வில்லுப்பாட்டில் மகா பெரியவா புராணம்... சங்கர நேத்ராலயாவில் இன்று மாலை நடைபெறுகிறது! | mahaperiyava puranam in folk form

வெளியிடப்பட்ட நேரம்: 14:46 (21/05/2019)

கடைசி தொடர்பு:14:46 (21/05/2019)

வில்லுப்பாட்டில் மகா பெரியவா புராணம்... சங்கர நேத்ராலயாவில் இன்று மாலை நடைபெறுகிறது!

மகா பெரியவாவின் 126 வது ஜயந்தி உற்சவம் தமிழகம் முழுவதும் அவரது பக்தர்களால் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. பூஜைகள், உபன்யாசங்கள், வேள்விகள் என்று, பல்வேறு அமைப்புகளும் இந்த ஜயந்தி விழாவினைப் பல்வேறு வகைகளில் கொண்டாடிவருகின்றனர். 
சென்னை, சங்கர நேத்ராலயா மருத்துவ ஆய்வு நிறுவனத்தின் சார்பில் இன்று மாலை சிறப்பு நிகழ்வு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மகா பெரியவா

இன்று மாலை  5 மணிக்கு, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சங்கர நேத்ராலயாவில் `வி.சி.சுவாமி அரங்கத்தில் `மகாபெரியவா புராணம்' என்னும் தலைப்பில் வில்லுப்பாட்டு நிகழ்ச்சி ஒன்று நடைபெற உள்ளது. மகாபெரியவா வாழ்ந்த காலத்தில் அவரால் போற்றப்பட்ட வில்லிசைக் கலைஞர், கவிஞர் சுப்பு ஆறுமுகம். நாட்டுப்புறக் கலைவடிவமான வில்லுப் பாட்டினை உலக அளவில் புகழ்பெறச் செய்தவர். இவருடைய புதல்வியான திருமதி பாரதி திருமகன் இந்த நிகழ்ச்சியைத் தயாரித்துள்ளார். இவருடன் இணைந்து, கலைமகன் குழுவினர் வில்லிசையை வழங்க உள்ளனர்.

மகாபெரியவா தான் வாழ்ந்த காலத்தில் `நடமாடும் தெய்வம்' எனப்போற்றப்பட்டவர். சாதி மத பேதமின்றி பக்தர்கள் அவரை நாடிவந்து அருள்பெற்றனர். இதுவரை அவரின் மகிமைகளைக் கீர்த்தனை, பஜனை மற்றும் உபன்யாசங்களில் கேட்டுவந்த பெரியவாவின் பக்தர்கள், ' ஶ்ரீ மகாபெரியவா புராணம்' என்னும் தலைப்பில் வில்லுப்பாட்டின் மூலம் அவற்றைக் கேட்க ஆவலாக உள்ளனர்.
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க