துலாம் ராசிக்காரர் எந்த ராசிக்காரரைத் திருமணம் செய்யலாம்?#Astrology | Who can match for the sign Libra?

வெளியிடப்பட்ட நேரம்: 17:11 (28/05/2019)

கடைசி தொடர்பு:17:13 (28/05/2019)

துலாம் ராசிக்காரர் எந்த ராசிக்காரரைத் திருமணம் செய்யலாம்?#Astrology


ஜோதிட சாஸ்திரத்தில் 12 ராசிகளுண்டு. ஒவ்வொரு மனிதரும் ஏதேனும் ஒரு ராசியில் பிறந்திருப்பார்கள். துலாம் ராசிக்காரர்கள், எந்த ராசியில் பிறந்தவர்களை மணந்தால், வாழ்க்கை சுபிட்சமாக இருக்கும் என்பது பற்றி ஜோதிடத்திலகம் காழியூர் நாராயணனிடம் கேட்டோம்.

துலாம்

 

''ஜோதி என்றால் ஒளி. ஜோதி இருக்கும் இடம் ஜோதிடம். ஜோதிடம் என்பது அறிவியல்பூர்வமான சாஸ்திரம். ஜோதிடம் என்பது ராசிபலன்களையும் அதிர்ஷ்டத்தையும் மட்டும் சொல்லுவதல்ல, நம் வாழ்க்கையை வகுத்துக்கொள்ள உதவும் வழிகாட்டி. இதைத் துணையாகக் கொண்டு வாழ்க்கைப் பயணத்தில் பயணித்தால், நமது பயணம், தடைகளும் சிக்கல்களும் இல்லாத பயணமாக அமையும். குறிப்பாக, நம் வாழ்க்கைத் துணையைத் தேடும்போது ஜோதிடத்தின் வழிகாட்டுதலுடன் தேடுவது நல்லது. இப்போது நாம் துலாம் ராசிக்காரர் எந்த ராசியில் பிறந்தவரை மணக்கலாம் என்பது பற்றிப் பார்ப்போம்.

ராசிகள்


 
துலாம் ராசிக்காரர்கள் எதிலும் சமநோக்கு, நியாயம், நேர்மை, வாக்குத் தவறாமை, எதுவும் சீராக நடக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள். வாக்கு சாதுரியம் மிக்கவர்கள். நல்ல சுறுசுறுப்பும் தெளிவான மனமும் கொண்டவர்கள். ஆடம்பர வாழ்க்கையையும் கௌரவத்தையும் எதிர்பார்ப்பார்கள். 

துலாம் ராசிக்காரர்களுக்கு இவர்களைப்போலவே சமபலமிக்கவர்களை இணையாகச் சேர்க்க வேண்டும் இவர்களின் ராசியிலிருந்து ஏழாவது ராசியான மேஷ ராசிக்காரர்கள் வாழ்க்கைத்துணையாக அமைந்தால், வாழ்க்கை சீரும் சிறப்புமாக இருக்கும்'' என்கிறார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க