மகாபெரியவா ஜயந்தி விழா... அம்பத்தூரில் பாகவத சப்தாஹம மஹோத்ஸ்வம்! | maha periyava jayanthi vizha

வெளியிடப்பட்ட நேரம்: 20:25 (17/05/2019)

கடைசி தொடர்பு:20:25 (17/05/2019)

மகாபெரியவா ஜயந்தி விழா... அம்பத்தூரில் பாகவத சப்தாஹம மஹோத்ஸ்வம்!

காஞ்சி மகா பெரியவாவின் ஜன்ம நட்சத்திர தினமான 19.5.19 அன்று, அம்பத்தூரில் `ஶ்ரீ மஹாசுவாமிகள் பாகவத ஸ்வா ட்ரஸ்ட்' சார்பில், மஹாசுவாமிகள் ஜயந்தி மஹோத்ஸவமும், சப்தாஹம மஹோத்ஸவமும் நடைபெற உள்ளன. 

மகா பெரியவா


காஞ்சி மடாதிபதியாகத் திகழ்ந்து, அனைவராலும் `மகாபெரியவா' என்று அன்போடு போற்றப்படும், சந்திரசேகர சரஸ்வதி சுவாமிகளின் ஜயந்தி விழாவை முன்னிட்டு நாடெங்கும் பக்தர்கள் பல்வேறு உற்சவங்களை நடத்த ஏற்பாடுகள் செய்துள்ளனர். அம்பத்துரைச் சேர்ந்த பாகவத ஸேவா ட்ரெஸ்ட், 19.5.19 முதல் 25.5.19 வரை பாகவத சப்தாஹமம் நடத்த ஏற்பாடுகள் செய்துள்ளது.

பெரியவா

சப்தாஹம் என்பது ஏழு நாள்கள் கொண்ட காலத்தைக் குறிப்பது. 

`ஏழே நாள்களில் தட்ஷகன் என்ற பாம்பு கடித்து இறப்பாய்' என்று முனிகுமாரன் ஒருவனால் சபிக்கப்பட்ட பரிட்ஷித் மகராஜா, தனது வாழ்வில் கடைசி ஏழுநாள்களும் பாகவதத்தைக் கேட்க விரும்பினான். சுகப் பிரும்மரிஷி, ஶ்ரீ மத் பாகவதத்தை ஏழு நாள்களில் அவனுக்கு உபதேசித்தார். அன்று முதல் ஏழு நாள்களில் முழு பாகவதத்தையும் சொல்லும் முறை உருவானது. இதுவே சப்தாமம் எனப்பட்டது. இப்படிப்பட்ட சப்தாஹமத்தில் கலந்துகொண்டு கேட்பது மிகவும் புண்ணியம் என்று பெரியோர்கள் சொல்லியிருக்கிறார்கள்.

பெரியவா

அம்பத்தூரில் நடைபெறும் மகா சுவாமிகள் ஜயந்தி விழா மற்றும் சப்தாஹம விழா வரும் ஞாயிறு அன்று தொடங்குகிறது. அன்று காலை 5.45 க்கு விக்னேஸ்வர பூஜையோடு தொடங்கி, தொடர்ந்து ஆவஹந்தி ஹோமம் நடைபெறும். உற்சவதினங்களில் தினமும் அஷ்டபதி பஜனையும், நாம சங்கீர்த்தனமும் நடைபெறும். தமிழகத்தின் புகழ்பெற்ற பாகவதர்கள் கலந்துகொண்டு நாம சங்கீர்த்தனம் இசைக்க இருக்கிறார்கள். தினமும் மாலை 4 மணிக்கு ஶ்ரீ மத் பாகவத உபன்யாசம் நடைபெறும். இதை `ப்ரும்மஶ்ரீ பாலாஜி சர்மா' வழங்குவார்.

இவற்றோடு, அவ்வப்போது, இசை நிகழ்ச்சிகளும் வேத பாராயணமும் நடைபெற உள்ளன. உற்சவத்தின் இறுதி நாளான 26 -ம் தேதி ஆஞ்சநேய உத்ஸ்வத்தோடு விழா நிறைவு பெறும். இந்த நிகழ்ச்சிகள் அனைத்தும், சத்சங்க மண்டபம், (கரூர் வைஸ்யா வங்கி அருகில்), சத்சங்கம் தெரு, வெங்கடாபுரம், அம்பத்தூர் என்னும் முகவரியில் நடைபெற உள்ளது. பக்தர்கள் அனைவரும் வந்து கலந்துகொண்டு மகாபெரியவரின் அருளைப் பெறுமாறு பாகவத ஸேவா ட்ரஸ்டைச் சேர்ந்தவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர். 
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க