விருச்சிகம் ராசிக்காரர் எந்த ராசிக்காரரை திருமணம் செய்யலாம்? | Who can match for the sign Scorpio?

வெளியிடப்பட்ட நேரம்: 21:25 (29/05/2019)

கடைசி தொடர்பு:21:25 (29/05/2019)

விருச்சிகம் ராசிக்காரர் எந்த ராசிக்காரரை திருமணம் செய்யலாம்?

ஜோதிட சாஸ்திரத்தில் 12 ராசிகளுண்டு. ஒவ்வொரு மனிதரும் ஏதேனும் ஒரு ராசியில் பிறந்திருப்பார்கள். விருச்சிகம் ராசிக்காரர்கள், எந்த ராசியில் பிறந்தவர்களை மணந்தால், வாழ்க்கை சுபிட்சமாக இருக்கும் என்பது பற்றி ஜோதிடத் திலகம் காழியூர் நாராயணனிடம் கேட்டோம். 

விருச்சிகம்

``ஜோதி என்றால் ஒளி. ஜோதி இருக்கும் இடம் ஜோதிடம். ஜோதிடம் என்பது அறிவியல்பூர்வமான சாஸ்திரம். ஜோதிடம் என்பது ராசிபலன்களையும் அதிர்ஷ்டத்தையும் மட்டும் சொல்லுவதல்ல; நம் வாழ்க்கையை வகுத்துக்கொள்ள உதவும் வழிகாட்டி. இதைத் துணையாகக் கொண்டு வாழ்க்கைப் பயணத்தில் பயணித்தால், நமது பயணம், தடைகளும் சிக்கல்களும் இல்லாத பயணமாக அமையும். குறிப்பாக, நம் வாழ்க்கைத் துணையைத் தேடும்போது ஜோதிடத்தின் வழிகாட்டுதலுடன் தேடுவது நல்லது. இப்போது நாம், விருச்சிகம் ராசிக்காரர் எந்த ராசியில் பிறந்தவரை மணக்கலாம் என்பது பற்றிப் பார்ப்போம்.

ராசிகள்

விருச்சிக ராசிக்காரர்கள், சகல விஷயங்களிலும் ஆர்வம்காட்டி சுறுசுறுப்பாகவும் சிக்கனமாகவும் இருப்பார்கள். அநாவசியச் செலவுகளை நீக்கி, அத்தியாவசியச் செலவுகளை மட்டும் செய்வார்கள். சாதனை படைக்கும் எண்ணம் கொண்டவர்கள். பேச்சில் உட்பொருள் வைத்துப் பேசுவார்கள். விளையாட்டாகவே பேசி பிறரின் குற்றம், குறைகளை எடுத்துச் சொல்லுவார்கள்.

  

எல்லா ராசியைச் சேர்ந்தவர்களுக்கும் சமசப்த ராசியான ஏழாம் ராசிக்காரர்களை திருமண உறவில் சேர்ப்பது வழக்கம். ஆனால், விருச்சிக ராசிக்காரர்களுக்கு அதன் சமசப்த ராசியான ரிஷப ராசிக்காரர்களைச் சேர்க்கக் கூடாது. காரணம் விருச்சிக ராசியில் நீசமடையும் சந்திரன், ரிஷப ராசியில் உச்சமடைகிறார். இதனால் இவர்களுக்குப் பதிலாக பூர்வபுண்ணியஸ்தானமான மீன ராசிக்காரர்களை மணந்தால் வாழ்க்கை மிகவும் சிறப்பாக இருக்கும். இதேபோல பாக்யஸ்தானமான கடகராசிக்காரர்களை மணந்தால் அவர்கள் சீரும் சிறப்புடனும் எல்லா வளங்களையும் பெற்று வாழ்வார்கள்'' என்கிறார் காழியூர் நாராயணன்.

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க