மீனம் ராசிக்காரர் எந்த ராசிக்காரரை திருமணம் செய்யலாம்?#Astrology | Who can match for the sign Pisces?

வெளியிடப்பட்ட நேரம்: 22:00 (31/05/2019)

கடைசி தொடர்பு:22:00 (31/05/2019)

மீனம் ராசிக்காரர் எந்த ராசிக்காரரை திருமணம் செய்யலாம்?#Astrology

ஜோதிட சாஸ்திரத்தில் 12 ராசிகளுண்டு. ஒவ்வொரு மனிதரும் ஏதேனும் ஒரு ராசியில் பிறந்திருப்பார்கள். மீனம் ராசிக்காரர்கள், எந்த ராசியில் பிறந்தவர்களை மணந்தால், வாழ்க்கை சுபிட்சமாக இருக்கும் என்பது பற்றி ஜோதிடத்திலகம் காழியூர் நாராயணனிடம் கேட்டோம். 

மீனம்

``ஜோதி என்றால் ஒளி. ஜோதி இருக்கும் இடம் ஜோதிடம். ஜோதிடம் என்பது அறிவியல்பூர்வமான சாஸ்திரம். ஜோதிடம் என்பது ராசிபலன்களையும் அதிர்ஷ்டத்தையும் மட்டும் சொல்லுவதல்ல, நம் வாழ்க்கையை வகுத்துக்கொள்ள உதவும் வழிகாட்டி. இதைத் துணையாகக் கொண்டு வாழ்க்கைப் பயணத்தில் பயணித்தால், நமது பயணம், தடைகளும் சிக்கல்களும் இல்லாத பயணமாக அமையும். குறிப்பாக, நம் வாழ்க்கைத் துணையைத் தேடும்போது ஜோதிடத்தின் வழிகாட்டுதலுடன் தேடுவது நல்லது. இப்போது நாம் மீனம் ராசிக்காரர் எந்த ராசியில் பிறந்தவரை திருமணம் செய்யலாம் என்பது பற்றிப் பார்ப்போம். 

 

 

மீனம் ராசிக்காரர்கள் வாசனைத் திரவியங்களை விரும்புபவர்களாக இருப்பார்கள். சில நேரங்களில் சுறுசுறுப்பாகவும் சில நேரங்களில் மந்தமாகவும் செயல்படுவார்கள். எந்த வேலை செய்தாலும், அதை நேர்த்தியாகச் செய்வார்கள். மனத்தெளிவும், வாக்கு சாதுர்யமும் உண்டு. பிறரிடம் நளினமாகப் பேசி அவர்களைத் தங்கள் வசமாக்கி காரியத்தைச் சாதித்துக் கொள்வார்கள். பிறருடைய விருப்பத்துக்கும் எண்ணத்துக்கும் தக்கவாறு பேசுவார்கள். ஒரே இடத்தில் அதிக நேரம் இருக்கமாட்டார்கள். வீண்பிடிவாதம் கொண்ட இவர்கள் பிறருடன் நெருங்கிப் பழகமாட்டார்கள். 

ராசிகள்

இப்படிப்பட்ட மீனம் ராசிக்காரர்களுக்கு சமசப்த ராசியான கன்னி ராசியைச் சேர்ந்தவர்கள் மிகவும் பொருத்தமானவர்களாக இருப்பார்கள். இவர்களுக்கு அடுத்தபடியாக கடக ராசியைச் சேர்ந்தவர்களைச் சேர்க்கலாம். இதே போல மீன ராசிக்கு பாக்யஸ்தானமான ஒன்பதாமிடம் விருச்சிகம். செவ்வாயை அதிபதியாகக் கொண்ட விருச்சிக ராசிக்காரர்களும் மீன ராசிக்காரர்களுக்கு ஏற்ற துணையாக இருப்பார்கள்'' என்கிறார் காழியூர் நாராயணன். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க