மிதுனம் ராசிக்காரர் எந்த ராசிக்காரரை மணக்கலாம்?#Astrology | Who can match for the sign Gemini?

வெளியிடப்பட்ட நேரம்: 19:50 (18/05/2019)

கடைசி தொடர்பு:19:50 (18/05/2019)

மிதுனம் ராசிக்காரர் எந்த ராசிக்காரரை மணக்கலாம்?#Astrology

ஜோதிட சாஸ்திரத்தில் 12 ராசிகளுண்டு. ஒவ்வொரு மனிதரும் ஏதேனும் ஒரு ராசியில் பிறந்திருப்பார்கள். மிதுனம் ராசிக்காரர்கள், எந்த ராசியில் பிறந்தவர்களை மணந்தால் வாழ்க்கை சுபிட்சமாக இருக்கும் என்பது பற்றி ஜோதிடத்திலகம் காழியூர் நாராயணனிடம் கேட்டோம். 

 

மிதுனம்

 

''ஜோதி என்றால் ஒளி. ஜோதி இருக்கும் இடம் ஜோதிடம். ஜோதிடம் என்பது அறிவியல்பூர்வமான சாஸ்திரம். ஜோதிடம் என்பது ராசிபலன்களையும் அதிர்ஷ்டத்தையும் மட்டும் சொல்லுவதல்ல, நம் வாழ்க்கையை வகுத்துக்கொள்ள உதவும் வழிகாட்டி. இதைத் துணையாகக் கொண்டு வாழ்க்கைப் பயணத்தில் பயணித்தால், நமது பயணம், தடைகளும் சிக்கல்களும் இல்லாத பயணமாக அமையும். குறிப்பாக, நம் வாழ்க்கைத் துணையைத் தேடும்போது ஜோதிடத்தின் வழிகாட்டுதலுடன் தேடுவது நல்லது. இப்போது நாம் மிதுனம் ராசிக்காரர்கள் எந்த ராசியில் பிறந்தவர்களை மணக்கலாம் என்பது பற்றிப் பார்ப்போம்.

கிரகங்கள்

மிதுன ராசிக்காரர்கள் எப்போதும் இரட்டைச் சிந்தனையுள்ளவர்களாக இருப்பார்கள். ஒருசெயலைத் தொடங்கும்போதே அதன் சாதகபாதகங்கள் இரண்டையும் அலசி ஆராய்ந்த பின்பே செயல்படுவார்கள். எந்தச் செயலில் ஈடுபட்டாலும் நிதானத்துடனும் சாமர்த்தியத்துடனும் செயல்பட்டு வெற்றிபெறுவார்கள். சமூகத்தில் தங்களின் மதிப்பை உயர்த்திக் காட்டிக்கொள்பவர்கள். போலி ஆடம்பரமின்றி நடந்துகொள்ளும் குணம் படைத்தவர்கள். ஓடுமீன் ஓட உறுமீன் வரும் வரை வாடியிருக்கும் கொக்கைப்போல் நின்று நிதானமாக ஆடி வெல்வார்கள்.  

 

 

இந்த மிதுன ராசிக்காரர்களுக்கு பாக்யாதிபதி ராஜ்யாதிபதிகள் ஒன்பதாமிடமான கும்பம், பத்தாமிடமான மீனம் ஆகிய இரண்டு ராசிகளிலும் வாழ்க்கைத்துணை அமைந்தால் வாழ்க்கை இனிப்பாக அமையும். மிதுனராசி நேயர்களுக்கு கும்ப ராசிக்காரர்கள் வாழ்க்கைத் துணையாக அமைந்தால், சிறப்பாக இருக்கும். இதைவிட மீன ராசிக்காரர்கள் கணவனாகவோ மனைவியாகவோ அமைந்தால், பொருளாதார ரீதியாக சிறப்பான வளர்ச்சி இருக்கும். தங்குதடையின்றி செல்வ வளம் பெருகும். 
மிதுன ராசிக்காரர்களுக்கு 5-ம் இடமான துலாம் ராசியைச் சேர்ந்தவர்கள் வாழ்க்கைத் துணையாக அமைவது பூர்வஜென்ம பந்தமாகும்.  மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் என்பது இந்த இணையர்களுக்குத்தான் பொருத்தமாக இருக்கும் என்கிறார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க