இந்த வார ராசிபலன் மே 20 முதல் 26 வரை! | weekly horoscope from may 20th to 26

வெளியிடப்பட்ட நேரம்: 08:56 (20/05/2019)

கடைசி தொடர்பு:08:56 (20/05/2019)

இந்த வார ராசிபலன் மே 20 முதல் 26 வரை!

இந்த வார ராசிபலன் மே 20 முதல் 26 வரை!

மேஷம் மேஷராசி அன்பர்களே!

பணவரவு திருப்தி தரும். செலவுகளும் அத்தியாவசிய செலவுகளா கவே இருக்கும். குடும்பத்தில் மூன்றாவது நபர்களின் தலையீடு காரணமாகச் சில குழப்பங் கள் ஏற்படக்கூடும். பொறுமை அவசியம். கணவன் - மனைவிக்கிடையே சிறு சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்பு இருப்பதால், ஒருவரையொருவர் அனுசரித்துச் செல்வது அவசியம். தந்தைவழி உறவினர்களின் வருகை உற்சாகம் தருவதுடன் செலவுகளையும் ஏற்படுத்தும்.

அலுவலகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். சக ஊழியர்களிடம் அனுசரித்து நடந்து கொள்வது அவசியம். உங்கள் வேலைகளை மற்றவர்களிடம் ஒப்படைக்கவேண்டாம். அதிகாரிகள் கடிந்து பேசினாலும் பொறுமை காப்பது அவசியம்.
வியாபாரத்தில்  விற்பனை வழக்கம்போலவே நடைபெறும். சக வியாபாரிகளுடன் சுமுகமான உறவை ஏற்படுத்திக் கொள்ள முயற்சி செய்யவும். பணியாளர்களின் ஒத்துழைப்பு சுமாராகத்தான் இருக்கும்.

கலைத்துறையினர் கடினமாக முயற்சி செய்தால்தான் வாய்ப்புகள் கிடைக்கும். வருமானம் திருப்தி தரும். குழப்பமான நேரங்களில் மூத்த கலைஞர்களின் ஆலோசனையைக் கேட்டுப் பெறுவது நல்லது.

மாணவர்களுக்கு மேற்கொண்டு படிப்பதில் சற்று குழப்பமான மனநிலையே காணப்படும். ஆசிரியர்களின் ஆலோசனையைக் கேட்டு அதன்படி நடப்பது நல்லது.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு செலவுகள் அதிகரிக்கும் என்றாலும், தேவையான பணம் இருப்பதால் சமாளித்துவிடுவீர்கள். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு பணிச்சுமை குறைவதுடன் சலுகைகளும் கிடைக்கும்.

அதிர்ஷ்ட நாள்கள்: 24, 25, 26
அதிர்ஷ்ட எண்கள்: 2,3,6
சந்திராஷ்டம நாள்கள்: 20

வழிபடவேண்டிய தெய்வம்: அம்பிகை
பரிகாரம்: தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி, கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.

பூத்தவளே புவனம் பதினான்கையும் பூத்தவண்ணம்
காத்தவளே பின் கரந்தவளே கறைகண்டனுக்கு
மூத்தவளே என்றும் மூவா முகுந்தற்கு இளையவளே
மாத்தவளே உன்னை அன்றி மற்றோர் தெய்வம் வந்திப்பதே

 

ரிஷபம்ரிஷபராசி அன்பர்களே!

பணவரவு திருப்தி தருவதாக இருக்கும். ஆனால், எதிர்பாராத செலவு களும் ஏற்படக்கூடும் என்பதால் சிறிது கடன் வாங்கவும் நேரிடும். கணவன் - மனைவிக் கிடையே ஏற்பட்டிருந்த பிரச்னைகள் மறைந்து மகிழ்ச்சி உண்டாகும். பழைய கடன்களைத் தந்து முடிக்கும் வாய்ப்பு ஏற்படும். வாழ்க்கைத்துணைவழி உறவினர்களிடையே உங்கள் கௌரவமும் மதிப்பும் அதிகரிக்கும். ஆனால், உடல் ஆரோக்கியத்தில் மட்டும் சற்று கவனம் செலுத்தவேண்டிய வாரம்.

அலுவலகத்தில் எதிர்பார்த்த பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கும்.சிலருக்கு புதிய பொறுப்புகள் வந்து சேரும். பணி நிரந்தரமாகும் சந்தர்ப்பம் கனிந்து வரும். அதிகாரிகளின் ஆதரவு உற்சாகம் தரும்.
வியாபாரத்தில் விற்பனையை அதிகரிக்கச் சற்று கூடுதலாக உழைக்கவேண்டி இருக்கும். ஆனாலும், உழைப்புக்கேற்ற லாபம் கிடைப்பதால் உற்சாகம் உண்டாகும். சக வியாபாரிகள் அனுசரணையாக இருப்பார்கள்.

கலைத்துறையினருக்கு எதிர்பார்த்தபடியே வாய்ப்புகள் கிடைக்கும். பெரிய நிறுவனங்களில் இருந்து அழைப்பு வரும். பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு பாராட்டும் பரிசும் பெறும் வாய்ப்பு ஏற்படும்.

மாணவர்கள் விரும்பிய கல்வி நிறுவனத்தில் விரும்பிய பாடப் பிரிவில் சேருவதற்குச் சற்று கடின  முயற்சி எடுக்கவேண்டும். சிலரின் சிபாரிசும் தேவைப்படும்.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு சிரமம் எதுவும் ஏற்படுவதற்கில்லை. வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு மகிழ்ச்சியான வாரம். சில சலுகைகளும் கிடைக்கும்.

அதிர்ஷ்ட நாள்கள்: 20, 26
அதிர்ஷ்ட எண்கள்: 3,7,9
சந்திராஷ்டம நாள்கள்: மே 21, 22, 23

வழிபடவேண்டிய தெய்வம்: வள்ளி தேவசேனா சமேத முருகக்கடவுள்
பரிகாரம்: தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி, கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.

உருவாய் அருவாய், உளதாய் இலதாய்
மருவாய் மலராய், மணியாய் ஒளியாய்க்
கருவாய் உயிராய்க், கதியாய் விதியாய்க்
குருவாய் வருவாய், அருள்வாய் குகனே.

 

மிதுனம் மிதுனராசி அன்பர்களே!

வருமானம் திருப்தி தருவதாக இருந்தாலும், தேவையற்ற செலவு களால் கடன் வாங்கக்கூடிய சூழ்நிலை ஏற்படக்கூடும். திருமண முயற்சிகள் சாதகமாக முடியும். கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். வழக்குகளில் சற்று இழுபறியான நிலையே காணப்படுகிறது. உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வெளி நாட்டிலிருந்து எதிர்பார்த்த செய்தி கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு. நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சி தருவதாக இருக்கும். 

அலுவலகத்தில் உங்களின் திறமை வெளிப்படும். உயர்ந்த பதவி தேடி வரும். சம்பள உயர்வும் கிடைக்கும். ஆனால், சக ஊழியர்களிடம் எச்சரிக்கையாக இருக்கவும். உங்கள் பணிகளையும் மற்றவர்களிடம் ஒப்படைக்கவேண்டாம்.
வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் அதிகரிக்கும். பற்று வரவு சுமுகமாக நடை பெறும். வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். பங்குதாரர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.

கலைத்துறையினருக்கு வாய்ப்புகள் கிடைப்பதில் பிரச்னை எதுவும் இல்லை. ஆனால், வருமானம் எதிர்பார்த்தபடி கிடைக்காது. சிலருக்கு வெளியூர்ப் பயணம் செல்லும் வாய்ப்பு ஏற்படும்.

மாணவர்களுக்கு மேற்கொண்டு படிப்பதற்கான எடுக்கும் முயற்சிகள் சாதகமாக முடியும். பெற்றோர் ஆதரவாக இருப்பார்கள். தேவையான நிதியுதவியும் கிடைக்கும்.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு வீட்டுச் செலவுகள் அதிகரிப்பதால் கையிருப்பு கரைவதுடன் கடன் வாங்கவும் நேரிடும்.   வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு அலுவல கத்தில் சலுகைகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட நாள்கள்: 20, 21, 22 23
அதிர்ஷ்ட எண்கள்: 2,5,6
சந்திராஷ்டம நாள்கள்: 24, 25

வழிபடவேண்டிய தெய்வம்: பெருமாள்
பரிகாரம்: தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி, கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.

குலம்தரும் செல்வம் தந்திடும் அடியார் படுதுயராயினவெல்லம்,
நிலந்தரஞ்செய்யும் நீள்விசும்பருளும் அருளொடுபெருநிலமளிக்கும்,
வலந்தரும்மற்றுந்தந்திடும் பெற்ற தாயினு மாயினசெய்யும்,
நலந்தருஞ்சொல்லை நான் கண்டுகொண்டேன் நாராயணாவென்னும்நாமம்.

ராசிபலன்

 

கடகம் கடகராசி அன்பர்களே!

பண வரவுக்குக் குறைவில்லை. உறவினர்கள் வருகை மகிழ்ச்சி தரும். அவர்கள் உதவியுடன் சுபநிகழ்ச்சிக்கான பேச்சுவார்த்தை சுமுகமாக முடியும். பிள்ளைகள் வழியில் பணவரவுக்கும் பொருள்சேர்க்கைக்கும் வாய்ப்பு உண்டு. அரசாங்க வகையில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். தந்தையின் அன்பும் ஆதரவும் மகிழ்ச்சி தரும். சகோதரர்கள் அனுசரணையாக இருப்பார்கள். சிலருக்குக் குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும்.

அலுவலகத்தில் பணிச்சுமை குறைவதன் காரணமாக உற்சாகமாகக் காணப்படுவீர்கள். சிலருக்கு அவர்கள் விரும்பிய இடத்துக்கு மாற்றல் கிடைக்க வாய்ப்பு உண்டு. நிர்வாகத் தினரின் பாராட்டுகள் மகிழ்ச்சி தரும்.
வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்ததை விட கூடுதலாக இருக்கும். சக வியாபாரிகளுடன் இணக்கமான சூழ்நிலை ஏற்படும். பணியாளர்களின் ஒத்துழைப்பு நன்றாக இருக்கும்.

கலைத்துறையினருக்கு நல்ல வாய்ப்புகளும் அதனால் தாராளமான பணவரவும் கிடைக்கும். சக கலைஞர்கள் உங்களுடன் இணக்கமாக நடந்துகொள்வார்கள். சிலருக்குப் பாராட்டும் விருதும் கிடைக்க வாய்ப்பு உண்டு.

மாணவர்கள் மேல்படிப்பில் அதிக அக்கறை எடுத்துக்கொள்வீர்கள். உங்களுக்குத் தேவையான ஆலோசனைகளையும் உதவியையும் ஆசிரியர்கள் தருவார்கள்.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு சிரமம் எதுவும் இருக்காது. கணவரின் அன்பும் ஆதரவும் கிடைக்கும். பிள்ளைகள் உங்கள் விருப்பப்படி நடந்துகொள்வார்கள். வேலைக்குச் செல்லும் பெண்களுக்குப் பதவி உயர்வு, ஊதிய உயர்வு கிடைக்கும்.

அதிர்ஷ்டம் தரும் நாள்கள்: 21, 22, 23, 24, 25
அதிர்ஷ்டம் தரும் எண்கள்:  1, 2, 7
சந்திராஷ்டம நாள்: 26

வழிபடவேண்டிய தெய்வம்: தட்சிணாமூர்த்தி
பரிகாரம்: தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.

மாசில் வீணையும் மாலை மதியமும்
வீசு தென்றலும் வீங்கிள வேனிலும்
மூசு வண்டறை பொய்கையும் போன்றதே
ஈசன் எந்தை இணையடி நீழலே

 

சிம்மம்சிம்மராசி அன்பர்களே!

பணவரவு திருப்தி தரும். தந்தையுடன் ஏற்பட்டிருந்த கருத்து வேறுபாடு நீங்கி, சுமுகமான உறவு ஏற்படும். கணவன் - மனைவிக்கிடையே சிறுசிறு பிணக்குகள் ஏற்படக்கூடும். அனுசரித்துச் செல்வது நல்லது. தாயாரின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வெளியூர்ப் பயணங்களின்போது கைப் பொருள்களை கவனமாகப் பார்த்துக்கொள்ளவும். வாரப் பிற்பகுதியில் பல வகைகளிலும் அனுகூலமாக இருக்கும். புதிய முயற்சிகள் சாதகமாக முடியும்.

அலுவலகத்தில் இதுவரை இருந்த பணி நெருக்கடி இப்போது சற்று குறையும். அதனால் மனதில் உற்சாகம் ஏற்படும். வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு நல்ல பதில் கிடைக்கும். சிலருக்கு பதவிமாற்றம், இடமாற்றம் கிடைக்க வாய்ப்பு உண்டு.
வியாபாரம் எதிர்பார்த்தபடியே நடக்கும். கடையை வேறு இடத்துக்கு மாற்றவோ அல்லது இருக்கும் கடையை விரிவுபடுத்தவோ மேற்கொள்ளும் முயற்சிகள் சற்று இழுபறியாக இருந்தாலும், சாதகமாக முடிந்துவிடும்.

கலைத் துறையினருக்கு வாய்ப்புகள் கிடைக்கும். சக கலைஞர்களுடன் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி இணக்கமான சூழ்நிலை ஏற்படும்.

மாணவர்கள் மேற்கொண்டு படிக்கவேண்டும் என்பதில் உற்சாகமாகச் செயல்படுவீர்கள். சிலருக்கு வெளியூர்ப் பயணம் மேற்கொள்ளவேண்டிய சந்தர்ப்பம் ஏற்படும்.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு மகிழ்ச்சியான வாரம். குடும்பத்தில் அனைவரு டனும் இணக்கமான சூழ்நிலை நிலவும். அலுவலகத்தில் உற்சாகமாகச் செயல்படுவீர்கள். சலுகைகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட நாள்கள்: 24, 25, 26
அதிர்ஷ்டம் தரும் எண்கள்:  2,4  

வழிபடவேண்டிய தெய்வம்:   சூரியன்
பரிகாரம்:  தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.

திங்கள் தங்கிய சடை உடையானை, தேவதேவனை, செழுங் கடல் வளரும் 
சங்க வெண்குழைக் காது உடையானை, சாம வேதம் பெரிது உகப்பானை, 
மங்கை நங்கை மலை மகள் கண்டு மருவி ஏத்தி வழிபடப் பெற்ற 
கங்கையாளனை, கம்பன் எம்மானை, காணக் கண் அடியேன் பெற்றவாறே! .


கன்னி கன்னிராசி அன்பர்களே!

பொருளாதார நிலைமை திருப்திகரமாக இருப்பதாலும், தேவை யற்ற செலவுகள் இல்லை என்பதாலும் குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை இருக்கும். கணவன் -மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். சிலருக்குக் குடும்பத்துடன் சுற்றுலா செல்லும் வாய்ப்பு ஏற்படும். தந்தையுடன் சிறுசிறு கருத்துவேறுபாடுகள் ஏற்படக் கூடும். பொறுமை அவசியம். வாழ்க்கைத்துணைவழி உறவினர்களால் சில பிரச்னைகள் ஏற்பட்டு நீங்கும்.

வேலைக்குச் செல்லும் அன்பர்களுக்கு அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். ஆனால், அதற்கேற்ற ஆதாயமும் கிடைக்கும். சக ஊழியர்கள் உங்கள் பணிகளில் உதவி செய்வார்கள். அதிகாரிகள் அனுசரணையாக இருப்பார்கள்.
வியாபாரத்தில் லாபம் குறைவாகத்தான் இருக்கும். கடையை விரிவுபடுத்தவோ அல்லது வேறு இடத்துக்கு மாற்றவோ சாதகமான சூழ்நிலை இல்லை. பணியாளர்களால் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும்.

கலைத்துறையைச் சேர்ந்தவர்களுக்கு எதிர்பார்த்தபடி  புது வாய்ப்புகள் கிடைப்பதில் சில தடைகள் ஏற்பட்டு நீங்கும். வருமானமும் ஓரளவுக்கே இருக்கும். 

மாணவர்களுக்கு அவர்கள் விரும்பிய கல்வி நிறுவனத்தில் விரும்பிய பாடப் பிரிவில் சேருவதற்காக எடுக்கும் முயற்சிகள் சாதகமாக முடியும்.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு தேவையான பணம் கிடைக்கும் என்பதால் பிரச்னை இருக்காது. அலுவலகத்தில் கூடுதல் பொறுப்புகளும் அதற்கேற்ற சலுகைகளும் கிடைக்கும்.

அதிர்ஷ்டம் தரும் நாள்கள்: 20, 26
அதிர்ஷ்டம் தரும் எண்கள்:  1,3,6

வழிபடவேண்டிய தெய்வம்: சிவபெருமான்
பரிகாரம்: தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.

மன்னானவன் உலகிற்கொரு மழையானவன் பிழையில்
பொன்னானவன் முதலானவன் பொழில்சூழ்புள மங்கை
என்னானவன் இசையானவன் இளஞாயிறின் சோதி
அன்னானவன் உறையும்மிடம் ஆலந்துறை யதுவே.

 

துலாம் துலாராசி அன்பர்களே!

வருமானம் திருப்திகரமாக இருக்கும். செலவுகளும் அவசிய செலவுகளாகவே இருக்கும். கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். வெளியூரிலிருந்து எதிர்பார்த்த நல்ல செய்தி இந்த வாரம் கிடைப்பதற்கு வாய்ப்பு உள்ளது. குடும்பப் பொறுப்புகளை நிறைவேற்றுவதற்காகக் கொஞ்சம் அலைச்சலும் அதனால் சோர்வும் உண்டாகும். வாங்கிய கடன்களைத் திருப்பித் தருவீர்கள். கொடுத்த கடனும் திரும்பக் கிடைக்கும்.

அலுவலகத்தில் சக ஊழியர்கள் உங்கள் பணிகளில் உதவி செய்வார்கள். சிலருக்குச் சலுகை களுடன் கூடிய இடமாறுதலுக்கு வாய்ப்பு உண்டு. நிர்வாகத்தினர் அனுசரணையாக இருப்பார்கள்.  

வியாபாரத்தில் விற்பனை இருந்தாலும்கூட அதற்கேற்ற லாபம் கிடைக்காது. வாரப் பிற்பகுதியில் வியாபாரத்தின் காரணமாகப் பயணம் மேற்கொள்ள நேரிடும். அதனால் ஆதாயம் உண்டாகும்.

கலைத்துறையைச் சேர்ந்த அன்பர்கள் கடினமாக முயற்சி செய்தால் மட்டுமே வாய்ப்புகளைப் பெற முடியும். வருமானம் போதுமான அளவுக்குக் கிடைப்பதால் உற்சாகமாக இருப்பீர்கள்.

மாணவர்களுக்குப் படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும்.படிப்பு சம்பந்தமான செலவுகளுக்குத் தேவையான கடனுதவி கிடைக்கும். பெற்றோர் ஆதரவாக இருப்பார்கள்.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு போதிய அளவு பண வசதி கிடைப்பதால் மனமகிழ்ச்சி உண்டாகும். அலுவலகத்துக்குச் செல்லும் பெண்கள் தங்கள் பணிகளில் கூடுதல் கவனம் செலுத்தவேண்டியது அவசியம்.

அதிர்ஷ்டம் தரும் நாள்கள்: 21, 22, 23 
அதிர்ஷ்டம் தரும் எண்கள்:  1,2,5

வழிபடவேண்டிய தெய்வம்: பெருமாள்
பரிகாரம்: தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.

இறையாய் நிலனாகி எண்டிசையும் தானாய்,
மறையாய் மறைப்பொருளாய் வானாய் - பிறைவாய்ந்த
வெள்ளத் தருவி விளங்கொலிநீர் வேங்கடத்தான்,
உள்ளத்தி னுள்ளே உளன்.

 

விருச்சிகம் விருச்சிகராசி அன்பர்களே!

தேவையான பணம் இருப்பதால் குடும்ப நிர்வாகத்தில் சிரமம் எதுவும் ஏற்படுவதற்கில்லை. கணவன் - மனைவிக்கிடையே ஏற்பட்டிருந்த கருத்துவேறுபாடு நீங்கி, அந்நியோன்யம் அதிகரிக்கும். குடும்பம் தொடர்பான முக்கிய முடிவுகள் எடுப்பதில் குடும்பப் பெரியவர்களின் ஆலோசனையைக் கேட்டு எடுப்பது நல்லது. வாழ்க்கைத் துணைவழி உறவினர்களால் அனுகூலம் உண்டாகும். பிள்ளைகளின் பிடிவாதப் போக்கு மாறும். அவர்களால் மகிழ்ச்சியும் உண்டாகும்.

அலுவலகத்தில் நீண்டநாள்களாக எதிர்பார்த்த சலுகை இப்போது கிடைக்கும். சிலருக்கு அவர்கள் விரும்பிய இடத்துக்கு மாற்றல் கிடைக்கும். பணிச்சுமை அதிகரித்தாலும் சக ஊழியர்கள் உதவி செய்வார்கள்.

வியாபாரத்தில் விற்பனை நல்லபடியாக இருப்பதுடன், லாபமும் எதிர்பார்த்ததை விடக் கூடுதலாகக் கிடைக்கும். புதிய வாடிக்கையாளர்களின் ஆதரவு உற்சாகம் தரும்.

கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்புகள் கிடைப்பதுடன் வருமானமும் கூடுதலாகக் கிடைக்கும். ஒரு சிலருக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்பும் உண்டாகும்.

மாணவர்களுக்கு மேற்படிப்பைத் தொடர்வதில் பிரச்னை எதுவும் இருக்காது. படிப்பதற்குத் தேவையான பண உதவியும் கிடைக்கும். 
குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு குடும்ப நிர்வாகத்தில் சிறிது சிரமங்கள் ஏற்படும். என்றாலும் சமாளித்துவிடுவீர்கள். கணவர் மற்றும் பிள்ளைகள் அன்பு பாராட்டுவார்கள். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு அலுவலகத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும்.

அதிர்ஷ்டம் தரும் நாள்கள்:20, 24, 25 
அதிர்ஷ்டம் தரும் எண்கள்: 2,7

வழிபடவேண்டிய தெய்வம்: அம்பிகை
பரிகாரம்: தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.

நின்றும் இருந்தும் கிடந்தும் நடந்தும் நினைப்பதுன்னை, 
என்றும் வணங்குவது உன்மலர்த்தாள்! எழுதாமறையின் 
ஒன்றும் அரும் பொருளே! அருளே! உமையே! இமயத்து 
அன்றும் பிறந்தவளே! அழியாமுத்தி ஆனந்தமே!

 

தனுசு ராசிதனுசுராசி அன்பர்களே!

பண வரவுக்கு குறைவிருக்காது. குடும்பச் சூழ்நிலை மகிழ்ச்சி தருவ தாக இருக்கும். எதிர்பாராத சுபச்செலவுகள் ஏற்படக்கூடும். சகோதர வகையில் இருந்து வந்த சச்சரவுகள் மறைந்து சுமுகமான உறவு உண்டாகும். நீதிமன்றத்தில் வழக்குகள் இருந்தால், சாதகமான தீர்ப்பு கிடைக்கும். தந்தையுடன் சுமுகமான உறவு ஏற்படும். அரசாங்கக் காரியங் கள் அனுகூலமாக முடியும். சிலருக்குக் குடும்பத்துடன் வெளி மாநிலங்களில் உள்ள பிரசித்தி பெற்ற ஆலயங்களை தரிசிக்கும் வாய்ப்பு ஏற்படும்.

அலுவலகத்தில் உங்களுக்கு மறுக்கப்பட்டு வந்த சம்பள உயர்வு, பதவி உயர்வு போன்ற சலுகைகள் கிடைக்கும். சிலருக்கு இடமாறுதல் கிடைத்தாலும், அதனால் நன்மையே ஏற்படும்.

வியாபாரத்தில் விற்பனை சற்று மந்தமாகத்தான் இருக்கும். சக வியாபாரிகளுடன் இணக்கமாக நடந்துகொள்வது அவசியம். வியாபாரத்தை விரிவுபடுத்தும் முயற்சிகளில் கூடுதல் கவனம் தேவை.

கலைத்துறையினருக்கு எதிர்பார்த்தபடியே வாய்ப்புகள் கிடைக்கும். வருமானமும் மகிழ்ச்சி தருவதாக இருக்கும். சக கலைஞர்கள் ஆதரவாக இருப்பார்கள்.

மாணவர்களுக்குப் படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்றதற்காக ஆசிரியர்களிடம் பாராட்டு கிடைக்கும். மேற்படிப்புக்குத் தேவையான உதவிகளைப் பெற்றோர் செய்வார்கள்.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்கள் சற்று பொறுமையைக் கடைப்பிடிக்க வேண்டியது அவசியம். குடும்பப் பெரியவர்களிடம் பக்குவமாக நடந்துகொள்ளவும். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு அலுவலகத்தில் சில சலுகைகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட நாள்கள்:21, 22, 23, 26 
அதிர்ஷ்ட எண்கள்: 4,5,6

வழிபடவேண்டிய தெய்வம்: விநாயகர்
பரிகாரம்: தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி, கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.

ஐந்து கரத்தனை ஆனை முகத்தனை
இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினை
புந்தியில் வைத்தடி போற்றுவனே

 

மகரம் மகரராசி அன்பர்களே!

எதிர்பார்த்ததை விட பணவரவு அதிகமாக இருக்கும். தேவையற்ற செலவுகள் எதுவும் ஏற்படுவதற்கில்லை. வராது என்று நினைத்த கடன்  வந்து சேரும். வயிறு தொடர்பான பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்பதால் உணவு விஷயத்தில் கூடுதல் கவனம் செலுத்தவும். பிள்ளைகளால் சில சங்கடங்களைச் சந்திக்க நேரிடும். சிலருக்கு புதிய ஆடை, ஆபரணங்களை வாங்கும் யோகம் உண்டு. அரசாங்கக் காரியங்கள் முடிவதில் சற்று இழுபறியான நிலை இருந்தாலும், சாதகமாக முடிந்துவிடும்.

அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். நீண்டநாள்களாக எதிர்பார்த்து வந்த பதவி உயர்வு கிடைக்கும் என்பதால் மனதில் உற்சாகம் அதிகரிக்கும். சக ஊழியர்கள் உங்களிடம் ஆலோசனை கேட்டு வருவார்கள்.

வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்தபடியே திருப்தியாக இருக்கும். பற்று வரவு சுமுகமாக நடைபெறும். கடையை விரிவுபடுத்துவது போன்ற முயற்சிகளை இந்த வாரம் மேற்கொள்ளலாம்.

கலைத்துறையினருக்கு எதிர்பார்த்தபடியே வாய்ப்புகள் கிடைக்கும். வருமானத்துக்கும் குறைவிருக்காது. சக கலைஞர்களால் அனுகூலம் உண்டாகும்.

மாணவர்களுக்கு மேற்கொண்டு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். தேர்வுகளில் நல்ல மதிப்பெண் பெற்று பெற்றோரின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். 

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு மனதுக்கு உற்சாகம் தரும் வாரம். மனதுக்கு மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு அலுவலகச் சூழ்நிலை மகிழ்ச்சி தரும்.

அதிர்ஷ்ட நாள்கள்:20, 24, 25 
அதிர்ஷ்ட எண்கள்: 2,5,7

வழிபடவேண்டிய தெய்வம்: முருகப் பெருமான்
பரிகாரம்: தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி, கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.

துதிப்போர்க்கு வல்வினை போம்; துன்பம்போம்; நெஞ்சில்
பதிப்போர்க்குச் செல்வம் பலித்துக் கதித்தோங்கும்
நிஷ்டையுங் கைகூடும், நிமலரருள் கந்தர் சஷ்டி கவசம்தனை.
அமர ரிடர்தீர அமரம் புரிந்த குமரனடி நெஞ்சே குறி.

 

கும்பம் கும்பராசி அன்பர்களே!  

பணவரவு திருப்தி தருவதாக இருக்கும். பிள்ளைகளால் மதிப்பும் மரியாதையும் கூடும். வாழ்க்கைத்துணை வழியில் மகிழ்ச்சி உண்டாகும். உடன்பிறந்த வர்களின் வருகை மனதுக்கு மகிழ்ச்சி தருவதாக இருக்கும். தடைப்பட்டு வந்த சுபநிகழ்ச்சிகள் நடைபெறுவதற்கான சூழ்நிலை கனிந்து வரும். தாயாரின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும். வழக்குகள் விஷயத்தில் வழக்கறிஞர்களின் ஆலோசனை கேட்டுச் செயல் படுவது நல்லது. தெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றி மகிழ்வீர்கள்.

அலுவலகத்தில் தங்கள் பணிகளில் மட்டுமே கவனமாக இருக்கவும். உயர் அதிகாரிகளிடம் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். சிலருக்கு விரும்பத் தகாத இடமாற்றம் கிடைப்பதற்கும் வாய்ப்பு உண்டு.

வியாபாரத்தில் கடுமையாக உழைத்தால் மட்டுமே விற்பனையை அதிகரிக்க முடியும். சக வியாபாரிகளுடன் இணக்கமாக நடந்துகொள்ளவும். பங்குதாரர்கள் ஆதரவாக இருப்பார்கள்.ஜோதிடமாமணி கிருஷ்ணதுளசி

கலைத்துறையினருக்கு திறமையை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். வருமானத்தைப் பொறுத்தவரை ஓரளவு திருப்தி தருவதாக இருக்கும்.

மாணவர்களுக்கு  அவர்கள் விரும்பித் தேர்ந்தெடுத்த பாடப் பிரிவில் சிறப்பான மதிப்பெண் களுடன் தேர்ச்சி பெற்று, விரும்பிய கல்வி நிறுவனத்தில் மேல்படிப்பைத் தொடர முடியும்.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு செலவுகளைச் சமாளிப்பதில் சிரமம் ஏற்படும். வேலைக்குச் செல்லும் பெண்கள் அலுவலகத்தில் பொறுமையைக் கடைப்பிடிக்கவும்.

அதிர்ஷ்ட நாள்கள்:20, 21, 22, 23 
அதிர்ஷ்டம் தரும் எண்கள்:6,9

வழிபடவேண்டிய தெய்வம்: சிவபெருமான்
பரிகாரம்: தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி, கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.

நிழலார் சோலை நீல வண்டினம்
குழலார் பண் செய் கோலக் காவுளான்
கழலால் மொய்த்த பாதம் கைகளால்
தொழலார் பக்கம் துயரம் இல்லையே

 

மீனம் மீனராசி அன்பர்களே!

பணவரவு ஓரளவு திருப்தி தரும். வீண் செலவுகள் எதுவும் ஏற்படு வதற்கில்லை. விலகிச் சென்ற உறவினர்கள் உங்களைப் புரிந்துகொண்டு உறவு பாராட்டு வார்கள். திருமண முயற்சிகள் சாதகமாக முடியும். வழக்குகளில் முன்னேற்றம் எதுவும் ஏற்படுவதற்கில்லை. உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. தந்தையுடன் ஏற்பட்டிருந்த கருத்துவேறுபாடு மறையும். எதிரிகளால் ஏற்பட்ட மறைமுகத் தொல்லைகள் விலகும். கொடுத்த கடன் திரும்பக் கிடைக்கும்.

அலுவலகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். சிலருக்கு இடமாற்றம் கிடைத்தாலும் அதனால் நன்மையே ஏற்படும். அதிகாரிகளிடம் பக்குவமாக நடந்துகொள்ளவும். சலுகைகள் கிடைக்கும்.

வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்ததை விடக் கூடுதலாக  இருக்கும். பற்று வரவில் பிரச்னை எதுவும் இருக்காது. சரக்கு கொள்முதலுக்காக தொலைதூரப் பயணங்கள் மேற்கொள்ள நேரிடும்.

கலைத்துறையினருக்கு கிடைக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்வதில் சில இடையூறுகள் ஏற்படக்கூடும். சிலருக்குத் தொழில் சம்பந்தமாக வெளியூர்ப் பயணம் மேற்கொள்ள நேரிடும்.

மாணவர்களுக்கு விரும்பிய கல்வி நிறுவனத்தில் சேர சிலரின் சிபாரிசு தேவைப்படும். படிப்புக்குத் தேவையான வங்கிக் கடனுதவி கிடைப்பதில் பிரச்னை எதுவும் இல்லை.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு மகிழ்ச்சியான வாரம். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு அலுவலகத்தில் கூடுதல் பொறுப்புகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட நாள்கள்:21, 22, 23, 25 
அதிர்ஷ்ட எண்கள்: 3, 5 

வழிபடவேண்டிய தெய்வம்: தட்சிணாமூர்த்தி
பரிகாரம்: தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி, கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.

மெய்யராகி பொய்யை நீக்கி வேதனையைத் துறந்து
செய்யரானார் சிந்தையானே தேவர்குலக் கொழுந்தே
நைவனாயேன் உந்தன் நாமம் நாளும் நவிற்றுகின்றேன்
வையம் முன்னே வந்து நல்காய் வலிவல மேயவனே

 

 


டிரெண்டிங் @ விகடன்