திருமண வரம் அருளும் திருமணஞ்சேரி உத்வாகநாத சுவாமி கோயில் திருக்கல்யாணப் பெருவிழா | thirumanancherry thirukalyana ursavam

வெளியிடப்பட்ட நேரம்: 22:08 (09/05/2019)

கடைசி தொடர்பு:22:08 (09/05/2019)

திருமண வரம் அருளும் திருமணஞ்சேரி உத்வாகநாத சுவாமி கோயில் திருக்கல்யாணப் பெருவிழா

நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறை அருகேயுள்ள திருமணஞ்சேரியில் கோயில்கொண்டுள்ள கோகிலாம்பாள் சமேத கல்யாணசுந்தரர் சுவாமி (உத்வாகநாத சுவாமி) திருக்கோயிலில் திருக்கல்யாணப் பெருவிழா இன்று (9.5.2019) தொடங்கியது.

திருமணஞ்சேரி

திருமணப் பரிகாரத் தலமாக விளங்குவது திருமணஞ்சேரி. திருமணத் தடை உள்ளவர்கள் இந்தத் தலத்தில் வந்து கல்யாண சுந்தரரை வேண்டிக்கொள்ள, விரைவில் திருமணம் நடைபெறும் என்பது நம்பிக்கை. அப்படி வேண்டிக்கொண்டவர்கள், திருமணமானதும் மீண்டும் மணமாலையைக் கொண்டு வந்து பரிகார பூஜை செய்வதும் இங்கு நடைபெறும். வேண்டிக்கொள்பவர்களுக்குத் திருமண வரமருளும் ஈசனுக்குத் திருக்கல்யாண உற்சவம் ஆண்டுதோறும் சித்திரை மாதம் நடைபெறுவது வழக்கம்.

திருமணஞ்சேரி

இந்த ஆண்டுக்கான திருக்கல்யாணப் பெருவிழா இன்று தொடங்கியது. திருவிழாவின் முதல் நாளான இன்று கணபதி ஹோமம், உலக நன்மைக்காக வருண ஜபம் மற்றும் ஏகதச ருத்ராபிஷேகம் ஆகியன நடைபெற்றது. நாளை 10.5.2019 அன்று மங்கள ஸ்நானமும் 11.5.2019 அன்று காலை 6 மணிக்குக் காசியாத்திரையுடன் தொடங்கி உற்சவங்கள் நடத்தப்பட்டு பகல் 12 மணி முதல் 1 மணிக்குள் திருக்கல்யாண வைபவமும் நடைபெற உள்ளன. இறைவனை திருக்கல்யாணக் கோலத்தில் தரிசிக்க திருமணமாகாத இளைஞர்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறும் என்பது ஐதிகம். 
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க