கும்பம் ராசிக்காரர் எந்த ராசிக்காரரைத் திருமணம் செய்யலாம்? #Astrology | Who can match for the sign kumbam?

வெளியிடப்பட்ட நேரம்: 17:21 (27/05/2019)

கடைசி தொடர்பு:17:21 (27/05/2019)

கும்பம் ராசிக்காரர் எந்த ராசிக்காரரைத் திருமணம் செய்யலாம்? #Astrology

ஜோதிட சாஸ்திரத்தில் 12 ராசிகளுண்டு. ஒவ்வொரு மனிதரும் ஏதேனும் ஒரு ராசியில் பிறந்திருப்பார்கள். கும்பம் ராசிக்காரர்கள், எந்த ராசியில் பிறந்தவர்களை மணந்தால், வாழ்க்கை சுபிட்சமாக இருக்கும் என்பது பற்றி ஜோதிடத் திலகம் காழியூர் நாராயணனிடம் கேட்டோம். 

கும்பம்

''ஜோதி என்றால் ஒளி. ஜோதி இருக்கும் இடம் ஜோதிடம். ஜோதிடம் என்பது அறிவியல்பூர்வமான சாஸ்திரம். ஜோதிடம் என்பது ராசி பலன்களையும் அதிர்ஷ்டத்தையும் மட்டும் சொல்லுவதல்ல, நம் வாழ்க்கையை வகுத்துக்கொள்ள உதவும் வழிகாட்டி. இதைத் துணையாகக் கொண்டு வாழ்க்கைப் பயணத்தில் பயணித்தால், நமது பயணம், தடைகளும் சிக்கல்களும் இல்லாத பயணமாக அமையும். குறிப்பாக, நம் வாழ்க்கைத் துணையைத் தேடும்போது ஜோதிடத்தின் வழிகாட்டுதலுடன் தேடுவது நல்லது. இப்போது நாம் கும்பம் ராசிக்காரர் எந்த ராசியில் பிறந்தவரை மணக்கலாம் என்பது பற்றிப் பார்ப்போம்.

 

கும்பம் ராசிக்காரர்கள், தெய்விக குணம் கொண்டவர்கள். தீர்க்கமான சிந்தனையும் காரிய சாதனையும் மிக்கவர்கள். தர்ம சிந்தனையும் சிரித்த முகமும் குழந்தை உள்ளமும் கொண்டவர்கள். நியாய தர்மங்களுக்குப் பயந்து நடப்பார்கள். பிறருடைய அன்புக்குக் கட்டுப்பட்டவர்கள். ஆனால், அதிகாரத்துக்குக் கட்டுப்பட மாட்டார்கள். உரிய மரியாதைக்குரியவர்களைத் தவிர பிறருக்குத் தலைவணங்க மாட்டார்கள். மனைவிமேல் பாசம் மிக்கவர்கள். 

கும்பம்

அதிகமான கல்வியும், அதிகமான அனுபவங்களும் கொண்டவர்கள். ஆடம்பரத்தை விரும்பமாட்டார்கள். சகல விஷயங்களையும் தெரிந்துகொள்ளவேண்டும் என்ற ஆர்வம் உடையவர்கள்.பல கலைகளைக் கற்பார்கள். ஆனாலும், சில விஷயங்களில் தோல்வி தவிர்க்கமுடியாததாக இருக்கும். அதனால், கும்ப ராசிக்காரர்கள் தங்களின் ராசிக்கு ஏழாவது ராசியான சிம்ம ராசிக்காரர்களை மணப்பது நல்லது. அவர்கள் தங்களின் நிர்வாகத் திறமையாலும் சாதுரியத்தாலும் வாழ்வைச் செழுமையாக்குவார்கள்.  இவர்களுக்கு அடுத்தபடியாக பூர்வ புண்ணியஸ்தானமான மிதுன ராசிக்காரர்களை மணப்பது மிகவும் சிறப்பாகும். நல்ல குழந்தைகளைப் பெற்று வாழ்வாங்கு வாழ்வார்கள்" என்கிறார் காழியூர் நாராயணன்.  

நீங்க எப்படி பீல் பண்றீங்க