வைகாசி மாத ராசிபலன் மேஷம் முதல் கன்னி வரை 6 ராசிகளுக்கான ராசிபலன் #Astrology | rasipalan for the month of vaigasi from aries to virgo

வெளியிடப்பட்ட நேரம்: 08:15 (11/05/2019)

கடைசி தொடர்பு:08:42 (11/05/2019)

வைகாசி மாத ராசிபலன் மேஷம் முதல் கன்னி வரை 6 ராசிகளுக்கான ராசிபலன் #Astrology

வைகாசி மாத ராசிபலன் மேஷம் முதல் கன்னி வரை 6 ராசிகளுக்கான ராசிபலன் #Astrology

மேஷம் முதல் கன்னி வரை 6 ராசிகளுக்கான வைகாசி மாத ராசிபலன் அதிர்ஷ்டக் குறிப்புகள் மற்றும் எளிய பரிகாரங்களுடன் கணித்துத் தந்திருக்கிறார் `ஜோதிட மாமணி' கிருஷ்ணதுளசி.

மேஷம்: 

1-ல் சுக்கிரன்; 2-ல் சூரியன்; 2, 3-ல் புதன்; 3-ல் செவ்வாய், ராகு; 9-ல் சனி, கேது; 9, 8-ல் குரு

 
மேஷ ராசி

மேஷராசி அன்பர்களே!

சுக்கிரன், செவ்வாய், ராகு ஆகியோர் நன்மை செய்வார்கள். புதனால் ஓரளவு அனுகூலம் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலையே காணப்படும். மாதத் தொடக்கத்தில் அதிசார குரு 9-ல் இருப்பதால், பணவரவு திருப்தி தருவதாக இருக்கும். ஆனால், குடும்பத்தில் உறவினர்களுடன் வீண் விவாதங்கள் ஏற்படக்கூடும் என்பதால், சற்று பொறுமையைக் கடைப்பிடிக்க வேண்டியது அவசியம். கணவன் - மனைவிக்கிடையே அவ்வப்போது கருத்து வேறுபாடு ஏற்படக்கூடும் என்பதால், ஒருவரையொருவர் அனுசரித்துச் செல்வது நல்லது. ஆனாலும், குடும்பத்தில் மகிழ்ச்சியான நிலையே காணப்படும். சுபநிகழ்ச்சிகளில் அடுத்தடுத்து கலந்துகொள்ளும் வாய்ப்பு ஏற்படும். புதிய ஆடை, ஆபரணங்களின் சேர்க்கையும் சிலருக்கு ஏற்படக்கூடும். புதிய மின்சார, மின்னணு சாதனங்கள் வாங்குவீர்கள். உறவினர்களால் ஆதாயம் உண்டாகும். குடும்ப உறுப்பினர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். சிலருக்கு வெளி மாநிலங்களிலுள்ள புண்ணியத் தலங்களை தரிசிக்கும் வாய்ப்பும் ஏற்படக்கூடும். குடும்பத்துடன் சுற்றுலாச் சென்று வருவதற்கான வாய்ப்பும் சிலருக்கு ஏற்படும். பிள்ளைகளின் வேலை மற்றும் படிப்புக்காக சிலரின் சிபாரிசை நாட வேண்டிவரும். புதிய வாகனம் வாங்கும் வாய்ப்பு சிலருக்கு ஏற்படும்.
அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். உங்கள் வேலைகளில் மிகுந்த கவனம் தேவை. சிலருக்கு இடமாற்றமும் ஏற்படக்கூடும். அதிகாரிகளின் ஆதரவை எதிர்பார்க்க முடியாது. மாதப் பிற்பகுதியில் அரசுப் பணியில் இருப்பவர்கள் தங்கள் பணிகளில் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். 

தொழில், வியாபாரம் சுமாராகத்தான் இருக்கும். சக போட்டியாளர்களால் மறைமுகப் பிரச்னைகள் ஏற்பட்டாலும், அதனால் பாதிப்பு எதுவும் இருக்காது. பற்று வரவில் தவறு ஏற்படாமல் பார்த்துக்கொள்ளவும். 

கலைத்துறையைச் சேர்ந்தவர்களுக்கு எதிர்பார்த்தபடியே வாய்ப்புகள் கிடைக்கும். வருமானமும் அதிகரிக்கும். சிலருக்கு அரசாங்கத்தின் பாராட்டும் விருதுகளும் கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு. 

மாணவர்கள் கூடுதல் முயற்சி மேற்கொண்டால்தான் மேற்படிப்பைத் தொடர முடியும். அதற்கு ஆசிரியர் மற்றும் பெற்றோரின் ஆலோசனை பயனுள்ளதாக இருக்கும்.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு மகிழ்ச்சி தரும் மாதமாக இருக்கும். புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கும் யோகம் உண்டாகும். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு அலுவலகத்தில் எதிர்பார்த்த பதவிஉயர்வு, ஊதியஉயர்வு போன்ற சலுகைகள் கிடைக்கக்கூடும்.

அதிர்ஷ்டம் தரும் நாள்கள்: மே 15, 16, 17, 18, 24, 25, 26, 27, 28, 31 ஜூன் 1, 5, 6, 11, 12, 13, 14
அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 7
சந்திராஷ்டம நாள்கள்: மே 19, 20, ஜூன் 15

பரிகாரம்: முருகப்பெருமான் வழிபாடும், கந்தசஷ்டிக் கவசம் பாராயணம் செய்வதும் நன்மை தரும்.

 

ரிஷபம்: 

12-ல் சுக்கிரன்; 1-ல் சூரியன்; 1, 2-ல் புதன்; 2-ல் செவ்வாய், ராகு; 8-ல் சனி, கேது; 8, 7-ல் குரு


ரிஷபம்

ரிஷபராசி அன்பர்களே!

சுக்கிரன், குரு ஆகியோரால் நற்பலன்கள் ஏற்படும். புதனால் ஓரளவு அனுகூலம் உண்டு.
ராகு, சுக்கிரன் ஆகியோர் மாதம் முழுவதும் நற்பலன்களைத் தருவார்கள். மற்ற கிரகங்களால் அனுகூலமான பலன்கள் ஏற்படும் என்று சொல்வதற்கில்லை. குடும்பத்தில் உள்ளவர்களாலும் அக்கம்பக்கத்தில் உள்ளவர்களாலும் சிறு சிறு பிரச்னைகள் ஏற்படக்கூடும். மிகவும் பொறுமை யாக இருக்கவேண்டியது அவசியம். எதையும் சமாளிக்கும் மனஉறுதி அதிகரிக்கும். சுக்கிரன் சாதகமாக இருப்பதால் புதிய ஆடை, ஆபரணங்களின் சேர்க்கை ஏற்படும். சிலருக்கு  வாழ்க்கைத்துணைவழி உறவினர்களால் பொருள்சேர்க்கைக்கும் பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. உறவினர், நண்பர் வீட்டு விருந்து விசேஷங்களுக்குச் சென்று வருவீர்கள். செல்வாக்கும் கௌரவமும் அதிகரிக்கும். கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்திருந்த கணவன் - மனைவி ஒன்று சேரும் வாய்ப்பு உண்டாகும். வாழ்க்கைத்துணையால் ஆதாயம் உண்டாகும். சிலருக்குக் குழந்தை பாக்கியம் ஏற்படக்கூடும். குடும்பத்தினரின் அவசியத் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். சிலர் பழைய வாகனத்தை மாற்றி புதிய வாகனம் வாங்குவீர்கள். பிள்ளைகளின் கல்வி மற்றும் திருமண முயற்சிகளில் சற்று சிரமப் பட்டே அனுகூலமான பலன்களை அடைய முடியும். பிள்ளைகளின் பிடிவாதப் போக்கு மாறும். தாய்மாமன் வழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும்.

அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். நேரம் காலம் பார்க்காமல் உழைக்கவேண்டி யிருக்கும். உங்கள் வேலைகளை நீங்களே செய்துகொள்வது நல்லது. அதிகாரிகளிடம் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும்.

தொழில் வியாபாரத்தில் முன்னேற்றமான நிலை உண்டாகும். புதிய முயற்சிகள் சாதகமாக முடியும். வியாபாரத்தை விரிவுபடுத்துவதற்கான வங்கிக் கடனுதவி கிடைக்கும். எதிர்பார்த்த அரசாங்க சலுகைகள் கிடைக்கும்.

மாணவர்கள் மேற்படிப்பில் சேர்வதற்கு அதிக சிரத்தை எடுத்துக்கொள்ள வேண்டும். சிலரின் சிபாரிசும் தேவைப்படும். ஆனால், படிப்பதற்கான நிதியுதவி கிடைப்பதில் தடையிருக்காது.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு குடும்ப உறுப்பினர்களின் அன்பும் ஆதரவும் கிடைக்கும். அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் அனுசரணையாக நடந்துகொள்வார்கள். அலுவலகம் செல்லும் பெண்கள் அனைத்து விஷயங்களிலும் பொறுமையைக் கடைப்பிடிக்க வேண்டியது அவசியம். 

அதிர்ஷ்டம் தரும் நாள்கள்: மே 16, 17, 18, 19, 20, 26, 27, 28, 29, 30 ஜூன் 2, 3, 4, 7, 8, 13, 14, 15
அதிர்ஷ்ட எண்கள்: 4, 7
சந்திராஷ்டம நாள்கள்: மே 21, 22, 23

பரிகாரம்: சிவபெருமான் வழிபாடும், மகாலட்சுமி வழிபாடும் சுபபலன்களை அதிகரிக்கும்.


மிதுனம்:

11-ல் சுக்கிரன்; 12-ல் சூரியன்; 12, 1-ல் புதன்; 1-ல் செவ்வாய், ராகு; 7-ல் சனி, கேது; 7, 6 -ல் குரு

மிதுனம்

மிதுனராசி அன்பர்களே!  

சுக்கிரன் மட்டுமே சாதகமாக இருக்கிறார். ஆனால், குரு அதிசாரமாக 9-ல் இருக்கும்போது மாதம் பிறப்பதால், குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். திருமணம், வளைகாப்பு போன்ற சுபநிகழ்ச்சிகள் நடைபெறும். பணப்புழக்கம் அதிகரிக்கும். இழுபறியாகி வந்த அரசாங்கக் காரியங்கள் சாதகமாக முடியும் . உறவினர்கள் வருகையால் ஆதாயம் உண்டாகும். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கக்கூடும். தடைப்பட்ட புதிய முயற்சிகள் இனி சாதகமாக முடியும். வீட்டில் பொன்,பொருள் சேரும் வாய்ப்பும் ஏற்படும். பிள்ளைகளால் மகிழ்ச்சியும் பெருமையும் உண்டாகும். கணவன் - மனைவிக்கிடையில் அந்நியோன்யம் அதிகரிக்கும். பிரிந்திருந்த கணவன் - மனைவி ஒன்று சேர்வதற்கான சந்தர்ப்பம் ஏற்படும். குடும்பத்தினருடன் வெளி மாநிலங்களிலுள்ள புகழ்பெற்ற கோயில்களுக்கும் சுற்றுலாத் தலங்களுக்கும் சென்று வரும் வாய்ப்பு ஏற்படும். தந்தையுடன் ஏற்பட்டிருந்த கருத்துவேறுபாடு நீங்கும். தந்தைவழி உறவினர்களால் அனுகூலம் உண்டாகும். அக்கம்பக்கத்தில் இருப்பவர்களால் தேவையற்ற பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்பதால் பொறுமையைக் கடைப்பிடிக்கவும். இளைய சகோதரர்களை அனுசரித்துச் செல்லவும். முக்கிய முடிவுகளில் குடும்பப் பெரியவர்களின் ஆலோசனை கேட்டுச் செய்வது நல்லது.

ராசிபலன்

அலுவலகத்தில் எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும். அதிகாரிகளின் ஆதரவு அமோகமாக இருக்கும். சக ஊழியர்கள் உங்கள் பணிகளில் உதவி செய்வார்கள். நிர்வாகத்தினரிடம் வைத்த கோரிக்கை நிறைவேறும்.

தொழிலதிபர்கள், வியாபாரிகளுக்குத் தொழில் அபிவிருத்தி அடையும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் அதிகரிக்கும்.  அரசு வகையில் எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். பற்று வரவு சுமுகமாக நடைபெறும்.

கலைத்துறையினருக்கு எதிர்பார்த்த புகழ், பாராட்டு கிடைக்கும். வசதிகள் பெருகும். சக கலைஞர்கள் அனுசரணையாக நடந்துகொள்வார்கள்.

மாணவர்களுக்குக் கல்வியில் நல்ல முன்னேற்றம் காணலாம். சிறந்த மதிப்பெண்களுடன் தேர்வுகளில்  தேர்ச்சி பெறுவீர்கள். விரும்பிய கல்வி நிறுவனத்தில் சேர்ந்து படிக்கும் வாய்ப்பு ஏற்படும்.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு பிரச்னை எதுவும் இருக்காது. தேவையான பணம் கிடைக்கும். உறவினர்களிடம் மதிப்பு மரியாதை அதிகரிக்கும். வேலைக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு மேலதிகாரிகளின் பாராட்டுகள் கிடைக்கும்.

அதிர்ஷ்டம் தரும் நாள்கள்: மே 19, 20, 21, 22 23, 29, 30, 31, ஜூன் 1, 5, 6, 9, 10, 15
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5
சந்திராஷ்டம நாள்கள்: மே 24, 25

பரிகாரம்: வெள்ளிக்கிழமை ராகுகாலத்தில் துர்கைக்கு 9 நெய்தீபம் ஏற்றி வழிபட நன்மைகள் அதிகரிக்கும்.


கடகம்:

10-ல் சுக்கிரன்; 11-ல் சூரியன்; 11, 12-ல் புதன்; 12-ல் செவ்வாய், ராகு; 6-ல் சனி, கேது; 6, 5-ல் குரு


கடகம்

கடகராசி அன்பர்களே!

லாபஸ்தானத்தில் இருக்கும் சூரியன், சுக்கிரன், சனி, கேது, குரு ஆகியோரால் நன்மைகள் ஏற்படும். பணவரவு தாராளமாக இருக்கும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. காரியங்களில் இருந்து வந்த தடை, தாமதங்கள் நீங்குவதுடன் புதிய முயற்சிகளும் அனுகூலமாக முடியும். செல்வாக்கு அதிகரிக்கும். திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் நடைபெறுவதற்கான வாய்ப்பு ஏற்படும். வீட்டில் இருந்த பிரச்னை, உறவினர்களிடையே கருத்து வேறுபாடு முதலியன நீங்கும். அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும். தந்தையுடன் இருந்து வந்த கருத்துவேறுபாடுகள் நீங்கும். தந்தையிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். பிதுர்வழிச் சொத்தில் இருந்த பிரச்னை சுமுகமாக முடியும். சிலருக்குப் பழைய வாகனத்தை மாற்றிவிட்டு புதிய வாகனம் வாங்கும் வாய்ப்பு உண்டாகும். பிரிந்த தம்பதி ஒன்று சேருவர். கணவன் - மனைவிக்கிடையே பாசம் மேலோங்கும். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். சகோதரர்களுடன் அனுசரணையாக நடந்துகொள்ளவும். அவர்களால் ஆதாயமும் உண்டாகும். நீண்டநாளாகச் செலுத்த நினைத்த குலதெய்வப் பிரார்த்தனையை செலுத்தி முடிப்பீர்கள். பிள்ளைகளால் மகிழ்ச்சியும் பெருமையும் உண்டாகும்.

பணியாளர்களுக்கு அலுவலகத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். பணிச்சுமை குறைவதால், உற்சாகமாகக் காணப்படுவீர்கள். நிர்வாகத்திடம் முக்கிய கோரிக்கை வைப்பதற்குச் சாதகமான மாதம். அலுவலகத்தில் எதிர்பார்த்த கடனுதவி கிடைக்கும்.
தொழிலதிபர்கள், வியாபாரிகளுக்கு அரசின் சலுகை, வங்கிக் கடன் கிடைக்கும். பணியாளர்களின் ஒத்துழைப்பு நன்றாக இருக்கும். அவர்களின் சாமர்த்தியத்தால் விற்பனையும் லாபமும் அதிகரிக்கும்.

கலைஞர்களுக்கு நற்பெயரும் புகழும் உண்டாகும். அரசாங்க விருதுகள் கிடைக்கும். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். சக கலைஞர்களால் ஏற்பட்ட மறைமுகத் தொல்லைகள் விலகும்.

மாணவர்கள் அதிக சிரத்தை எடுத்துப் படிக்க வேண்டியதிருக்கும். போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறுவதற்குக் கடுமையாக உழைத்துப் படிக்கவேண்டியிருக்கும்.

பெண்கள் கணவர் மற்றும் குடும்பத்தாரின் அன்பைப் பெறுவர். மதிப்பு மரியாதை அதிகரிக்கும். உறவினர்களிடம் சுமூக நிலை ஏற்படும்.  புத்தாடை, நகை வாங்கலாம். விருந்து, விழா என்று சென்று வருவீர்கள். அலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலையே காணப்படும்.

அதிர்ஷ்டம் தரும் நாள்கள்: மே 15, 21, 22, 23, 24, 25, 31, ஜூன் 1, 2, 3, 4, 7, 8, 11, 12
அதிர்ஷ்ட எண்கள்: 1, 7
சந்திராஷ்டம நாள்கள்: மே 26, 27, 28

பரிகாரம்: திங்கள்கிழமைகளில் சிவபெருமானுக்கு வில்வத்தால் அர்ச்சனை செய்வதும், விநாயகருக்கு அறுகம்புல்லால் அர்ச்சனை செய்வதும் நன்மை தரும்.


சிம்மம்:

9-ல் சுக்கிரன்; 10-ல் சூரியன்; 10, 11-ல் புதன்; 11-ல் செவ்வாய், ராகு; 5-ல் சனி, கேது; 5, 4-ல் குரு

சிம்மம்சிம்மராசி அன்பர்களே!

சூரியன், புதன், சுக்கிரன் மாதத் தொடக்கத்தில் குரு ஆகியோரால் நன்மைகள் ஏற்படும். தடைகளை முறியடித்து சாதனை படைப்பீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். அவசியத் தேவைகள் பூர்த்தியாகும்.  திருமண முயற்சிகள் சாதகமாக முடியும். குடும்பத்தில் ஆடம்பர வசதிகள் பெருகும். குடும்பத்தில் இருந்து வந்த பிரச்னைகள் மறையும். கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். உறவினர்கள் உதவிகரமாகச் செயல்படுவர். உங்களைத் தவறாகப் புரிந்துகொண்ட உறவினர்கள் தங்கள் தவற்றை உணர்ந்து திரும்பி வந்து அன்பு பாராட்டுவார்கள். கருத்துவேறுபாடு காரணமாகப் பிரிந்திருந்த கணவன் - மனைவி ஒன்று சேரும் வாய்ப்பு கனிந்து வரும். விழாக்களிலும் விருந்துகளிலும் பங்கேற்கும் வாய்ப்பு ஏற்படும். மாதப் பிற்பகுதியில் உறவினர்களால் மனக்கசப்பு தரும் சம்பவங்கள் நடைபெறக்கூடும் என்பதால், கூடுமானவரை பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது. சிலருக்கு புதிய வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். சகோதரர்களால் காரியங்களில் அனுகூலம் உண்டாகும். தாய்வழி உறவினர்களால் சில அனுகூலப் பலன்கள் ஏற்படும். தாய்மாமன் வழியில் சுபச் செய்தி கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு. சிலருக்குக் குடும்பப் பொறுப்புகளை நிறைவேற்ற தொலைதூரப் பயணங்களை மேற்கொள்ள நேரிடும்.

பணியாளர்களுக்கு இதுவரை இருந்த அவப்பெயர் மறையும். சக ஊழியர்களிடையே உங்கள் செல்வாக்கு உயரும். நிர்வாகத்தினரிடம் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.

தொழில், வியாபாரம் விறுவிறுப்பாக நடைபெறும். லாபம் அதிகரிக்கும். ஷேர் வர்த்தகத்தில் லாபம் கிடைக்கும். மாதப் பிற்பகுதியில் வியாபாரம் விருத்தியடையும்.

கலைத்துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். வருமானம் திருப்தி தரும். சக கலைஞர்களிடையே உங்கள் கௌரவம் உயரும்.

 மாணவர்களுக்கு மேற்படிப்பில் விரும்பிய பிரிவில் சேரும் வாய்ப்பு கிடைக்கும். சிலருக்கு வெளிநாடு சென்று படிக்கும் வாய்ப்பு கிடைக்கும். 

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு குடும்ப உறுப்பினர்களால் புதிய ஆடை, ஆபரண சேர்க்கை  உண்டாகும். அலுவலகத்துக்குச் செல்லும் பெண்களுக்கு மகிழ்ச்சியான சூழ்நிலையே காணப்படும். புதிய பதவி தேடி வரும்.

அதிர்ஷ்டம் தரும் நாள்கள்: மே 16, 17, 18, 24, 25, 26, 27, 28 ஜூன் 2, 3, 4, 5, 6, 9, 10, 13, 14
அதிர்ஷ்ட எண்கள்: 2,9
சந்திராஷ்டம நாள்கள்: மே 29, 30

பரிகாரம்: மகாலட்சுமி தாயாருக்கு நெய்தீபம் ஏற்றுவதும், கனகதாரா ஸ்தோத்திரம் பாராயணம் செய்வதும் அளவற்ற நன்மை தரும்.


கன்னி:

8-ல் சுக்கிரன்; 9-ல் சூரியன்; 9, 10-ல் புதன்; 10-ல் செவ்வாய், ராகு; 4 -ல் சனி, கேது; 4, 3-ல் குரு

கன்னி கன்னிராசி அன்பர்களே!

சுக்கிரன் மற்றும் செவ்வாய் ஆகியோர் மட்டுமே சாதகமாக உள்ளார்கள். துணிச்சல் பிறக்கும். நீண்ட நாள் கனவு நல்லபடி நிறைவேறும். தொடங்கிய காரியம் அனுகூலமாக முடியும். எதிரிகள் அடங்கிப் போவார்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியும் உற்சாகமுமான சூழ்நிலை உருவாகும். உங்கள் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். புத்தாடை, அணிகலன்கள் வாங்க யோகமுண்டாகும். பிள்ளைகளால் மகிழ்ச்சியும் பெருமையும் கிடைக்கும். கணவன்-மனைவிக்கிடையே அன்பு மேலோங்கும். பெண்கள் வகையில் நற்பலனை எதிர்பார்க்கலாம். பிள்ளைகளின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். வாழ்க்கைத்துணைவழி உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவிக் கிடைக்கும். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். சிலருக்குப் புதிய ஆடை, ஆபரணங்களின் சேர்க்கை உண்டாகும். எதிரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும். பழைய சொத்தை விற்றுவிட்டு புதிய சொத்து வாங்கும் வாய்ப்பு ஏற்படும். தாயாரின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. தாய்வழி உறவினர்களால் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும். இளைய சகோதர வகையில் தேவையற்ற செலவுகள் ஏற்படக்கூடும். அவர்களுடன் இணக்கமாக நடந்துகொள்ளவும்.

அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். பணிகளில் கவனம் தேவை. சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். அதிகாரிகள் அனுசரணையாக நடந்துகொள்வார்கள். எதிர்பார்த்த சலுகைகள் கிடைப்பதுடன், விரும்பிய இடமாற்றமும் கிடைக்கும்.
தொழில், வியாபாரத்தில் அனுகூலமான போக்கு காணப்படும். விற்பனையும் லாபமும் எதிர்பார்த்தபடியே இருக்கும். சுயதொழிலில் ஈடுபட்டிருக்கும் பெண்களுக்கு வளர்ச்சிக்கான வழி பிறக்கும்.

கலைத்துறையினருக்குப் பெரிய நிறுவனங்களிலிருந்து அழைப்பு வரும். கிடைக்கும் வாய்ப்புகளைத் தவறாமல் பயன்படுத்திக்கொண்டு வளர்ச்சிப் பாதையில் செல்வீர்கள். விருதுகள் கிடைப்பதற்கும் வாய்ப்பு உண்டு,

மாணவர்கள் கல்வியில் சிறப்படைவர். தேர்வில் நல்ல மதிப்பெண், போட்டிகளில் வெற்றி கிடைக்கும். மேல்படிப்பில் விரும்பிய பாடம் கிடைக்கும். சிலர் வெளிநாடு சென்று படிக்க வாய்ப்புண்டாகும்.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு உற்சாகம் தரும் மாதம். குடும்ப உறுப்பினர் களிடையே உங்கள் மீதான அன்பும் அக்கறையும் அதிகரிக்கும். அலுவலகத்துக்குச் செல்லும் பெண்களுக்கு பணிகளில் கூடுதல் கவனம் தேவை. சிலருக்கு புதிய பதவி தேடி வரும்.

அதிர்ஷ்டம் தரும் நாள்கள்: மே 15, 19, 20, 26, 27, 28, 29, 30 ஜூன் 5, 6, 7, 8, 11, 12, 15
அதிர்ஷ்ட எண்கள்: 2, 4
சந்திராஷ்டம நாள்கள்: மே 31, ஜூன் 1

பரிகாரம்: வேங்கடேச பெருமாளுக்கு அர்ச்சனை செய்து வழிபடுவதும், முருகப்பெருமானுக்கு செவ்வரளிப் பூக்களால் அர்ச்சனை செய்வதும் நன்மை தரும்.

துலாம் முதல் மீனம் வரை 6 ராசிகளுக்கான வைகாசி மாத ராசிபலன் அதிர்ஷ்டக் குறிப்புகள் மற்றும் எளிய பரிகாரங்களைப் படிக்க இங்கு க்ளிக் செய்யவும்

 


டிரெண்டிங் @ விகடன்