வைகாசி மாத ராசிபலன் துலாம் முதல் மீனம் வரை 6 ராசிகளுக்கான ராசிபலன் #Astrology | rasipalan for the month of vaigasi from thulam to meenam

வெளியிடப்பட்ட நேரம்: 08:34 (11/05/2019)

கடைசி தொடர்பு:08:34 (11/05/2019)

வைகாசி மாத ராசிபலன் துலாம் முதல் மீனம் வரை 6 ராசிகளுக்கான ராசிபலன் #Astrology

தனுசு ராசி அன்பர்களே..! சுக்கிரன், சூரியன் ஆகியோரால் நன்மைகள் ஏற்படும். புதன் ஓரளவு நன்மை செய்வார். எடுத்த காரியம் வெற்றிகரமாக முடியும். திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் நடக்கும்.

வைகாசி மாத ராசிபலன் துலாம் முதல் மீனம் வரை 6 ராசிகளுக்கான ராசிபலன் #Astrology

முதல் ஆறு ராசிகளுக்கான பலன்களைப் படிக்க இங்கு க்ளிக் செய்யவும்

துலாம் முதல் மீனம் வரை 6 ராசிகளுக்கான வைகாசி மாத ராசிபலன் அதிர்ஷ்டக் குறிப்புகள் மற்றும் எளிய பரிகாரங்களுடன் கணித்துத் தந்திருக்கிறார் `ஜோதிட மாமணி' கிருஷ்ணதுளசி.


துலாம்: 

7-ல் சுக்கிரன்; 8-ல் சூரியன்; 8, 9-ல் புதன்; 9-ல் செவ்வாய், ராகு; 3-ல் சனி, கேது; 3, 2-ல் குரு

துலா ராசி துலாம்ராசி அன்பர்களே! 

சனி, கேது, குரு ஆகியோரால் நன்மைகள் ஏற்படும். புதனால் ஓரளவு அனுகூலமான பலன்களை எதிர்பார்க்கலாம். வருமானம் அதிகரிக்கும். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சியும் ஆதாயமும் ஏற்படு வதுடன், செலவுகளும் ஏற்படும். பணவரவுக்குக் குறைவிருக்காது. மாத மத்தியில் கணவன் - மனை விக்கிடையே இருந்த பிரச்னை மறைந்து அந்நியோன்யம் அதிகரிக்கும். ஆடம்பர வசதிகள் பெரு கும். மனதில் மகிழ்ச்சியும் உற்சாகமும் அதிகரிக்கும். நண்பர்களின் ஆதரவும், அவர்களால் ஆதாய மும் உண்டாகும். சிலருக்கு புதிய வாகனம் வாங்கும் வாய்ப்பு உண்டாகும். புதிய ஆடை ஆபரணங் களின் சேர்க்கை உண்டாகும். சிலருக்கு வசதியான புதிய வீட்டுக்குக் குடிபோகும் வாய்ப்பு உண்டா கும். வேலையின் காரணமாகப் பிரிந்திருந்த கணவன் - மனைவி ஒன்று சேருவதற்கான வாய்ப்பு ஏற்படும். பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும். அவர்களின் விருப்பத்தை நிறைவேற்று வீர்கள். தந்தையின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. தந்தைவழி உறவினர்கள் முரண்டு பிடித் தாலும் அனுசரித்துச் செல்வது நல்லது. அரசாங்கக் காரியங்கள் முடிவதில் இழுபறியான நிலை காணப்படும்.

அலுவலகத்தில் வழக்கமான நிலையே காணப்படும். மேலதிகாரிகள் அனுசரணையாக நடந்துகொள்வார்கள். எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். சிலருக்கு பணியின் காரணமாக வெளியூர்ப் பயணம் மேற்கொள்ள நேரிடலாம்.
தொழில், வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் அதிகரிக்கும். அரசாங்க வகையில் எதிர்பார்க்கும் காரியங்கள் தாமதமாக முடியும். சக

வியாபாரிகளிடம் கவனமாக இருக்கவும். பங்குதாரர்களால் ஆதாயம் ஏற்படக்கூடும்.
கலைத்துறையினருக்கு புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும். சக  கலைஞர்கள் அனுசரணையாக நடந்துகொள்வார்கள். 

மாணவர்கள் கல்வி வளர்ச்சிக்கான சூழ்நிலை அமையப் பெறுவர். போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெறுவர். ஆசிரியர்களின் வழிகாட்டுதலைப் பின்பற்றுவது நல்லது.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு கணவரின் அன்பும் ஆதரவும் மகிழ்ச்சி தரும். செலவுகளுக்குத் தேவையான பணம் கிடைக்கும். அலுவலகம் செல்லும் பெண்மணிகளுக்கு எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். சிலருக்கு புதிய ஆடை, ஆபரணங்களின் சேர்க்கை உண்டாகும்.

அதிர்ஷ்டம் தரும் நாள்கள்: மே 16, 17, 18, 21, 22, 23, 29, 30, 31 ஜூன் 7, 8, 9, 10, 13, 14
அதிர்ஷ்ட எண்கள்: 4, 5
சந்திராஷ்டம நாள்கள்: ஜூன் 2, 3, 4

பரிகாரம்: வெள்ளியன்று லட்சுமி தாயாருக்கு நெய்தீபம், சதுர்த்தியன்று விநாயகருக்கு அர்ச்சனை, தினமும் காலையில் சூரிய நமஸ்காரம் நன்மை சேர்க்கும்.


விருச்சிகம்:

6-ல் சுக்கிரன்; 7-ல் சூரியன்; 7, 8-ல் புதன்; 8-ல் செவ்வாய், ராகு; 2-ல் சனி, கேது; 2, 1-ல் குரு

விருச்சிகம் விருச்சிகராசி அன்பர்களே! 

இந்த மாதம் மிகவும் பொறுமையாக இருக்கவேண்டிய மாதம். அதிசாரமாக குரு 2-ல் இருக்கும்போது மாதம் பிறப்பதாலும், பின்னர் ஜன்ம குருவாக அமர்ந்தாலும் அவருடைய பார்வைகள் சுப பலம் பெற்றிருப்பதாலும், பெரும்பாலான கிரகங்கள் சாதகமாக இல்லாத நிலையிலும், தொடங்கிய காரியங்கள் வெற்றிகரமாக முடியும். அரசாங்கக் காரியங்கள் இழுபறியாக இருந்தாலும் முடிவில் சாதகமாகும். தாய்வழி உறவுகளால் நன்மைகள் ஏற்படும். தொலைதூரத்திலிருந்து எதிர்பார்த்த சுபச்செய்தி மாதம் கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு. கணவன் - மனைவிக்கிடையே சிறுசிறு கருத்துவேறுபாடுகள் ஏற்பட்டாலும், உடனே நீங்கிவிடும். ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்துச் செல்வதன் மூலம் பிரச்னைகளைத் தவிர்த்துவிடுவீர்கள். சுபநிகழ்ச்சிகள் நடைபெறுவதற்கான வாய்ப்புகள் கூடிவரும். சிலருக்கு வீடு, மனை வாங்கும் முயற்சி சாதகமாக முடியும். வாழ்க்கைத்துணையின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. சிலருக்குக் குடும்பத்துடன் ஆன்மிகப் பயணங்கள் மேற்கொண்டு, பிரசித்திபெற்ற வெளிமாநில புண்ணியத் தலங்களை தரிசிக்கும் வாய்ப்பு ஏற்படும். சிலருக்கு வெளிநாடு செல்வதற்கான விசா கிடைக்கும். பிள்ளைகளால் சில சங்கடங்களைச் சமாளிக்க வேண்டிவரும்.

பணியாளர்களுக்கு மகிழ்ச்சியான மாதம். எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும். அலுவலகத்தில் உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும். கோரிக்கைகள் நிறைவேறும். சக ஊழியர்கள் உதவிகரமாக இருப்பர். 

தொழிலதிபர்கள், வியாபாரிகள் மாதப் பிற்பகுதியில் சிறப்பான பலன்களைக் காணலாம். பணப்புழக்கம் நன்றாக இருக்கும்.  எதிர்பாராத பணவரவுடன் திடீர் செலவுகளும் ஏற்படும்.

கலைஞர்களுக்கு சக கலைஞர்களால் இருந்த தொல்லைகள் நீங்கி, புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். பொது நிகழ்ச்சிகளில் கௌரவிக்கப்படுவீர்கள்.

மாணவர்களுக்கு மனதில் தேவையற்ற குழப்பம் ஏற்படும். பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் ஆலோசனையைக் கேட்டுச் செயல்படவும்.

பெண்கள் குடும்பத்தாரிடம் நன்மதிப்பைப் பெறுவர். அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள்  அனுகூலமாக இருப்பர். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு மகிழ்ச்சியான மாதம்.  சுயதொழிலில் ஈடுபடும் பெண்களுக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.

அதிர்ஷ்டம் தரும் நாள்கள்: மே 15, 19, 20, 24, 25, 31 ஜூன் 1, 2, 3, 4, 9, 10, 11, 12
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3
சந்திராஷ்டம நாள்கள்: ஜூன் 5, 6

பரிகாரம்: தேய்பிறை சதுர்த்தியன்று விநாயகர் வழிபாடு, ஞாயிறு ராகு காலத்தில் காளிக்கு நெய் தீபம், சனிக்கிழமையன்று ஆஞ்சநேயருக்கு அர்ச்சனை செய்யவும்.

தனுசு:

5-ல் சுக்கிரன்; 6-ல் சூரியன்; 6, 7 -ல் புதன்; 7-ல் செவ்வாய், ராகு; 1 -ல் சனி, கேது; 1, 12 -ல் குரு

தனுசுதனுசுராசி அன்பர்களே!

சுக்கிரன், சூரியன் ஆகியோரால் நன்மைகள் ஏற்படும். புதன் ஓரளவு நன்மை செய்வார். எடுத்த காரியம் வெற்றிகரமாக முடியும். திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் நடக்கும். பகைவர்களின் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். பொருளாதார வளம் கூடும். மாத முற்பகுதியில் கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் இருந்தாலும், மாதப் பிற்பகுதியில் சிறுசிறு கருத்துவேறுபாடுகள் ஏற்படக்கூடும் என்பதால் பொறுமையுடன் ஒருவரையொருவர் அனுசரித்துச் செல்வது நல்லது. சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.  திருமண முயற்சிகளில் இருந்து வந்த தடைகள் நீங்கி, நல்ல வரன் அமையும். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும்.  பணவரவு திருப்தி தருவதாக இருக்கும். புதிய வாகனம் வாங்கலாம். நண்பர்கள் உறுதுணையாக இருப்பார்கள். ஆடம்பரப் பொருள்கள் வாங்குவீர்கள். உறவினர்கள் வருகையும், அவர்களால் நன்மையும் கிடைக்கும். பிள்ளைகள் வழியில் சொத்துச் சேர்க்கைக்கும், பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. வாழ்க்கைத்துணைவழி உறவினர்களால் குடும்பத்தில் சில குழப்பங்கள் ஏற்படக்கூடும் என்பதால், பொறுமையைக் கடைப்பிடிப்பது மிகவும் அவசியம்.

பணியாளர்கள் சிறப்பான வளர்ச்சி காணலாம். சம்பள உயர்வுக்குத் தடையில்லை. வேலையின் காரணமாக குடும்பத்தைவிட்டுப் பிரிந்திருந்த கணவன் - மனைவி ஒன்று சேருவர். பதவி உயர்வு உண்டு. எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். 

ராசிபலன்

தொழிலதிபர்கள், வியாபாரிகளுக்கு அலைச்சல் அதிகரித்தாலும், நல்ல வளார்ச்சியும் பணவரவும் இருக்கும். பங்குதாரர்கள் தக்க சமயத்தில் உதவுவர். சிலநேரங்களில் முயற்சிகளில் தடைகள் வரலாம். 

கலைஞர்களுக்கு முயற்சிகளில் இருந்த தடையும், மனதில் ஏற்பட்ட சோர்வும் மறையும். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். வசதி வாய்ப்புகள் பெருகும். 

மாணவர்கள் தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெறுவதோடு போட்டிகளிலும் வெற்றி வாகை சூடும் வல்லமை கிடைக்கும்.

பெண்களுக்கு  குடும்பத்தோடு புனிதத் தலங்களுக்கு சென்று வரும் வாய்ப்பு ஏற்படும். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு உத்தியோகத்தில் மதிப்பு அதிகரிக்கும். சக ஊழியர்கள் உதவிகரமாக இருப்பர்.

அதிர்ஷ்டம் தரும் நாள்கள்: மே 15, 16, 17, 18, 21, 22, 23, 26, 27, 28 ஜூன் 2, 3, 4, 5, 6, 11, 12, 13, 14
அதிர்ஷ்ட எண்கள்: 2, 6
சந்திராஷ்டம நாள்கள்:  ஜூன் 7, 8

பரிகாரம்: தேய்பிறை அஷ்டமியில் பைரவர் வழிபாடு, சனிக்கிழமையில் ஆஞ்சநேயருக்கு அர்ச்சனை செய்தும், ரோகிணியன்று கிருஷ்ணருக்கு நெய்தீபம் ஏற்றியும் வழிபடவும்.


மகரம்:

4-ல் சுக்கிரன்; 5-ல் சூரியன்; 5, 6-ல் புதன்; 6-ல் செவ்வாய், ராகு; 12-ல் சனி, கேது; 12, 11-ல் குரு

மகரம் மகரராசி அன்பர்களே! 

சுக்கிரன், செவ்வாய், ராகு, குரு ஆகியோர் சாதகமாக உள்ளனர். பெரியோர்களின் ஆதரவும், ஆலோசனையும் கிடைக்கும். மதிப்பு, மரியாதை சிறப்பாக இருக்கும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பர். குடும்பத் தேவைகள் பூர்த்தி ஆகும். பொன் பொருள் சேரும். உறவினர்களுடன் சிறு சிறு பிரச்னைகள் ஏற்பட்டு மறையும். கணவன் - மனைவி ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. உறவினர்கள் வகையில் வீண் விரோதம் வரலாம். அவர்களிடமிருந்து  ஒதுங்கி இருப்பது அவசியம். சிலருக்குத் தடைப்பட்ட திருமணம் கூடிவரும். சகோதர வகையில் ஏற்பட்ட பிரச்னைகள் நீங்கி, அவர்களுடன் சுமுகமான உறவு ஏற்படும். வழக்குகளில் வழக்கறிஞர்களின் ஆலோசனை கேட்டுச் செயல்படுவது அவசியம். சிலருக்கு எதிர்பாராத பயணங்கள் அதிகரிக்கும். பிள்ளைகள் பிடிவாதம் பிடித்தாலும் விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது. வெளிநாட்டில் இருக்கும் உறவினர்கள் மற்றும் நண்பர்களால் சில ஆதாயங்கள் ஏற்படக்கூடும். குலதெய்வ பிரார்த்தனைகளை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும். உடல் ஆரோக்கியம் மேம்படும். வெளியூர்ப் பயணம் மேற்கொள்ளும்போது கைப்பொருள்களை கவனமாகப் பார்த்துக்கொள்ளவும். புதிய மின்சார, மின்னணு சாதனங்கள் வாங்குவீர்கள்.

அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். சக பணியாளர்களிடம் போதுமான ஒத்துழைப்பை எதிர்பார்க்க முடியாது. அதிகாரிகளை அணுகும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். எதிர்பார்த்த சலுகைகள் கிடைப்பதில் தாமதம் ஏற்படும்.

தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த பலன் கிடைப்பதற்குக் கூடுதலாக உழைக்க வேண்டிவரும். முக்கிய முடிவுகளை எடுப்பதில் நிதானம் அவசியம். புதிய முதலீடுகளைத் தவிர்க்கவும். போட்டியாளர்களால் தொல்லைகள் ஏற்படக்கூடும்.

கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும். மாத முடிவில் முயற்சிகளில் தடையும், மனதில் சோர்வும் ஏற்படும். 
மாணவர்கள் நல்ல முன்னேற்றம் காணலாம். ஆசிரியர்களிடம் நற்பெயர் கிடைக்கும். போட்டி, பந்தயங்களில் வெற்றி ஏற்படும். 

பெண்கள் மகிழ்ச்சியுடன் காணப்படுவர். குடும்பத்தோடு புனித தலங்களுக்குச் சென்று வருவீர்கள். தடைப்பட்டு வந்த சுபநிகழ்ச்சிகள் கைகூடும். அலுவலகத்தில் உற்சாகமாகச் செயல்படுவீர்கள்.

அதிர்ஷ்டம் தரும் நாள்கள்: மே 16, 17, 18, 19, 20, 24, 25, 29, 30 ஜூன் 5, 6, 7, 8, 13, 14, 15
அதிர்ஷ்ட எண்கள்: 5, 6
சந்திராஷ்டம நாள்கள்:  ஜூன் 9, 10

பரிகாரம்: செவ்வாயன்று முருகனுக்குப் பால் அபிஷேகம், பிரதோஷத்தன்று நந்தீஸ்வரருக்கு அர்ச்சனை, தேய்பிறை சதுர்த்தி அன்று விநாயகர் வழிபாடு நலம் சேர்க்கும்.


கும்பம்:

3-ல் சுக்கிரன்; 4-ல் சூரியன்; 4, 5-ல் புதன்; 5-ல் செவ்வாய், ராகு; 11 -ல் சனி, கேது; 11, 10-ல் குரு

கும்பம்கும்பராசி அன்பர்களே!  

சுக்கிரன், சனி, கேது மாதத் தொடக்கத்தில் குரு நன்மை செய்வார்கள். செயலில் வெற்றி, பொருளாதாரச் செழிப்பு, மகிழ்ச்சி ஆகிய அனுகூலப் பலன்களைக் காணலாம். குடும்பத்தில் மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். உறவினர்களுடனான உறவு சுமுகமாகக் காணப்படும். குடும்பத்தோடு புனிதத் தலங்களுக்குச் சென்று வருவீர்கள். சிலருக்குப் பொன், பொருள் ஆகியவை சேரும். கணவன் - மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும்.  பெண்களால் ஆதாயம் உண்டாகும். விருந்து, விசேஷங்களில் கலந்துகொள்வீர்கள்.  பெரியோர்களின் ஆதரவும், ஆலோசனையும் கிடைக்கும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பர். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். தாய்வழி உறவுகளால் எதிர்பார்த்த நன்மைகள் நடக்கும். சுபநிகழ்ச்சிகளால் வீடு களைக்கட்டும். குலதெய்வப் பிரார்த்த னையை நிறைவேற்றும் சந்தர்ப்பம் உண்டாகும். தந்தையின் ஆலோசனை பயனுள்ளதாக இருப்ப துடன், முன்னேற்றத்துக்கும் வழிகாட்டுவதாக அமையும். சிலருக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்பு உண்டாகும். தந்தையின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. அரசாங்க அதிகாரிகளை அணுகும்போது மிகவும் பொறுமை அவசியம். தாய்வழி உறவினர்களால் சில சங்கடங்கள் ஏற்பட்டு நீங்கும்.

பணியாளர்கள் உற்சாகமாக பணிகளில் ஈடுபட்டு மேலதிகாரிகளின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். சிலருக்கு எதிர்பாராத பதவிஉயர்வு கிடைக்கும்.

தொழில், வியாபாரத்தில் பொருளாதார வளம் அதிகரிக்கும். பகைவர் இடையூறும், அரசு வகையில் அனுகூலமற்ற போக்கும் மறையும்.  திடீர் பணவரவு இருக்கும். போட்டிகளைச் சமாளித்து வெற்றி கொள்ளும் ஆற்றல் உண்டாகும். 

கலைஞர்கள் புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவார்கள். புகழ், பாராட்டு கிடைக்கும். சிலருக்கு அரசாங்கத்தின் சார்பில் விருதுகள் பெறக்கூடிய வாய்ப்பு ஏற்படும்.

மாணவர்கள்  சிரத்தை எடுத்துப் படிப்பது அவசியம். ஆசிரியர்களின் அறிவுரையைக் கேட்டு நடக்கவும்.  போட்டிகளில் வெற்றி கிடைக்கும்.

பெண்களுக்கு குடும்பத்தில் ஆனந்தம் அதிகரிக்கும். தோழிகள் ஆதரவுடன் செயல்படுவர். அக்கம்பக்கத்தினர் உதவிகரமாக இருப்பர்.  கணவன் மற்றும் குடும்பத்தாரிடம் நன்மதிப்பைப் பெறலாம். வேலைக்குச் செல்லும் பெண்கள் சிறப்பான பலன் பெறுவர். சுயதொழில் செய்யும் பெண்களுக்கு லாபம் அதிகரிக்கும். 

அதிர்ஷ்டம் தரும் நாள்கள்: மே 19, 20, 21, 22, 23, 26, 27, 28, 31 ஜூன் 1, 7, 8, 9, 10, 15
அதிர்ஷ்ட எண்கள்: 3, 7
சந்திராஷ்டம நாள்கள்: மே 15, ஜூன் 11, 12

பரிகாரம்: செவ்வாய்க்கிழமை அன்று முருகனுக்கு அபிஷேகம், விநாயகருக்கு அறுகம்புல் மாலை அணிவித்து நெய்தீபம் ஏற்றி வழிபட நன்மைகள் அதிகரிக்கும்.


மீனம்:

2-ல் சுக்கிரன்; 3-ல் சூரியன்; 3, 4-ல் புதன்; 4-ல் செவ்வாய், ராகு; 10-ல் சனி, கேது; 10, 9-ல் குரு

மீனம் மீனராசி அன்பர்களே! 

சூரியன், சுக்கிரன், குரு ஆகியோர் அனுகூலமாக உள்ளனர். புதனும் ஓரளவு நன்மை செய்வார். பணப்புழக்கம் அதிகரிக்கும். உறவினர்களிடையே ஏற்பட்டிருந்த அவப்பெயர் நீங்கும். செல்வாக்கு அதிகரிக்கும். சுபநிகழ்ச்சிகளால் மனதில் உற்சாகம் ஏற்படும். பகைவர்களால் இருந்து வந்த இடையூறுகள் மறையும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். திடீர் பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. பழுதான பழைய வாகனத்தை மாற்றிவிட்டு, புதிய வாகனம் வாங்குவீர்கள். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கக்கூடும். ஆனால், உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. கூடுமானவரை தொலைதூரப் பயணங்களைத் தவிர்க்கவும். உங்களைத் தவறாகப் புரிந்துகொண்ட உறவினர்கள், தங்கள் தவற்றை உணர்ந்து, வலிய வந்து மன்னிப்புக் கேட்பார்கள். நண்பர்கள் உங்கள் முயற்சி களுக்குப் பக்கபலமாக இருப்பார்கள். தந்தைவழியில் உங்களுக்குச் சேரவேண்டிய சொத்துகள் கிடைப்பதற்கான வாய்ப்பு கனிந்து வரும். சொந்த ஊரிலுள்ள குலதெய்வக் கோயில் திருப்பணி களில் கலந்துகொண்டு உதவி செய்வீர்கள். வாழ்க்கைத்துணைவழி உறவினர்கள் வருகை மகிழ்ச்சியுடன் செலவுகளையும் ஏற்படுத்துவதாக இருக்கும். தந்தையுடன் ஏற்பட்டிருந்த கருத்துவேறு பாடுகள் நீங்கும். அவரிடம் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். 

அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். ஆனால், இதுவரை இருந்து வந்த அவப்பெயர் நீங்கி, செல்வாக்கு அதிகரிக்கும். வீண் மனக்கவலை மறையும். அதிகாரிகளை அனுசரித்துச் செல்லவும். ஜோதிடமாமணி கிருஷ்ண துளசி

 தொழிலதிபர்கள், வியாபாரிகளுக்குப் பொருளாதார வளம் கூடும். லாபம் சிறப்பாக இருக்கும்.  ஆனால், போட்டியாளர்களால் இடையூறு வரலாம். கணக்குகளைச் சரியாக வைத்துக்கொள்ளவும். 

கலைஞர்களுக்குப் புகழ், பாராட்டு, புதிய ஒப்பந்தம் கிடைக்கும். சக கலைஞர்கள் மூலம் ஆதாயம் பெறலாம். 
மாணவர்கள் அலட்சியமாக இருக்கக் கூடாது  சிரத்தை எடுத்துப் படித்தால்தான் பலன் கிடைக்கும். ஆசிரியரின் ஆலோசனை கிடைக்கும். போட்டிகளில் வெற்றி காணலாம்.

பெண்கள் குடும்பத்தோடு புனிதத் தலங்களுக்கு சென்று வருவர். வாழ்க்கையில் ஆனந்தம் அதிகரிக்கும். வேலை பார்ப்பவர்கள் கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். சுய தொழில் செய்யும் பெண்களுக்கு நல்ல லாபம் இருக்கும்.

அதிர்ஷ்டம் தரும் நாள்கள்: மே 15, 21, 22, 23, 24, 25, 29, 30 ஜூன் 2, 3, 4, 9, 10, 11, 12
அதிர்ஷ்ட எண்கள்: 3, 9
சந்திராஷ்டம நாள்கள்: மே 16, 17, 18, ஜூன் 13, 14

பரிகாரம்: வெள்ளியன்று மாலையில் லட்சுமி வழிபாடு, வியாழனன்று தட்சிணாமூர்த்திக்கு அர்ச்சனை செய்வது நன்மைகளை அதிகரிக்கும். 

முதல் ஆறு ராசிகளுக்கான பலன்களைப் படிக்க இங்கு க்ளிக் செய்யவும்


டிரெண்டிங் @ விகடன்