'பிள்ளைக்கறியமுது படையல்!' - திருச்செங்காட்டங்குடியில் சித்திரை பரணித் திருவிழா | thiruchengattankudi parani festival

வெளியிடப்பட்ட நேரம்: 22:00 (02/05/2019)

கடைசி தொடர்பு:22:00 (02/05/2019)

'பிள்ளைக்கறியமுது படையல்!' - திருச்செங்காட்டங்குடியில் சித்திரை பரணித் திருவிழா

ல்லவ மன்னனின் படைத்தளபதியாக இருந்த பரஞ்சோதி என்பவர், வாதாபி படையெடுப்புக்குப் பின், சிவபக்தியில் நாட்டம்கொண்டு சிவனடியாராக மாறி, 'சிறுத்தொண்டர்' என்று அழைக்கப்பெற்றார். அடியார்க்கு அமுதூட்டுவதைத் தன் தொண்டாகக்கொண்ட சிறுத்தொண்டரின் சேவையின் மகிமையை உலகிற்கு உணர்த்த, சிவபெருமான் அடியார்போல வேடம்பூண்டு வந்தார். 'ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறையே உண்ணும் வழக்கம் உடையவன் யான். நான் உண்ண பிள்ளைக்கறி வேண்டும்' என்று கேட்டார். அடியாருக்கு அன்னமிட சற்றும் தயங்காது, தன் பிள்ளையான சீராளனைப் பலியிட்டு அமுதுசெய்தார். பின்னர், அடியாரை அமுது உண்ண அழைத்தார் சிறுத்தொண்டர். ஆனால் அடியாராக வந்த இறைவனோ, அன்னம் உண்ணுமுன்பாக சீராளனையும் வரச் சொல்ல, சிவன் அருளால் மாண்ட சீராளன் மறுபடியும் எழுந்து வந்தான். பெரிய புராணத்தில் காணப்படும் இந்தத் திருவிளையாடல் நிகழ்ந்த தலம் திருச்செங்காட்டங்குடி.  

திருச்செங்காட்டங்குடி

இங்,கு இறைவன் உத்திராபதீஸ்வரர். அம்பாள், வாய்த்த திருகுகுழல் உமைநாயகி. சித்திரை மாதத்து பரணி நட்சத்திரத்தன்றுதான் சிறுத்தொண்டருக்கு இறைவன் காட்சிகொடுத்து முக்தியருளினார். இதை நினைவுகூரும் விதமாக, இங்கு ஆண்டுதோறும் சித்திரை பரணிப் பெருவிழா மிக விமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டு, சித்திரை பரணிப் பெருவிழா, கடந்த 29.4.19 அன்று தொடங்கி 8.5.19 வரை நடைபெறுகிறது.

சிவன்


இதன் முக்கிய நிகழ்ச்சி நாளை 3.5.19 அன்று பஞ்சமூர்த்திகள் எழுந்தருளலும், இடப வாகனத்தில் இறைவன் எழுந்தருளளும் தெருவடைச்சான் சப்பரமும் நடைபெறும். 4.5.19 அன்று, பிட்சாடனர் உற்சவம் அமுது படையல் விழா நடைபெறும். அன்று, மதியம் 2 மணிக்கு இறைவன் பிள்ளைக்கறியமுது பெற உத்திராபதீஸ்வர சுவாமி சிறுத்தொண்டர் நாயனார் மடத்திற்கு எழுந்தருள்வார். இரவு 2 மணிக்கு, காண்போர் எல்லாம் மெய்சிலிர்க்க, பிள்ளைக்கறியமுது படையல் நடைபெறும். அதிகாலை 5 மணிக்கு சிறுத்தொண்டருக்கு சிவபெருமான், இடப வாகனத்தில் காட்சிகொடுத்து முக்தியளிப்பார். இதைத் தரிசனம்செய்யும் பக்தர்களுக்கு சிவபதம் கிட்டும் என்பது ஐதீகம். தொடர்ந்து, 7 - ம் தேதி திருத்தேரும் 8 -ம் தேதி தீர்த்தம் கொடுத்தருளலும் நடைபெறும்.  
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க