தேனம்பாக்கத்தில் மகாபெரியவா 126-வது ஜயந்தி மகோத்சவம்! - நாளை தொடங்குகிறது | Maha periyava jeyanthi mahothsavam

வெளியிடப்பட்ட நேரம்: 17:27 (04/05/2019)

கடைசி தொடர்பு:17:40 (04/05/2019)

தேனம்பாக்கத்தில் மகாபெரியவா 126-வது ஜயந்தி மகோத்சவம்! - நாளை தொடங்குகிறது

லியுகத்தில், பல்வேறு சோதனைகளாலும் துன்பங்களாலும் வேதனைப்படப் போகும் மக்களையெல்லாம், துன்பங்களிலிருந்து விடுவித்து மகிழ்ச்சியான வாழ்க்கையை அருள்வதற்காக திருவுள்ளம் கொண்ட ஐயன் கயிலை நாயகனின் கலியுக அவதாரம்தான் காலடி ஆதி சங்கரரும், ஜகத்குருவாகக் காஞ்சியில் அருளாட்சி செலுத்திய காஞ்சி மகா பெரியவா சுவாமிகளும். 

மகா பெரியவா

சங்கரரின் அவதார காலம் முப்பத்திரண்டு ஆண்டுகள்தாம் என்றாலும்கூட, அந்தக் குறுகிய காலத்திலேயே ஆதிசங்கரர் பாரதம் முழுவதும் திக்விஜயம் செய்து, நலிவுற்று இருந்த சனாதன தர்மத்துக்குப் புத்துயிர் கொடுத்து அத்வைத தத்துவத்தை நிலைபெறச்செய்துவிட்டு கயிலை நாதனுடன் கலந்துவிட்டார். சிவபெருமான் தனது முந்தைய அவதாரமான காலடி சங்கர அவதாரத்தைப் போன்று குறுகியதாக இல்லாமல் நீண்டதாக இருக்க திருவுள்ளம் கொண்டு நிகழ்த்திய அவதாரம்தான் காஞ்சி மகா சுவாமிகள் அவதாரம். ஜகத்குருவான மகா சுவாமிகள், மக்கள் வாழ்வில் என்றென்றும் வசந்தத்தைத் தழைக்கச் செய்ய வசந்த காலத்தில் அவதரித்தார். வசந்த காலத்தின் வைகாசி மாத அனுஷ நட்சத்திரத்தன்று விழுப்புரத்தில் அவதரித்தார்.

காஞ்சி மகான்

`நடமாடும் தெய்வம்’ என்று மக்களால் கொண்டாடப்பட்ட மகா சுவாமிகள், தாம் தவ வாழ்க்கை மேற்கொள்ள தேர்தெடுத்த திருத்தலம்தான் தேனம்பாக்கம் பிரம்மபுரீசுவரர் கோயில். இந்தத் திருத்தலத்தில் மகா பெரியவாவின் 126 - வது ஜயந்தி மகோத்சவம் நாளை (5.5.19) தொடங்கி 19.5.19 வரை நடைபெறுகிறது. ஒருவார காலம் நடைபெறும் இந்த மகோத்சவத்தில் உலக நன்மைக்காக ரிக் வேத சாகல சாகை சம்ஹிதை பாராயணம், சுக்ல யஜூர் வேத கன பாராயணம், யஜூர் வேத தைத்ரிய சாகை மற்றும் சம்ஹிதை பாராயணம், சாம வேத கௌதும சாகை பாராயணம் ஆகியவை நடைபெறவிருக்கின்றன. மகா பெரியவா அவதார நாளான மே 19-ம் தேதி காலை ருத்ர ஏகாதசி, பூர்ணாஹுதி, மகா சுவாமிகளுக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற உள்ளன. பக்தர்கள் ஒரு வார காலம் நடைபெறும் ஜயந்தி மகோத்சவத்தில் பங்குகொண்டு மகா சுவாமிகளின் திருவருள் பெற்று சிறப்புடன் வாழலாம்.

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க