கடகம் ராசிக்காரர் எந்த ராசிக்காரரை மணக்கலாம்? #Astrology | Who can match for the Cancer sign?

வெளியிடப்பட்ட நேரம்: 19:50 (20/05/2019)

கடைசி தொடர்பு:19:50 (20/05/2019)

கடகம் ராசிக்காரர் எந்த ராசிக்காரரை மணக்கலாம்? #Astrology

ஜோதிட சாஸ்திரத்தில் 12 ராசிகளுண்டு. ஒவ்வொரு மனிதரும் ஏதேனும் ஒரு ராசியில் பிறந்திருப்பார்கள்.  கடக ராசிக்காரர்கள், எந்த ராசியில் பிறந்தவர்களை மணந்தால், வாழ்க்கை சுபிட்சமாக இருக்கும் என்பது பற்றி ஜோதிடத்திலகம் காழியூர் நாராயணனிடம் கேட்டோம். 

கடகம்

 

``ஜோதி என்றால் ஒளி. ஜோதி இருக்கும் இடம் ஜோதிடம். ஜோதிடம் என்பது அறிவியல்பூர்வமான சாஸ்திரம். ஜோதிடம் என்பது ராசிபலன்களையும் அதிர்ஷ்டத்தையும் மட்டும் சொல்லுவதல்ல, நம் வாழ்க்கையை வகுத்துக்கொள்ள உதவும் வழிகாட்டி. இதைத் துணையாகக் கொண்டு வாழ்க்கைப் பயணத்தில் பயணித்தால், நமது பயணம், தடைகளும் சிக்கல்களும் இல்லாத பயணமாக அமையும். குறிப்பாக, நம் வாழ்க்கைத் துணையைத் தேடும்போது ஜோதிடத்தின் வழிகாட்டுதலுடன் தேடுவது நல்லது. இப்போது, கடகம் ராசிக்காரர்கள் எந்த ராசியில் பிறந்தவரை மணக்கலாம் என்பது பற்றிப் பார்ப்போம்.

 

ராசிகள்

கடக ராசிக்காரர்கள்,  மேஷ ராசிக்காரர்களைப் போன்றே சர ராசிக்காரர்கள். எந்தவொரு செயலையும் உத்வேகத்துடன் விரைந்து முடிக்கும் குணத்துடன் மேஷ ராசிக்காரர்கள் இருப்பார்களென்றால், கடக ராசிக்காரர்கள் மனதளவில் வேகத்துடனும் செயலளவில் மெதுவாகவும் செயல்படும் குணமுடையவர்களாக இருப்பார்கள். இவர்கள், தனக்கென்று ஒரு கொள்கையும், பிடிவாத குணமும், சாமர்த்தியமும், தைரியமும் உடையவர்கள். 

யார் எதைச் சொன்னாலும் அதை ஆராய்ந்தறிந்து, பலரிடத்தில் விவரம் கேட்டுத் தெரிந்துகொண்டாலும், முடிவில் தங்கள் எண்ணப்படியே நடந்துகொள்வார்கள். இவர்கள் எளிதில் எதையும் நம்பாதவர்கள். பிறர் தங்களின் ஆணைக்குக் கீழ்ப்படிய வேண்டும் என விரும்புவார்கள். தங்களின் காரியத்தைச் சாதித்துக்கொள்ளும் வல்லமை படைத்தவர்கள். பிறரை எடை போட்டு ஆராய்பவர்கள். செல்வம் படைத்தவர்களுடன் விரும்பிப் பழகுபவர்கள். சிறந்த பொருள்கள் இருப்பினும் அதைவிட உயர்ந்த பொருளைத் தேடுவார்கள்.

 

 

இத்தகைய கடக ராசிக்காரர்களுக்கு ஐந்தாமிடமான விருச்சிக ராசிக்காரர்கள் வாழ்க்கைத் துணையாக அமைந்தால், மிகப் பொருத்தமானவர்களாக இருப்பார்கள். அன்புமிக்க குழந்தைகளுடன் அற்புதமான குடும்ப வாழ்க்கை வாழ்வார்கள். இதேபோல் கடக ராசிக்கு சமசப்தமமான மகர ராசிக்காரர்கள் பொருத்தமான ஜோடிகளாக வலம் வருவார்கள். கணவன் மனைவி அந்நியோன்யம் மிகச்சிறப்பாக இருக்கும். ஒருவரை விட்டு ஒருவர் பிரியாமல்  வாழ்வாங்கு வாழ்வார்கள்'' என்கிறார் காழியூர் நாராயணன்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க