கிடைக்கும். சக கலைஞர்களும் அனுசரணையாக இருப்பார்கள்.மாணவர்கள் தாங்கள் விரும்பும் பாடப்பிரிவில் சேர்ந்து படிக்க ஏற்ற சூழ்நிலை கனிந்து வரும். படிப்புக்கு வங்கிக் கடனுதவியும் கிடைக்கும்.'

குடும்பநிர்வாகத்தை கவனிக்கும் பெண்களுக்கு பொறுப்புகள் கூடும். தேவையான அளவுக்கு பணம் இருப்பதால் செலவுகளைச் சமாளித்துவிடுவீர்கள்.  அலுவலகத்தில் சக பணியாளர்களை அனுசரித்து நடந்துகொள்ளவும். சலுகைகளும் கிடைக்கும்.

அதிர்ஷ்ட நாள்கள்: 23, 24, 27, 28

அதிர்ஷ்ட எண்கள்: 2,6

வழிபடவேண்டிய தெய்வம்: பழநியாண்டவர்

பரிகாரம்: தினமும் காலையில் பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.

அஞ்சுமுகம் தோன்றில் ஆறுமுகம் தோன்றும்!

வெஞ்சமரில் அஞ்சேல் என வேல் தோன்றும்! - நெஞ்சில்

ஒரு கால் நினைக்கில் இரு காலும் தோன்றும்!

முருகா என்று ஓதுவார் முன்!

 

சிம்மராசி அன்பர்களே!

   சிம்மம்பணவரவுக்கு குறை இருக்காது. பிள்ளைகள் வழியில் பணவரவுக்கும் பொருள்சேர்க்கைக்கும் வாய்ப்பு உண்டு. சகோதர வகையில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். கணவன் - மனைவிக்கிடையே ஏற்பட்டிருந்த  கருத்துவேறுபாடு நீங்கி, அந்நியோன்யம் அதிகரிக்கும். வாழ்க்கைத்துணைவழி உறவினர்களிடம் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும்.

தந்தையுடன் கருத்துவேறுபாடுகள் ஏற்பட்டு நீங்கும்.அலுவலகத்தில் உங்கள் செயல்பாடுகளால் உயர் அதிகாரிகளின் பாராட்டுதல்களையும் அதனால் பதவிஉயர்வு ஊதியஉயர்வு போன்ற சலுகைகளும் கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு.வியாபாரத்தில் எதிர்பார்த்ததைவிட லாபம் கூடுதலாகக் கிடைக்கும்.பணியாளர்கள் நல்ல முறையில் பணி செய்வார்கள்.

krishna dulasiசக வியாபாரிகள் அனுசரணையாக இருப்பார்கள்.கலைத்துறையினருக்கு எதிர்பார்த்த வாய்ப்புகள் வரும். வருமானமும் கூடுதலாக வருவதற்கு வாய்ப்பு உள்ளது.மாணவர்கள் தாங்கள் விரும்பும் மேற்படிப்பில் சேருவதற்கான உதவிகள் எதிர்பார்த்தபடியே கிடைக்கும். பெற்றோரின் அன்பும் ஆதரவும் மேற்கொண்டு படிப்பதற்கு உற்சாகம் தரும்.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு உறவினர்கள் வருகையால் சற்று பொறுப்புகள் கூடுவதால்  சோர்வு உண்டாகும். ஆனாலும், சமாளித்துவிடுவீர்கள். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு அலுவலகச் சூழ்நிலை திருப்தி தருவதாக இருக்கும்.

அதிர்ஷ்ட நாள்கள்: 26, 27

அதிர்ஷ்ட எண்கள்: 5,7'

வழிபடவேண்டிய தெய்வம்: சிவபெருமான்பரிகாரம்: தினமும் பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்

.மந்திர மாவது நீறு வானவர் மேலது நீறு

சுந்தர மாவது நீறு துதிக்கப் படுவது நீறு

தந்திர மாவது நீறு சமயத்தி லுள்ளது நீறு

செந்துவர் வாயுமை பங்கன் திருவாலவாயான் திருநீறே!.

 

கன்னிராசி அன்பர்களே!

கன்னிஎதிர்பார்த்ததைவிடவும் வருமானம் கூடுதலாகவே இருக்கு. கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். அவ்வப்போது சிறு சிறு பிரச்னைகள் ஏற்பட்டு மனதில் லேசான சோர்வை உண்டாக்கும். வழக்குகளில் உங்களுக்குச் சாதகமான போக்கு ஏற்படும். செலவுகள் கட்டுக்குள் இருக்கும். தாயாரின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. தாய்வழி உறவினர்களால் சில சங்கடங்கள் ஏற்பட்டு நீங்கும்.

அலுவலகத்தில் உங்கள் பணிகளில் கூடுதல் கவனம் தேவை. சக பணியாளர்களிடம் எச்சரிக்கை யாக இருக்கவேண்டும். அதிகாரிகளை அணுகும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும்.வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட லாபம் அதிகமாக வரும் என்றாலும் அதற்காக கூடுதலாக உழைக்கவும் வேண்டி இருக்கும். வியாபாரத்தை விரிவுபடுத்த வங்கிக் கடன் உதவி கிடைக்கும்.

கலைத்துறையினருக்கு வாய்ப்புகள் கிடைக்கும் என்றாலும், கிடைத்த வாய்ப்புகளைப் பயன் படுத்திக்கொள்வதில் சில தடைகள் ஏற்படக்கூடும்.மாணவர்களுக்கு விடுமுறைக் காலப் பயிற்சி வகுப்புகளில் கலந்துகொள்ளக் கூடிய வாய்ப்பு ஏற்படும். பெற்றோர் ஆதரவாக இருப்பார்கள்.குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு மனதுக்கு மகிழ்ச்சியும் நிம்மதியும் உண்டாகும். அலுவலகத்துக்குச் செல்லும் பெண்களுக்கு அலுவலகத்தில் பணிச் சுமை அதிகரிக்கும். சக ஊழியர்கள் உதவி செய்வார்கள்.

அதிர்ஷ்ட நாள்கள்: 22, 23

அதிர்ஷ்ட எண்கள்: 1,5

வழிபடவேண்டிய தெய்வம்: அபிராமி அம்பிகை

பரிகாரம்: தினமும் காலையில் பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.

மணியே மணியின் ஒளியே ஒளிரும் மணி புணைந்த

அணியே அணியும் அணிக்கழகே அணுகாதவர்க்குப்

பிணியே பிணிக்கு மருந்தே அமரர்தம் பெருவிருந்தே

பணியேன் ஒருவரை நின் பத்மபாதம் பணிந்த பின்னே!

 

துலாராசி அன்பர்களே!

துலாம்குடும்பத்தில் நிம்மதியும் மகிழ்ச்சியும் காணப்படும். பொருளாதார வசதிக்கு குறைவு எதுவும் இருக்காது. புதிய முயற்சிகள் எதிலும் ஈடுபடவேண்டாம். உடல்நலம் சீராகும். கணவன் - மனைவிக்கிடையே கருத்துவேறுபாடுகள் ஏற்படக்கூடும் என்பதால் ஒருவரை யொருவர் அனுசரித்துச் செல்வது நல்லது. இளைய சகோதர வகையில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும்.

புதிய வேலைக்கு முயற்சி செய்துகொண்டு இருப்பவர்களுக்கு நல்ல பதில் கிடைக்கும். வேலையில் இருப்பவர்களுக்கு அலுவலகச் சூழ்நிலை மகிழ்ச்சி தரும். சில சலுகைகளும் கிடைக்கும்.வியாபாரத்தில் எதிர்பார்த்த அளவுக்கு லாபம் கிடைக்காது. போட்டிகளைச் சமாளிக்க கடுமையாகப் பாடுபடவேண்டி இருக்கும். புதிய முயற்சிகள் எதுவும் இப்போது வேண்டாம்.

கலைத்துறையினர் கடுமையான முயற்சி செய்தால்தான் வாய்ப்புகள் வரும். அப்படி வரக்கூடிய வாய்ப்புகளைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்வது நல்லது.மாணவர்களுக்கு மேற்படிப்பில் சேருவதற்குச் சிலரின் சிபாரிசை நாடவேண்டி வரும். மேற்படிப்பிற்கான முயற்சிகள் சாதகமாக முடியும்.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு மிகவும் மகிழ்ச்சியான வாரம் இது. அலுவலகத்துக்குச் செல்லும் பெண்களுக்கு பதவி உயர்வும் ஊதிய உயர்வும் கிடைக்கும்.

அதிர்ஷ்ட நாள்கள்: 24, 25

அதிர்ஷ்ட எண்கள்: 2, 6

வழிபட வேண்டிய தெய்வம்: முருகன்

பரிகாரம்: தினமும் காலையில் பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.

உருவாய் அருவாய் உளதாய் இலதாய்

மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்க்

கருவாய் உயிராய்க் கதியாய் விதியாய்க்

குருவாய் வருவாய் அருள்வாய் குகனே!

 

விருச்சிகராசி அன்பர்களே!

விருச்சிகம் பொருளாதார வசதிக்குக் குறைவில்லை. செலவுகள் ஏற்பட்டாலும் சமாளித்து விடுவீர்கள். நெருங்கிய உறவினர்களிடம் பக்குவமாக நடந்துகொள்வதன் மூலம், தேவையற்ற பிரச் னைகளைத் தவிர்த்துவிடலாம். கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். திருமண வயதில் இருப்பவர்களுக்கு நல்ல இடத்தில் திருமணம் நிச்சயமாகும்.

சிலருக்கு எதிர்பாராத பணவரவு கிடைக்கக்கூடும்.அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். இருக்கும் வேலையில் இருந்து வேறு வேலைக்கு இப்போது முயற்சி செய்யவேண்டாம். அலுவலகத்தில் சக பணியாளர்களை அனுசரித்துச் செல்லவும்.வியாபாரத்தில் புதிய முதலீடுகள் இப்போது வேண்டாம். சக வியாபாரிகளின் பேச்சைக் கேட்டு புதிய முயற்சிகள் எதிலும் ஈடுபடவேண்டாம்.

கலைத்துறையினருக்கு வாய்ப்புகள் கிடைக்கும். அலைச்சல் அதிகரிக்கும் என்பதால், அவ்வப் போது ஓய்வு எடுத்துக்கொள்வது அவசியம். சக கலைஞர்கள் ஆதரவாக இருப்பார்கள். மாணவர்களுக்கு மேற்கொண்டு படிக்கவேண்டும் என்பதில் ஆர்வம் அதிகரிக்கும். பெற்றோரும் உங்கள் ஆர்வத்தைச் செயல்படுத்தத் தேவையான முயற்சிகளை முன்னெடுப்பார்கள்.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்குப் பொறுப்புகள் கூடுவதால்,  அதிக பொறுப்புகளால் மனதில் சோர்வும் உடல் அசதியும் உண்டாகும். அலுவலகத்துக்குச் செல்லும் பெண்களுக்கு அலுவலகச் சூழ்நிலை உற்சாகம் தருவதாக இருக்கும்.

அதிர்ஷ்ட நாள்கள்: 22, 23, 27, 28

அதிர்ஷ்ட எண்கள்: 2, 7

வழிபடவேண்டிய தெய்வம்: தட்சிணாமூர்த்தி

பரிகாரம்: தினமும் காலையில் பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.

உருவலர் பவளமேனி ஒளிநீ றணிந்து  உமையோடும் வெள்ளை விடைமேன்

முருகலர் கொன்றைதிங்கள் முடிமே லணிந்தென் உளமே புகுந்த அதனால்

திருமகள் கலையதூர்தி செயமாது பூமி  திசை தெய்வ மானபலவும்

அருநெறி நல்லநல்ல அவைநல்ல நல்ல  அடியா ரவர்க்கு மிகவே.

 

தனுசுராசி அன்பர்களே!

தனுசு வார முற்பகுதியில் நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த நல்ல செய்தி வந்து சேரும். உறவினர்கள், நண்பர்களின் வருகை மகிழ்ச்சி தருவதாக இருக்கும். செலவுகள் அதிகரித்தாலும், தேவையான பணம் இருப்பதால் சமாளித்துவிடுவீர்கள்.திருமண முயற்சிகள் சாதகமாக முடியும்.

பிள்ளைகள் வழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். கணவன் - மனைவிக்கிடையே ஏற்பட்டிருந்த மனக்கசப்புகள் மறையும். அலுவலகத்தில் சுமுகமான சூழ்நிலையே காணப்படும். அதிகாரிகளும் நிர்வாகத்தினரும் அனுசரணையாக இருப்பார்கள்.

புதிய வேலைக்கு விண்ணப்பித்து இருப்பவர்களுக்கு நல்ல நிறுவனத்தில் இருந்து அழைப்பு வரும்.வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். புதிதாக வியாபாரம் தொடங்க நினைப்பவர்கள் அதற்கான முயற்சிகளைத் தொடங்கலாம். அனுகூலமாக முடியும்.கலைஞர்களுக்கு எதிர்பார்த்த வாய்ப்புகள் கிடைத்தாலும் அதற்கேற்ற பணவரவு இருக்காது. சக கலைஞர்களை அனுசரித்துச் செல்லவும்.

மாணவர்களுக்கு அவர்கள் விரும்பித் தேர்ந்தெடுத்த பாடப் பிரிவில் நல்ல கல்வி நிறுவனத்தில் இடம் கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு.குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு செலவுகள் கூடுவதால் சற்று சிரமப்பட்டே சமாளிக்கவேண்டி இருக்கும். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு அலுவலகத்தில் பணிச்சுமை குறையும். சலுகைகள் எதையும் எதிர்பார்க்கமுடியாது.

அதிர்ஷ்ட நாள்கள்: 24, 25

அதிர்ஷ்ட எண்கள்: 3,7

வழிபடவேண்டிய தெய்வம்: வேங்கடேச பெருமாள்

பரிகாரம்: தினமும் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.

செடியாய வல்வினைகள் தீர்க்கும் திருமாலே

நெடியானே வேங்கடவா நின்கோயி லின்வாசல்

அடியாரும் வானவரு மரம்பையரும் கிடந்தியங்கும்

படியாய்க் கிடந்துன் பவளவாய் காண்பேனே !

வார ராசிபலன்

 

மகரராசி அன்பர்களே!

மகரம்இந்த வாரம் நீங்கள் எதிலும் பொறுமையைக் கடைப்பிடிக்கவேண்டும். அவசரப்பட்டு எவருக்கும் எந்த வாக்குறுதியும் தரவேண்டாம். பொருளாதார நிலை சுமாராகத்தான் இருக்கும். வெளியிடங்களுக்குச் செல்லும்போது எச்சரிக்கையுடன் இருக்கவும்.

சகோதரர்களுடன் அனுசரித்துச் செல்லவும். கணவன் - மனைவிக்கிடையே சிறுசிறு கருத்துவேறுபாடுகள் தோன்றக் கூடும் என்பதால் ஒருவரையொருவர் அனுசரித்துச் செல்லவும். அலுவலகத்தில் பணிச் சுமை அதிகரிக்கும். இருந்தாலும் அதற்கேற்ற சலுகைகள் கிடைப்பதால் உற்சாகமாக செயல்படுவீர்கள். சக ஊழியர்கள் உதவி செய்வார்கள்.வியாபாரத்தை விரிவுபடுத்தவும், வாடகை இடத்தில் இருந்து சொந்த இடத்துக்கு கடையை மாற்றவும் வாய்ப்பு உண்டாகும்.கலைத்துறையினர் சக கலைஞர்களை அனுசரித்து நடந்து கொள்ளவும். வாய்ப்புகள் கிடைப்பதிலும் சில தடைகள் ஏற்படக்கூடும். மூத்த கலைஞர்களிடம் பேசும்போது பொறுமை அவசியம்.மாணவர்களுக்கு மேற்படிப்பு படிப்பதற்குத் தேவையான அத்தனை

உதவிகளும் கிடைக்கும் என்பதால் உற்சாகமாகக் காணப்படுவீர்கள்.குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்கள் அக்கம்பக்கத்தில் உள்ளவர்களிடம் பக்குவமாக நடந்து கொள்ளவும். அலுவலகம் செல்பவர்களுக்கு திருப்தி தரும் வாரம். சலுகை கிடைக்கும்.

அதிர்ஷ்ட நாள்கள்: 22, 23, 27, 28

அதிர்ஷ்ட எண்கள்:3, 5

வழிபடவேண்டிய தெய்வம்: மீனாட்சி அம்மன்

தினமும் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.

மனிதரும், தேவரும், மாயா முனிவரும், வந்து, சென்னி

குனிதரும் சேவடிக் கோமளமே.கொன்றை வார்சடைமேல்

பனிதரும் திங்களும், பாம்பும்,பகீரதியும் படைத்த

புனிதரும் நீயும் என் புந்தி எந்நாளும் பொருந்துகவே.

 

கும்பராசி அன்பர்களே!

கும்பம்வார முற்பகுதி சுமாராகத்தான் இருக்கும். பிற்பகுதியில் வருமானம் திருப்திகரமாக இருக்கும். சிறிய அளவில் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படக்கூடும். முக்கிய முடிவுகள் எடுக்கும்போது நன்கு ஆலோசித்து எடுப்பது நல்லது. வீட்டில் சுபநிகழ்ச்சிகள் நடைபெறுவதற்கு வாய்ப்பு உள்ளது.

சிலருக்கு இருக்கும் வீட்டை விட்டு வேறு வீட்டுக்கு மாறவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டாலும். அது நல்லதாகவே முடியும்.வேலைக்குச் செல்லும் அன்பர்கள் வேறு வேலைக்கு முயற்சிப்பது பாதிப்பையே ஏற்படுத்தும். அலுவலகப் பணிகளிலும் கவனமாக இருப்பது அவசியம்.

சக ஊழியர்களின் விஷயங்களில் தலையிடவேண்டாம்.வியாபாரத்தில் லாபம் எதிர்பார்த்த அளவுக்கு இருக்காது என்றாலும் ஓரளவு திருப்திகரமாக இருக்கும். கடையை புதிய இடத்துக்கு மாற்ற நினைப்பவர்கள் அதற்கான முயற்சிகளில் ஈடுபடலாம்.கலைஞர்களுக்கு கிடைக்கக்கூடிய வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்வதில் சில தடங்கல்கள் ஏற்படக்கூடும்.

மாணவர்கள் பட்ட மேல்படிப்புக்கு விரும்பிய கல்வி நிறுவனத்தில் இடம் கிடைக்கும். படிப்பதற்கான வங்கிக் கடன் உதவியும் கிடைக்கும்.குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு மனதில் அவ்வப்போது லேசான சோர்வு ஏற்படக்கூடும். அலுவலகம் செல்லும் பெண்மணிகள் சில சலுகைகளைப் பெற வாய்ப்பு உண்டு.

அதிர்ஷ்ட நாள்கள்: 22, 23, 24, 25

அதிர்ஷ்ட எண்கள்: 2,3,4

வழிபடவேண்டிய தெய்வம்: மகாவிஷ்ணு

பரிகாரம்: தினமும் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி, கீழ்க்கண்ட பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.

பச்சைமாமலைபோல் மேனி பவளவாய் கமலச் செங்கண்

அச்சுதா! அமரரேறே! ஆயர்தம் கொழுந்தே என்னும்

இச்சுவை தவிர யான்போய் இந்திரலோகம் ஆளும்

அச்சுவை பெறினும் வேண்டேன் அரங்கமாநகருளானே

 

மீனராசி அன்பர்களே!

மீனம் பொருளாதார நிலைமை திருப்திகரமாக இருக்கும். அவ்வப்போது சிறு சிறு பிரச்னைகள் ஏற்பட்டாலும் உடனுக்குடன் சரியாகிவிடும். வீடு, மனை வாங்கவேண்டும் என்று நீண்டநாள்களாக நீங்கள் நினைத்தது இப்போது சாதகமாக முடியும். பழைய கடன்கள் தீருவதற்கு வாய்ப்பு உண்டு.

தந்தை வழியில் சில பிரச்னைகள் ஏற்பட்டாலும், அதனால் பாதிப்பு எதுவும் இருக்காது. நண்பர்களின் சந்திப்பால் புதிய வாய்ப்புகள் கிடைக்கக்கூடும்.வேலைக்குச் செல்பவர்களுக்கு அலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலை நிலவும். ஒரு சிலருக்கு பதவி உயர்வு அல்லது ஊதிய உயர்வு கிடைப்பதற்கு சாத்தியமுண்டு.வியாபாரத்தில் முக்கிய முடிவுகள் எடுப்பதைத் தவிர்க்கவும்.

அவசியம் ஏற்பட்டால் அனுபம் மிக்கவர்களிடம் கேட்டுச் செய்யவும்.கலைத்துறையினருக்கு நல்ல பல வாய்ப்புகள் கிடைப்பதற்கும், அதன் மூலம் பணவரவு கூடுவதற்கும் வாய்ப்பு உண்டு.மாணவர்கள் கல்வியைத் தொடர்வதில் சில பின்னடைவுகள் ஏற்பட்டாலும்,. முடிவில் சாதகமாக முடியும்.குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு சந்தோஷமும் நிம்மதியும் தரும்  வாரம். வேலைக்குச் செல்பவர்களுக்கு அலுவலகச் சூழ்நிலை மகிழ்ச்சி தருவதாக இருக்கும்.

அதிர்ஷ்ட நாள்கள்: 24, 25, 27, 28

அதிர்ஷ்ட எண்கள்:7, 9

வழிபடவேண்டிய தெய்வம்: சிவபெருமான்.

பரிகாரம்: தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபமேற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.

நாளென் செயும்வினை தானென் செயுமெனை நாடிவந்த

கோளென் செயுங்கொடுங் கூற்றென் செயுங்கும ரேசரிரு

தாளுஞ் சிலம்புஞ் சதங்கையுந் தண்டையுஞ் சண்முகமுந்

தோளுங் கடம்பு மெனக்கு முன்னே வந்து தோன்றிடினே.

 

 

 


டிரெண்டிங் @ விகடன்