சிம்மம் ராசிக்காரர் எந்த ராசிக்காரரை மணக்கலாம்? #Astrology | Who can match for the Leo sign?

வெளியிடப்பட்ட நேரம்: 07:00 (22/05/2019)

கடைசி தொடர்பு:12:50 (22/05/2019)

சிம்மம் ராசிக்காரர் எந்த ராசிக்காரரை மணக்கலாம்? #Astrology

ஜோதிட சாஸ்திரத்தில் 12 ராசிகளுண்டு. ஒவ்வொரு மனிதரும் ஏதேனும் ஒரு ராசியில் பிறந்திருப்பார்கள். சிம்மம் ராசிக்காரர்கள், எந்த ராசியில் பிறந்தவர்களை மணந்தால், வாழ்க்கை சுபிட்சமாக இருக்கும் என்பது பற்றி ஜோதிடத்திலகம் காழியூர் நாராயணனிடம் கேட்டோம். 

 

சிம்மம்

``ஜோதி என்றால் ஒளி. ஜோதி இருக்கும் இடம் ஜோதிடம். ஜோதிடம் என்பது அறிவியல்பூர்வமான சாஸ்திரம். ஜோதிடம் என்பது ராசிபலன்களையும் அதிர்ஷ்டத்தையும் மட்டும் சொல்லுவதல்ல, நம் வாழ்க்கையை வகுத்துக்கொள்ள உதவும் வழிகாட்டி. இதைத் துணையாகக் கொண்டு வாழ்க்கைப் பயணத்தில் பயணித்தால், நமது பயணம், தடைகளும் சிக்கல்களும் இல்லாத பயணமாக அமையும். குறிப்பாக, நம் வாழ்க்கைத் துணையைத் தேடும்போது ஜோதிடத்தின் வழிகாட்டுதலுடன் தேடுவது நல்லது. இப்போது நாம் சிம்மம் ராசிக்காரர் எந்த ராசியில் பிறந்தவரை மணக்கலாம் என்பது பற்றிப் பார்ப்போம்.

 

 

சிம்ம ராசிக்காரர்கள், ஸ்திர ராசிக்காரர்கள். தனக்கென்று தனிப்பாதையும், தன்னம்பிக்கையும் கொண்டவர்களாக இருப்பார்கள். கர்வம், வாக்கு சாதுரியம், மனோபலம் கொண்டவர்கள். வேகத்துடன் விவேகமும் உள்ளவர்களாக இருப்பார்கள். தன்னை எதிர்க்கும் எதிரிகளைத் தக்க சமயத்தில் வெற்றி கொள்பவர்கள். தான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்பதுபோல் வறட்டு பிடிவாதம் கொண்டவர்கள். தன்னைப் பிறர் போற்ற வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள். பிறருடைய முகஸ்துதிக்கு ஆளாகி அவர்கள் ஏமாந்து விடுவார்கள். 

சிம்மம்

இந்த சிம்ம ராசிக்காரர்களுக்கு லக்னத்திலிருந்து ஏழாம் வீடான கும்ப ராசிக்காரர்கள் மிகவும் ஏற்றத் துணையாக இருப்பார்கள். இதற்கு அடுத்தபடியாக பூர்வ புண்ணியாதிபதி வீடான தனுஷ் ராசிக்கார்கள் வாழ்க்கைத் துணையாக அமைந்தால் எல்லாவிதங்களிலும் நன்மை பயக்கும். பாக்யாதிபதியான மேஷ ராசிக்காரர்களும் சிம்ம ராசிக்காரர்களுக்கு கணவனாகவோ மனைவியாகவோ அமைந்தால் அவர்களின் இல்லறம் நல்லறமாக இருக்கும் என்கிறார், காழியூர் நாராயணன்.   

நீங்க எப்படி பீல் பண்றீங்க