சமய நல்லிணக்க இப்தார்... மும்மதங்களைச் சேர்ந்த ஆன்மிகப் பெரியோர்கள் பங்கேற்பு! | Interfaith iftar in chennai

வெளியிடப்பட்ட நேரம்: 22:15 (01/06/2019)

கடைசி தொடர்பு:22:15 (01/06/2019)

சமய நல்லிணக்க இப்தார்... மும்மதங்களைச் சேர்ந்த ஆன்மிகப் பெரியோர்கள் பங்கேற்பு!

எல்லா நதிகளும் கடலுக்குப்போவதுபோல எல்லா மதங்களும் ஒரே கடவுளை நோக்கித்தான் பயணப்படுகின்றன. மேலும், மதங்களைக் கடந்து அனைவரும் இந்தியர் என்ற உணர்வால் ஒன்றுபடுகிறோம்’ என்பதே அனைவரது பேச்சின் சாரமாக இருந்தது.

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள எஸ்.ஐ.இ.டி கல்லூரியில் மத நல்லிணக்க நோன்பு திறப்பு நிகழ்ச்சி இன்று மாலை நடைபெற்றது. சமய நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில் நோன்பு திறப்பு நிகழ்ச்சியை சௌத் இன்டியன் எஜுகேஷனல் டிரஸ்ட்டின் நிர்வாகம் ஏற்பாடு செய்திருந்தது.

இப்தார்


இதில் ராமகிருஷ்ண மடத்தைச் சார்ந்த சுவாமி சுரஜித்தானந்தா, ஸ்ரீவிஷ்ணு மோகன் பவுண்டேஷனைச் சேர்ந்த ஸ்ரீஹரிபிரசாத், லயோலா கல்லூரி, மதநல்லிணக்க உரையாடலுக்கான மையத்தைச் சேர்ந்த பாதிரியார் மரிய அருள் ராஜா மற்றும் அமெரிக்க தூதர் ராபர்ட் பர்ஹெஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மத நல்லிணக்க நோன்பு

நிகழ்வின் தொடக்க உரையை பைசூர் ரஹ்மான் ஆற்றினார். நிகழ்ச்சியின் தொடக்கமாக இறைவணக்கம் பாடப்பட்டது. அதில் மும்மதங்களையும் சேர்ந்த இறைவணக்கப் பாடல்கள் பாடப்பட்டு, அதற்கான பொருள் சொல்லப்பட்டது. 

இப்தார்


நோன்பு திறப்பு நிகழ்வில் பங்கேற்ற அனைவருமே மத நல்லிணக்கத்தை வலியுறுத்திப் பேசினார்கள். `எல்லா நதிகளும் கடலுக்குப் போவதுபோல எல்லா மதங்களும் ஒரே கடவுளை நோக்கித்தான் பயணப்படுகின்றன. மேலும், மதங்களைக் கடந்து அனைவரும் இந்தியர் என்ற உணர்வால் ஒன்றுபடுகிறோம்’ என்பதே அனைவரது பேச்சின் சாரமாக இருந்தது. இந்த நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் ஆண்கள், பெண்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.