கோலாகலமாய் நடந்த திருஞானசம்பந்த சுவாமிகளின் திருக்கல்யாண பெருவிழா! | Thirugnanasambandar Swamigal thirukalyanam

வெளியிடப்பட்ட நேரம்: 17:09 (23/05/2019)

கடைசி தொடர்பு:18:27 (23/05/2019)

கோலாகலமாய் நடந்த திருஞானசம்பந்த சுவாமிகளின் திருக்கல்யாண பெருவிழா!

ஆச்சாள்புரத்தில் திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கல்யாணப் பெருவிழா வெகு சிறப்பாக நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.

கோலாகலமாய் நடந்த திருஞானசம்பந்த சுவாமிகளின் திருக்கலயாண பெருவிழா!

நாகை மாவட்டம், சீர்காழி அருகே ஆச்சாள்புரத்தில் திருக்கயிலாய பரம்பரைத் தருமை ஆதீனத்திற்குச் சொந்தமான திருவெண்ணீற்றுயம்மை உடனாகிய சிவலோக தியாகராஜசுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. இங்கு  திருஞானசம்பந்த சுவாமிக்கும், தோத்திரபூரணாம்பிகைக்கும் திருக்கல்யாணப் பெருவிழா நேற்று நடைபெற்றது. விழாவையொட்டி காலை திருஞானசம்பந்தர் உபநயனமும், பின்னர் திருவீதி வலம் வருதலும் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து மாலை திருமுறைகள் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்தது. 

அதன்பின் இரவு 9 மணிக்கு (21.05.2019) மாப்பிள்ளை அழைப்பு, மாலை மாற்றுதல் மற்றும் ஊஞ்சல் ஆட்டு நிகழ்ச்சியும் நடத்தி வைக்கப்பட்டது. இறுதியாக திருஞானசம்பந்த சுவாமிக்கும், தோத்திரபூரணாம்பிகைக்கும் நடைபெற்ற திருக்கல்யாண வைபவத்தில், தாலி கட்டும் நிகழ்ச்சியும் நிகழ்ந்து, சுவாமி மணக்கோலத்தில் வெள்ளிப்பல்லக்கில் திருவீதி வலம் வருதலும் நடைபெற்றது. விழாவில் உள்ளூர் மற்றும் வெளி மாவட்டங்களிலிருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை பொதுமக்கள் சார்பில் தருமை ஆதினத்திற்குச் சொந்தமான ஆச்சாள்புரம் சிவலோகதியாகராஜசுவாமி தேவஸ்தானம் டிரஸ்டி ஸ்தானிகர் காறுபாறு சொக்கநாத தம்பிரான் மற்றும் ஊழியர்கள் செய்திருந்தனர்.