கல்வி வரம் அருளும் தேவராஜ ஸ்வாமி திருக்கோயில் பிரம்மோற்சவம்... களைகட்டும் காஞ்சிபுரம்! | brahmotsavam at kancheepuram

வெளியிடப்பட்ட நேரம்: 21:00 (15/05/2019)

கடைசி தொடர்பு:21:00 (15/05/2019)

கல்வி வரம் அருளும் தேவராஜ ஸ்வாமி திருக்கோயில் பிரம்மோற்சவம்... களைகட்டும் காஞ்சிபுரம்!

பிரம்மோற்சவம் என்றாலே நினைவுக்கு வரும் தலம் காஞ்சிபுரம். பிரம்மதேவரின் தவத்துக்கு இரங்கிப் பெருமாள் தரிசனம் கொடுக்க, பிரம்மதேவரே முன்னின்று உற்சவம் செய்வித்த தலம் என்னும் சிறப்பு பெற்ற தலம் ஶ்ரீ தேவராஜ ஸ்வாமிகள் திருத்தலம். இந்த பிரம்மோற்சவத்தின் மற்றொரு சிறப்பு, உற்சவத்தின் மூன்றாம் நாள் பெருமாளே, ஊர் முழுவதும் வலம் வந்து அனைவரையும் தாம்பூலம் வைத்து உற்சவத்துக்கு அழைப்பதுதான்.

பிரம்மோற்சவம்


இந்தத் தலம் பல்வேறு சிறப்புகளை உடையது. நாரதர், பிரம்மா, பிருகு முனிவர், கஜேந்திரன் ஆகியோருக்கு தரிசனம் தந்து ஆட்கொண்ட தலம். தேவராஜப் பெருமாளை வழிபட கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கலாம். 

இங்கு, பெருந்தேவித் தாயார் கருணையின் உருவாகத் தனிச் சந்நிதியில் அருள்பாலிக்கிறார். இவரை வழிபட்டால், பெண்களின் உடல் சார்ந்த நோய்கள் தீரும் என்று நம்பப்படுகிறது. இங்கிருக்கும் சுதர்சன ஆழ்வாரை சேவிக்க திருமணத் தடை நீங்கும், வழக்கில் வெற்றிகிட்டும் என்று சொல்லப்படுகிறது.    

காஞ்சிபுரம்

இத்தனை சிறப்புகளை உடைய திருக்கோயிலில், ஆண்டுதோறும் வைகாசி மாதம் பிரம்மோற்சவம் நடைபெறும். இந்த ஆண்டு பிரம்மோற்சவம் வரும் 17.5.2019 அன்று கொடியேற்றத்துடன் தொடங்கவிருக்கிறது. உற்சவத்தின் முக்கிய நிகழ்வான கருடசேவை, 19.5.2019 அன்று நடைபெறும். உற்சவத்தின் மற்ற நாள்களில் நான்கு ராஜ வீதிகளோடு தன் உலாவை முடித்துக்கொள்ளும் பெருமாள், கருட சேவையன்று மட்டும் தங்க கருடன்மீது அமர்ந்து காஞ்சிபுரத்தின் பெரும்பாலான வீதிகளிலும் வலம் வருவார். அன்று காஞ்சிபுரமே விழாக்கோலம் பூண்டிருக்கும். 

உற்சவத்தின் முக்கிய நிகழ்வுகளாக, 22.5.2019 அன்று தங்கச் சப்பரமும், 23.5.2019 அன்று திருத்தேரும் நடைபெறும்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க