திருப்பதியில் நாளை 4 மணி நேரம் சுவாமி தரிசனம் ரத்து! | Swamy Darsan in Tirupati will cancel 27 th morning 11 o clock to 3 o clock

வெளியிடப்பட்ட நேரம்: 19:48 (26/04/2019)

கடைசி தொடர்பு:19:48 (26/04/2019)

திருப்பதியில் நாளை 4 மணி நேரம் சுவாமி தரிசனம் ரத்து!

நாளை (27.4.19)  திருமலை திருப்பதி வராகசுவாமி கோயிலில் சம்ப்ரோக்ஷணம் நடைபெறுகிறது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொள்கின்றனர். இதையொட்டி, கோயில் வளாகம் வண்ணவண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. 

திருப்பதி வராகசாமி கோயில்

திருப்பதி வேங்கடேசப் பெருமாள் கோயிலுக்கு தினமும் அறுபதாயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்யவருகின்றனர். ஆனால், திருமலையில் வேங்கடவன் குடிகொள்வதற்கு முன், அங்கே கோயில்கொண்டு அருள்பாலித்துவந்தவர் வராகசுவாமிதான். அவர்தான் வேங்கடவன் திருமலையில் தங்கி மக்களுக்கு அருள்பாலிக்கச் செய்தார். அதனால்தான், திருமலைக்கு சுவாமி தரிசனம் செய்ய வருபவர்கள், இங்குள்ள திருக்குளத்தில் நீராடி முடித்ததும், அதன் கரையிலேயே இருக்கும் வராகசுவாமி கோயிலில் முதலில் வணங்குவார்கள். முதல் வணக்கம் வராகசுவாமிக்குத்தான்.

திருப்பதி

வராகசுவாமி கோயிலின் சம்ப்ரோஷணத்துக்கான சடங்குகள், கடந்த செவ்வாய்க்கிழமை தொடங்கி ஆகம விதிகளின்படி நடைபெற்று வருகின்றன. 14 ஹோம குண்டங்களில் 22 பண்டிதர்களால் ஹோமம் வளர்க்கப்பட்டு முறைப்படியான யாகசாலை பூஜை தொடங்கின.  

நாளை 27-ம் தேதி சனிக்கிழமை காலை 11.07 மணியிலிருந்து 1.16 மணிக்குள் சம்ப்ரோக்ஷணம் நடைபெறுகிறது. இதனால், கடந்த 23-ம் தேதி முதல் 27-ம் தேதி வரை பக்தர்கள் வராகாசுவாமி கோயிலில் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படவில்லை. சம்ப்ரோக்ஷணம் முடிந்தபிறகே அனுமதிக்கப்படுவார்கள். சம்ப்ரோக்ஷணம் நடைபெறுவதால், நாளை காலை 11 முதல் பிற்பகல் 3.30 மணி வரை திருமலையில் வேங்கடேசப் பெருமாள் தரிசனமும் நிறுத்தி வைக்கப்படுகிறது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க