வைணவ ஆசார்யர் வேதாந்த தேசிகர் 750- வது வருட நிறைவு! - தபால் தலை வெளியீடு | Vice president issued Postage Stamp to commemorate 750th Birthday of vedantha desika

வெளியிடப்பட்ட நேரம்: 18:40 (03/05/2019)

கடைசி தொடர்பு:18:40 (03/05/2019)

வைணவ ஆசார்யர் வேதாந்த தேசிகர் 750- வது வருட நிறைவு! - தபால் தலை வெளியீடு

வைணவ சமயப் பெரியவரான ஸ்ரீ வேதாந்த தேசிகர், கி.பி 1268- ம் ஆண்டு திருமலை வேங்கடவன் கோயில் மணியின் அம்சமாகக் காஞ்சிபுரத்தில் அவதரித்தார். மனித சமுதாயம் மகிழ்ச்சியுடன் வாழ ஆன்மிகத்தைப் பரப்பிய வேதாந்த தேசிகரின் 750 - வது பிறந்த ஆண்டு விழா கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. 

வேதாந்த தேசிகர்

இதைச்சிறப்பிக்கும் வகையில், அவரது நினைவாக நேற்று குடியரசு துணைத் தலைவர் இல்ல அரங்கில் நடைபெற்ற விழாவில் அஞ்சல் தலை வெளியிடப்பட்டது. அப்போது பேசிய குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, “மனித சமுதாயம் நலமுடன் வாழப் பல்வேறு ஆன்மிகப் பணிகளைச் செய்த மகான் இவர். அவரைப் போன்ற மாபெரும் மகான்களின் வாழ்க்கை வரலாற்றை அடுத்த தலைமுறையினர் அறிந்துகொள்ளும் வகையில் வரலாற்றுப் பாட நூல்களில் இடம்பெறச் செய்ய வேண்டும். இதன் மூலமே குழந்தைகள் மானுடவியல், அமைதி, கருணை ஆகியவற்றைக் கற்றுக்கொள்ள முடியும். ஸ்ரீ வைணவ பாரம்பரியத்தில் வாழ்ந்த மிகச்சிறந்த மகான் இவர். அவரது அஞ்சல் தலையை வெளியிடுவதில் பெருமையடைகிறேன்” என்று தெரிவித்தார். 

வெங்கைய்யா நாயுடு

ராமானுஜரின் தத்துவங்களை உலகுக்குப் பரப்புவதையே, தன் வாழ்நாள் நோக்கமாகக் கொண்டு பல்வேறு நூல்களைத் தமிழ், பிராகிருதம், மணிபிரவாள நடை ஆகியவற்றில் இயற்றியவர். திவ்ய தேசங்கள் அனைத்துக்கும் சென்று தரிசித்தார். தம் வாழ்நாள் முழுவதும் வைணவம் தழைக்க பல்வேறு சீடர்களை உருவாக்கிய மகான் நூறாண்டுகளுக்கும் மேல் வாழ்ந்து கி.பி 1369 - ல் இறைவனடி சேர்ந்தார். ராமானுஜர் வைணவத்தின் வேர் என்றால் ஸ்ரீ வேதாந்த தேசிகர் வைணவத்தின் விழுது என்று போற்றலாம். அவருக்குத் தபால் தலை வெளியிட்டு பெருமைப் படுத்தியிருக்கிறது மத்திய அரசு.

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க