27 நட்சத்திரக் காரர்களுக்கும் பரிகாரத் தலமான திருவொற்றியூர் தியாகராஜர் கோயில் வசந்த உற்சவம்! | thiruvotriyur thiyagarajar temple vasantha urchavam festival

வெளியிடப்பட்ட நேரம்: 19:06 (16/05/2019)

கடைசி தொடர்பு:19:06 (16/05/2019)

27 நட்சத்திரக் காரர்களுக்கும் பரிகாரத் தலமான திருவொற்றியூர் தியாகராஜர் கோயில் வசந்த உற்சவம்!

லம், மூர்த்தி, தீர்த்தம் என்று மூன்றிலும் புகழ் பெற்றது திருவொற்றியூர் தியாகராஜசுவாமி திருக்கோயில். இங்கு ஒவ்வொரு வருடமும் வைகாசிமாதத்தில் வசந்த உற்சவத் திருவிழா கோலாகலமாகக் கொண்டாடப்படும். இந்த ஆண்டு வசந்த உற்சவத் திருவிழா வரும் 19-ம் தேதி தொடங்கி ஜூன் மாதம் 2-ம் தேதி வரை நடைபெறவிருக்கிறது. 

திருவொற்றியூர்

பார்வதி, பிரம்மர், மகா விஷ்ணு, நாரதர், தேவர்கள் என அனைவரும் சிவபெருமானை வழிபட்டு பேறுபெற்ற தலம் இது. சிவபெருமான் இங்குதான் ஆனந்த நடனம் ஆடினார். பிரம்மன், இந்தத் தலத்து ஆதிபுரீசுவரை வணங்கித்தான் படைப்புத் தொழிலை மேற்கொண்டார். அம்பிகை வடிவுடையம்மனாகக் காட்சியளிக்கிறாள். இந்தத் தலத்தில், 27 நட்சத்திரங்களும் ஆதிபுரீஸ்வரரை வணங்கி பேறு பெற்றன. எனவே, அனைத்து நட்சத்திரக்காரர்களும், தோஷங்கள் நீங்கி நன்மை பெருக தியாகராஜ பெருமானை வணங்கிப் பயன்பெறலாம். சுந்தரர், சங்கிலி நாச்சியாரை மணந்துகொண்டது, கலிய நாயனார் அவதரித்தது, பட்டினத்தார் முக்தியடைந்தது போன்ற பல்வேறு சிறப்புகளையும் உடைய தலம் இது. இந்தத் தலத்தில் நடைபெறும் வசந்த உற்சவத்தைக் கண்டால் ஏழு பிறவிகளிலும் செய்த பாவங்கள் அனைத்தும் விலகி வாழ்வில் வசந்தம் உண்டாகும் என்பது நம்பிக்கை. 

திருவொற்றியூர் கோயில்

உற்சவம் நடைபெறும் 15 நாள்களும் தியாகராஜப் பெருமான் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க