ஜூலை 1-ல் தொடங்குகிறது அமர்நாத் யாத்திரை... பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்! | Amarnath Yatra to begin from July 1, 2019

வெளியிடப்பட்ட நேரம்: 21:36 (07/05/2019)

கடைசி தொடர்பு:21:36 (07/05/2019)

ஜூலை 1-ல் தொடங்குகிறது அமர்நாத் யாத்திரை... பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்!

ம்மு - காஷ்மீர் மாநிலத்தின் தெற்கு காஷ்மீர் பகுதியில் பனி படர்ந்த இமயமலை உச்சியில் அமைந்திருக்கிறது அமர்நாத் குகைக் கோயில். இந்துக்கள் அனைவருமே தங்களது வாழ்நாளில் ஒருமுறையாவது தரிசித்துவிட வேண்டும் என்று திருக்கயிலாய யாத்திரை மேற்கொண்டு அமர்நாத் பனி லிங்கத்தை தரிசித்துவிட வேண்டும் என்று ஒவ்வொரு வருடமும் ஆன்மிகப் பயணம் மேற்கொண்டு வருகிறார்கள். இமயமலை உச்சியில் பனி சூழ்ந்த பரப்பில் குகையில் சுயம்புவாகத் தோன்றியிருக்கும் பனி லிங்கத்தைத் தரிசிப்பதே புதுவிதமான ஆன்மிக இன்பத்தைத் தரும்.

அமர்நாத் யாத்திரை

அமர்நாத் கோயிலுக்கான யாத்திரை ஜூலை மாதம் 1-ம் தேதி தொடங்கி ரக்‌ஷா பந்தன் பண்டிகை நடைபெறும் ஆகஸ்ட் 15-ம் தேதியுடன் முடிவடைகிறது. ஜம்மு - காஷ்மீர் மாநிலம் அனந்த்நாக் மாவட்டத்தின் பஹல்காம் மற்றும் கந்தர்பால் மாவட்டத்தின் பல்டால் ஆகிய இரண்டு பாதைகள் வழியாகப் பயணிகள் பயணம் மேற்கொண்டு அமர்நாத் குகைக் கோயில் பனி லிங்கத்தை தரிசிப்பார்கள்.  அமர்நாத் குகைக் கோயிலுக்கு எந்தவித வாகனங்களும் செல்லமுடியாது. நடந்துதான் பயணிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. அறுபது ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்து நடைபெற்றுவரும் இந்த யாத்திரையானது கரடுமுரடான மலைப்பாதை வழியாகப் பயணித்து சுமார் 3,888 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள குகைக் கோயிலை தரிசிக்க நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பக்தர்கள் பயணம் மேற்கொள்வர். 

சிவலிங்கம்

அமர்நாத் பயணத்துக்கான முன்பதிவு தற்போது நடைபெற்றுவரும் சூழலில், பாதுகாப்புப் பணிகளில் கவனம் செலுத்தத் தொடங்கியிருக்கிறது அரசு. தீவிரவாத அச்சுறுத்தல்கள் எழுந்துவரும் சூழ்நிலையில் 46 நாள் அமர்நாத் யாத்திரையில் எந்தவித அசம்பாவிதமும் நடைபெறாமல் இருக்க எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு மற்றும் சர்வதேச எல்லையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. இதற்கான ஆலோசனைக் கூட்டமும் அவ்வப்போது நடந்துவருவது குறிப்பிடத்தக்கது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க