கன்னி ராசிக்காரர் எந்த ராசிக்காரரை மணக்கலாம்? | Who can match for the sign Virgo?

வெளியிடப்பட்ட நேரம்: 07:30 (23/05/2019)

கடைசி தொடர்பு:07:30 (23/05/2019)

கன்னி ராசிக்காரர் எந்த ராசிக்காரரை மணக்கலாம்?

ஜோதிட சாஸ்திரத்தில் 12 ராசிகளுண்டு. ஒவ்வொரு மனிதரும் ஏதேனும் ஒரு ராசியில் பிறந்திருப்பார்கள். கன்னி ராசிக்காரர்கள், எந்த ராசியில் பிறந்தவர்களை மணந்தால், வாழ்க்கை சுபிட்சமாக இருக்கும் என்பது பற்றி ஜோதிடத்திலகம் காழியூர் நாராயணனிடம் கேட்டோம். 

கன்னி



``ஜோதி என்றால் ஒளி. ஜோதி இருக்கும் இடம் ஜோதிடம். ஜோதிடம் என்பது அறிவியல்பூர்வமான சாஸ்திரம். ஜோதிடம் என்பது ராசிபலன்களையும் அதிர்ஷ்டத்தையும் மட்டும் சொல்லுவதல்ல, நம் வாழ்க்கையை வகுத்துக்கொள்ள உதவும் வழிகாட்டி. இதைத் துணையாகக் கொண்டு வாழ்க்கைப் பயணத்தில் பயணித்தால், நமது பயணம், தடைகளும் சிக்கல்களும் இல்லாத பயணமாக அமையும். குறிப்பாக, நம் வாழ்க்கைத் துணையைத் தேடும்போது ஜோதிடத்தின் வழிகாட்டுதலுடன் தேடுவது நல்லது. இப்போது நாம் கன்னி ராசிக்காரர் எந்த ராசியில் பிறந்தவரை மணக்கலாம் என்பது பற்றிப் பார்ப்போம்.


கன்னி ராசிக்காரர்கள் சிறந்த அறிவாளிகளாக இருப்பார்கள். புத்தி சாதுரியத்தால் எதையும் சாதிக்கும் வலிமை பெற்றவர்கள். வியாபாரத்தில் சிறந்து விளங்குவார்கள். தோற்றத்தில் பொலிவும் இளமையும் கொண்டவர்கள். உயர்ந்த மனிதர்களுடன் மட்டுமே நட்புகொள்வார்கள். எந்த விஷயத்தையும் முழுவதுமாக நம்பாமல், தான் செய்யவேண்டிய காரியத்தைப் பிறரிடம் கொடுத்து, சோதித்துப் பார்ப்பார்கள். புகழ்ச்சிக்கு மயங்குவார்கள். 

திருமாங்கல்யம்

கன்னி ராசிக்குரிய அதிபதி புதன். இந்த ராசிக்காரர்களுக்கு திருமணத்துக்குப் பிறகு வாழ்க்கை மிகவும் சிறப்பாக இருக்கும். கன்னி ராசிக்கு பூர்வ புண்ணியஸ்தானம் மகர ராசி.  சனீஸ்வரனின் ஆதிக்கத்தில் மகர ராசியில் பிறந்தவர்களை மணந்தால் இவர்களின் வாழ்வு சிறப்பாக இருக்கும். கன்னிராசிக்கு பாக்யாதிபதியான ரிஷப ராசிக்காரர்களை மணந்தால், அன்புமயமான வாழ்க்கை அமையும். இவர்கள் எல்லா வளங்களையும் பெற்று வாழ்வாங்கு வாழ்வார்கள், என்கிறார் காழியூர் நாராயணன்.     

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க