தனுசு ராசிக்காரர் எந்த ராசிக்காரரை மணக்கலாம்? | Who can match for the sign Dhanush?

வெளியிடப்பட்ட நேரம்: 19:38 (23/05/2019)

கடைசி தொடர்பு:19:38 (23/05/2019)

தனுசு ராசிக்காரர் எந்த ராசிக்காரரை மணக்கலாம்?

ஜோதிட சாஸ்திரத்தில் 12 ராசிகள் உண்டு. ஒவ்வொரு மனிதரும் ஏதேனும் ஒரு ராசியில் பிறந்திருப்பார்கள். தனுசு ராசிக்காரர்கள், எந்த ராசியில் பிறந்தவர்களை மணந்தால், வாழ்க்கை சுபிட்சமாக இருக்கும் என்பது பற்றி ஜோதிடத் திலகம் காழியூர் நாராயணனிடம் கேட்டோம். 

தனுசு



``ஜோதி என்றால் ஒளி. ஜோதி இருக்கும் இடம் ஜோதிடம். ஜோதிடம் என்பது அறிவியல்பூர்வமான சாஸ்திரம். ஜோதிடம் என்பது ராசி பலன்களையும் அதிர்ஷ்டத்தையும் மட்டும் சொல்லுவதல்ல, நம் வாழ்க்கையை வகுத்துக்கொள்ள உதவும் வழிகாட்டி. இதைத் துணையாகக் கொண்டு வாழ்க்கைப் பயணத்தில் பயணித்தால், நமது பயணம், தடைகளும் சிக்கல்களும் இல்லாத பயணமாக அமையும். குறிப்பாக, நம் வாழ்க்கைத் துணையைத் தேடும்போது ஜோதிடத்தின் வழிகாட்டுதலுடன் தேடுவது நல்லது. இப்போது நாம் தனுசு ராசிக்காரர் எந்த ராசியில் பிறந்தவரை மணக்கலாம் என்பது பற்றிப் பார்ப்போம்.

ராசிகள்



தனுசு ராசிக்காரர்கள் உபய ராசிக்காரர்கள். இவர்கள் கலையை ரசிக்கக்கூடியவர்கள். பெரிய சிந்தனையாளர்களாகவும் படைப்பாளியாகவும் எழுத்தாளராகவும் சிந்தனையாளராகவும் இருப்பார்கள். வைராக்கியம், திட சிந்தனை, நேர்மை, நல்லொழுக்கம் கொண்டிருப்பார்கள். விட்டுக் கொடுத்து வாழும் மனப்பான்மை கொண்டவர்கள். அனுபவங்களும், ஞானம், தெய்விகத் தன்மையும், தெய்வ அனுக்கிரகமும் கொண்டவர்கள். மேலானவர்களின் நட்பு உடையவர்கள். 

 

 

இந்த ராசிக்காரர்கள் தங்களின் ராசிக்கு சமசப்தம ராசியான மிதுன ராசிக்காரர்களை மணந்தால், இவர்களின் வாழ்க்கை மிகவும் அன்புமயமானதாக அமையும். தனுசு ராசிக்கு பாக்கியஸ்தானமான சிம்ம ராசியில் பிறந்த ஆணும், தனுசு ராசியில் பிறந்த பெண்ணும் மணந்துகொண்டால் அவர்களின் வாழ்க்கை சிறப்பாக இருக்கும். ஆனால், சிம்ம ராசியில் பிறந்த பெண்ணை தனுசுராசியில் பிறந்த ஆணுக்கு மணமுடித்தால் ஆகாது. தனுசுராசிக்குப் பத்தாமிடமான கன்னி ராசிக்காரர்கள் இவர்களுக்கு எல்லாவிதத்திலும் பொருத்தமாக இருப்பார்கள். இவர்களுக்கும் அன்பும் பிணைப்புமான மணவாழ்க்கை அமையும்'' என்கிறார் காழியூர் நாராயணன்.  

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க