ரிஷபம் ராசிக்காரர்கள் எந்த ராசிக்காரரை மணக்கலாம்?#Astrology | Who can match for the Rasi Taurus?

வெளியிடப்பட்ட நேரம்: 19:55 (17/05/2019)

கடைசி தொடர்பு:19:55 (17/05/2019)

ரிஷபம் ராசிக்காரர்கள் எந்த ராசிக்காரரை மணக்கலாம்?#Astrology

ஜோதிட சாஸ்திரத்தில் 12 ராசிகளுண்டு. ஒவ்வொரு மனிதரும் ஏதேனும் ஒரு ராசியில் பிறந்திருப்பார்கள். எந்த ராசிக்காரர்கள், எந்த ராசியில் பிறந்தவர்களை மணந்தால் வாழ்க்கை சுபிட்சமாக இருக்கும் என்பது பற்றி ஜோதிடத்திலகம் காழியூர் நாராயணனிடம் கேட்டோம். 

 

ரிஷபம்

''ஜோதி என்றால் ஒளி. ஜோதி இருக்கும் இடம் ஜோதிடம். ஜோதிடம் என்பது அறிவியல்பூர்வமான சாஸ்திரம். ஜோதிடம் என்பது ராசிபலன்களையும் அதிர்ஷ்டத்தையும் மட்டும் சொல்லுவதல்ல, நம் வாழ்க்கையை வகுத்துக்கொள்ள உதவும் வழிகாட்டி. இதைத் துணையாகக் கொண்டு வாழ்க்கைப் பயணத்தில் பயணித்தால் நமது பயணம், தடைகளும் சிக்கல்களும் இல்லாத பயணமாக அமையும். குறிப்பாக, நம் வாழ்க்கைத்துணையைத் தேடும்போது ஜோதிடத்தின் துணையுடன் தேடுவது நல்லது. இப்போது நாம் ரிஷபம் ராசிக்காரர்கள் எந்த ராசியில் பிறந்தவர்களை மணக்கலாம் என்பது பற்றிப் பார்ப்போம்.

ராசிபலன்

ரிஷபராசி ஸ்திர ராசி. ரிஷப ராசிக்காரர்கள் பேச்சில் நளினம், இனிய சுபாவம், தன் காரியத்தைப் பிறரைக் கொண்டு சாதித்துக் கொள்ளும் சாமர்த்தியம் ஆகியன மிக்கவர்கள். நுட்பமாகப் பேசுவதில் வல்லவர்கள். தனக்கு ஏற்படும் இடர்களை எப்பேர்பட்ட சூழ்நிலையிலும் சமாளித்து தற்காத்துக்கொள்ளும் திறன் படைத்தவர்கள். தன் தந்திரத்தால் தன் பகையை முறியடிக்கும் திறன் கொண்டவர்கள். வாழ்க்கையில் உற்சாகத்துடன் எதிர்நீச்சல் போட்டு வெற்றி இலக்கை அடைபவர்கள். 

 

 

 

இந்த ரிஷப ராசிக்காரர்களுக்கு பாக்யாதிபதி ராஜ்யாதிபதிகள் ஒன்பதாமிடமான மகரம், பத்தாமிடமான கும்பம் ஆகிய இரண்டு ராசிகளிலும் வாழ்க்கைத்துணை அமைந்தால் இவர்கள் பேரின்ப பெருவாழ்வு வாழ்பவர்களாக இருப்பார்கள். இந்த இரண்டு ராசிகளுக்கும் அதிபதி சனீஸ்வரனாவார். சனி பகவான் ஒரே கிரகமென்றாலும் இரண்டு ராசிகளையுடையவர். 

ரிஷப ராசிக்காரர் ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் பூர்வ புண்ணியஸ்தானமான ஐந்தாமிடமான கன்னிராசிக்காரர் துணையாக அமைந்தால், திருமணத்துக்குப் பின் திருப்புமுனையான வாழ்க்கையைச் சந்திப்பார்கள். கணவன் மனைவி இருவரும் ஒருமித்த கருத்தோடு வாழ்க்கையில் வெற்றி நடை போடுவார்கள். சமூகத்தில் சிறப்பான அந்தஸ்தைப் பெறுவார்கள்.

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க