மகரம் ராசிக்காரர் எந்த ராசிக்காரரைத் திருமணம் செய்யலாம்? | Who can match for the sign Capricorn?

வெளியிடப்பட்ட நேரம்: 19:25 (30/05/2019)

கடைசி தொடர்பு:19:25 (30/05/2019)

மகரம் ராசிக்காரர் எந்த ராசிக்காரரைத் திருமணம் செய்யலாம்?

ஜோதிட சாஸ்திரத்தில் 12 ராசிகளுண்டு. ஒவ்வொரு மனிதரும் ஏதேனும் ஒரு ராசியில் பிறந்திருப்பார். மகரம் ராசிக்காரர்கள், எந்த ராசியில் பிறந்தவர்களை மணந்தால் வாழ்க்கை சுபிட்சமாக இருக்கும் என்பது பற்றி ஜோதிடத்திலகம் காழியூர் நாராயணனிடம் கேட்டோம். 

மகரம்

''ஜோதி என்றால் ஒளி. ஜோதி இருக்கும் இடம் ஜோதிடம். ஜோதிடம் என்பது அறிவியல்பூர்வமான சாஸ்திரம். ஜோதிடம் என்பது ராசிபலன்களையும் அதிர்ஷ்டத்தையும் மட்டும் சொல்லுவதல்ல, நம் வாழ்க்கையை வகுத்துக்கொள்ள உதவும் வழிகாட்டி. இதைத் துணையாகக்கொண்டு வாழ்க்கைப் பயணத்தில் சென்றால்... நமது பயணம், தடைகளும் சிக்கல்களும் இல்லாத பயணமாக அமையும். குறிப்பாக, நம் வாழ்க்கைத் துணையைத் தேடும்போது ஜோதிடத்தின் வழிகாட்டுதலுடன் தேடுவது நல்லது. இப்போது நாம், மகர ராசிக்காரர் எந்த ராசியில் பிறந்தவரை திருமணம் செய்யலாம் என்பது பற்றிப் பார்ப்போம்.

ராசிகள்

மகர ராசிக்காரர்கள், சிறப்பாகவும் அழகாவும் கம்பீரத்துடனும் இருப்பார்கள். பொதுவாக, இவர்கள் எதையும் யோசித்துச் செய்யும் திறன் கொண்டவர்கள். தங்கள் எண்ணப்படியே எதையும் செய்வார்கள்.  பிரச்னைகளுக்கு மனத்தில் போராட்டம் நடத்தி, தாங்களே தீர்வு காண்பார்கள். மனத்தினுள்ளேயே பிறரை எடை போடுவார்கள். தன் எண்ணங்களையோ செயல்களையோ வெளிப்படையாகச் சொல்ல மாட்டார்கள்.

 

இப்படிப்பட்ட மகர ராசிக்காரர்களுக்கு, சமசப்த ராசியான கடக ராசிக்காரர்கள் வாழ்க்கைத் துணையாக அமைந்தால், வாழ்க்கை மிகவும் சிறப்பாக இருக்கும். இதற்கு அடுத்தபடியாக, மகர ராசிக்கு பாக்கியஸ்தானமான ஒன்பதாமிடமான கன்னி ராசிக்காரர்கள் அல்லது ராஜ்யாதிபதியான பத்தாமிட  துலாம் ராசிக்காரர்கள் பொருத்தமானவராக இருப்பர்'' என்கிறார், காழியூர் நாராயணன். 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க