கேக் வெட்டிக் கொண்டாடப்படும் வித்தியாசமான அறுவடைத் திருவிழா! | Villagers take part in a ritual celebrating the pagan god Yurya and pray for plentiful future harvests in the village of Pogost

வெளியிடப்பட்ட நேரம்: 20:30 (07/05/2019)

கடைசி தொடர்பு:20:30 (07/05/2019)

கேக் வெட்டிக் கொண்டாடப்படும் வித்தியாசமான அறுவடைத் திருவிழா!

றுவடைத் திருவிழா, உலகின் ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு விதமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. நம் ஊரில், தை மாதம் பொங்கல் வைத்து சூரியக் கடவுளை வழிபட்டு அறுவடை விழாவைக் கோலாகலமாகக் கொண்டாடுகிறோம். சீனாவில் செப்டம்பர் மாதம் நடைபெறும் அறுவடைத் திருவிழாவில் அவர்களின் முக்கிய உணவான மூன் கேக்கை ஒருவருக்கொருவர் ஊட்டிவிட்டு, தங்களின் பாரம்பர்ய சிவப்பு நிற உடையணிந்து கொண்டாடுவார்கள்.

யுர்யாவை அறுவடைத் திருவிழா

அர்ஜென்டினா, மென்டோன்சா மாநிலத்தில், பிப்ரவரி மாதம் இரண்டாம் ஞாயிறன்று திராட்சைக் கனிகள் மீது புனித நீரைத் தெளித்து அர்ச்சித்தபின் அறுவடைத் திருவிழா ஆரம்பமாகும். இஸ்ரேல் நாட்டில் `சுக்கோத்’ எனப்படும் `கூடாரத் திருவிழா’வைக்  கொண்டாடுகிறார்கள். பல குடும்பங்கள், திறந்த வெளியில் கூரையற்ற கூடாரங்கள் அமைத்து தங்கி வானத்தைப் பார்த்து விளைச்சலைத் தந்த இறைவனுக்கு நன்றி சொல்வார்கள். 

யுர்யா

இதேபோன்று, ஐரோப்பாவில் உள்ள பெலாரஸ் (Belarus ) நாட்டில் போகாஸ்ட் கிராமத்தில் நேற்று  வித்தியாசமான அறுவடைத் திருவிழா கொண்டாடப்பட்டது. போகாஸ்ட் கிராம மக்கள் `பேகன் வழிபாடு' மேற்கொள்பவர்கள். பேகன் கடவுள் யுர்யாதான் (Yurya ), பயிர்களைக் காத்து அறுவடைக்கு உதவி செய்வதாக நம்புகிறார்கள். ஒவ்வொரு வருட வசந்த காலத்தின்போதும் இவர்கள் மேற்கொள்ளும் அறுவடைத் திருவிழாவில் வண்ண வண்ண ரிப்பன்களைக் கட்டித் தொங்கவிட்டு, பாரம்பர்ய ஆடைகள் அணிந்து, நடனமாடி, முன்னோர்களின் கல்லறைக்குச் சென்று வழிபட்டு அறுவடைக் கடவுள் யுர்யாவுக்கும் நன்றி செலுத்தி வருகிறார்கள். இதில் சுவாரஸ்யம் என்னவென்றால் நாம் பொங்கல் வைத்துக் கொண்டாடுவதைப் போன்று இவர்கள் பாரம்பர்ய முறைப்படி மிகப்பெரிய கேக் செய்து யுர்யாவுக்கும் முன்னோர்களுக்கும் படைத்து வழிபடுகிறார்கள்.

ஐரோப்பிய சமூகம் முழுவதும் கிறித்துவத்துக்கு மாறிவிட்டாலும், சிறுசிறு கிராமங்களில் மக்கள் தம் பழைமையை விட்டுக்கொடுக்காமல், பாரம்பர்ய திருவிழாக்களை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க