பிரதமையில் வரும் வாஸ்து நேரம்... நாளை பூமி பூஜை செய்யலாமா? | is Pirathamai vasthu day good for pooja

வெளியிடப்பட்ட நேரம்: 18:51 (03/06/2019)

கடைசி தொடர்பு:18:51 (03/06/2019)

பிரதமையில் வரும் வாஸ்து நேரம்... நாளை பூமி பூஜை செய்யலாமா?

ரு மனையின் அமைப்பைத் தீர்மானிப்பது ‘வாஸ்து சாஸ்திரமே’. வாஸ்து புருஷன் கண் விழிக்கும் நாளே வாஸ்து நாள் எனப்படுகிறது. வாஸ்து தினம் வருடத்துக்கு எட்டு நாள்கள் மட்டுமே வரும். அந்த எட்டு நாள்களிலும் வாஸ்து புருஷன் 3 3/4 நாழிகைதான் (1 1/2 மணி நேரம்) தான் கண் விழித்திருப்பார். பிறகு மீண்டும் தூங்கச் சென்றுவிடுவார். வாஸ்து பகவான் கண் விழித்திருக்கும் ஒன்றரை மணி நேரத்தில் கடைசி 36 நிமிடங்கள் மட்டுமே பூமி பூஜை செய்வதற்கு உகந்த நேரம் என்கின்றன சாஸ்திரங்கள். நாளை, வாஸ்து நாளாகும். வாஸ்து பகவான் கண் விழிக்கிறார். நாளைக் காலை 9.58-க்கு மேலே 10.34-க்குள் பூமிபூஜை செய்வதற்கு உகந்த நேரமாகச் சொல்லப்படுகிறது. நாளை, வாஸ்து நேரம் பிரதமை தினத்தில் வருவதால் பூமி பூஜை செய்யலாமா, வேண்டாமா என்பது குறித்து வாஸ்து நிபுணர் அருக்காணி ஜெகந்நாதனிடம் பேசினோம்...

வாஸ்து நேரம்

``நாளை, செவ்வாய்க்கிழமை பிரதமை தினத்தில் கண் விழிக்கிறார் வாஸ்து பகவான். கேரளாவில் செவ்வாய்க் கிழமையை மங்களவாரம் என்பார்கள். இதேபோன்றுதான் வட இந்தியாவிலும் செவ்வாய்க்கிழமையை மங்களகரமான தினமாகக் கொள்கிறார்கள். ஆனால், தமிழகத்தில் சாஸ்திரங்கள் செவ்வாய் மற்றும் சனிக்கிழமைக்கு விலக்கு அளித்திருக்கின்றன. ஆனால், செவ்வாய் அன்று எந்த காரியத்தைச் செய்கிறோமோ இல்லையோ வீடு, நிலம் தொடர்பான காரியங்களைச் செய்வது நன்மையே பயக்கும். ஏனெனில், செவ்வாய் என்பவர் பூமிக்கு அதிபதி. அதனால் செவ்வாய்க் கிழமையை விலக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆனால், நாளைய தினம் பிரதமையாதலால் நாளைய வாஸ்து நேரத்தைத் தவிர்த்துவிடுவது நல்லது. கட்டாயமாக நாளை வாஸ்து பூஜையை செய்யக் கூடாது. அதற்குப் பதிலாக வரும் வியாழக்கிழமை அன்று புனர்பூசம் நட்சத்திரத்தில் காலை 5.00 மணியிலிருந்து 6.00 மணிக்குள் வாஸ்து பூஜையை செய்யலாம். புனர்பூசம் நட்சத்திரத்தின்போது வாஸ்து பூஜை செய்தால் சிறப்பாக இருக்கும்” என்று தெரிவித்தார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க