முழுமையாக இயந்திரங்களின் உதவியுடன் உருவாகும் கிருஷ்ணர் கோயில்! - சேலத்தில் பிரமாண்டம் | Construction photo of lord krishna temple

வெளியிடப்பட்ட நேரம்: 14:35 (23/04/2019)

கடைசி தொடர்பு:14:35 (23/04/2019)

முழுமையாக இயந்திரங்களின் உதவியுடன் உருவாகும் கிருஷ்ணர் கோயில்! - சேலத்தில் பிரமாண்டம்

சேலத்துக்குப் பெருமை சேர்க்க தாரமங்கலம் கைலாசநாதர் கோயில், பேளூர் தான்தோன்றி ஈஸ்வரன் கோயில், அய்யோதியாபட்டினம் ஸ்ரீ கோதண்டராமர் கோயில், உத்தமசோழபுரம் ஸ்ரீகரபுரநாதர் ஆலயம், சேலம் ஸ்ரீ சுகவனேஸ்வரர் ஆலயம் என்று தெய்விகமும் அழகிய சிற்ப வேலைபாடுகளும் நிறைந்த கோயில்கள் பல காணப்படுகின்றன. அந்த வரிசையில் புதியதாக இணைய உள்ளது இஸ்கான் கிருஷ்ணர் கோயில். 

கிருஷ்ணர் கோயில்

சேலம் - பெங்களூர் புறவழிச்சாலையில் கருப்பூர், கரும்பாலை பேருந்து நிலையம் அருகே சுமார் 20 கோடி ரூபாய் செலவில் மிகப் பிரமாண்டமாக, முழுதும் கருங்கற்களால் ஆன அழகிய கிருஷ்ணன் கோயில் கட்டப்பட்டு வருகிறது. மூன்று வருடங்களுக்கு முன்பே கட்டத் தொடங்கப்பட்ட கோயில் கட்டுமானம் விரைவில் கட்டி முடிக்கப்படும் நிலையில் இருக்கிறது. இந்தக் கோயில் மதில் சுவர்களில் கிருஷ்ணரின் புடைப்புச் சிற்பங்கள் மிக அழகாகவும் நேர்த்தியாகவும் செதுக்கப்பட்டு வருகிறது. 

யாளி

முற்காலத்தில் மனித உழைப்பு மற்றும் யானைகளின் உதவிகொண்டே கோயில்கள் கட்டப்பட்டன. ஆனால் இந்த இஸ்கான் கோயில் முழுமையாக இயந்திரங்களின் உதவியுடனே கட்டப்பட்டு வருகிறது. அதற்கே ஐந்து வருடங்கள், இருபது கோடி ரூபாய் செலவு என்று கணக்கு நீள்கிறது. ஆனால் எந்தவித நவீன வசதிகளும் இல்லாத அந்தக் காலத்தில் நமது முன்னோர்கள் எப்படி பிரமாண்ட கோயில்கள் கட்டினார்கள் என்பது மிகவும் ஆச்சர்யமான விசயமே.

அதைக் கற்பனை செய்து பார்க்கவாவது இந்தக் கருங்கல் கோயில் உருவாகும் முறையைக் காண அனைவரும் அவசியம் ஒரு முறை நேரில் சென்று காணவேண்டிய இடம் இந்த இஸ்கான் கிருஷ்ணர் கோயிலாகும்..!