குருவாயூரப்பனுக்கு நன்றி சொல்ல கேரளா வருகிறார் பிரதமர் மோடி! | PM Modi to offer prayers at Guruvayur Temple in Kerala on June 8

வெளியிடப்பட்ட நேரம்: 19:05 (04/06/2019)

கடைசி தொடர்பு:19:05 (04/06/2019)

குருவாயூரப்பனுக்கு நன்றி சொல்ல கேரளா வருகிறார் பிரதமர் மோடி!

நாடாளுமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி பெரும்பான்மையுடன் அமோக வெற்றிபெற்றதையடுத்து கடந்த 30-ம் தேதி பிரதமர் மோடி மற்றும் அமைச்சர்கள் பதவியேற்றுக்கொண்டனர். இதையடுத்து பிரதமர் மோடி, வரும் 8-ம் தேதி கேரள மாநிலம் திருச்சூரில் உள்ள புகழ்பெற்ற குருவாயூர் கிருஷ்ணர் கோயிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்யவிருக்கிறார். 

மோடி

குருவாயூர் கிருஷ்ணர் கோயில் தென்னிந்தியாவில் காணப்படும் முக்கியமான வைணவத் தலங்களுள் ஒன்று. வரும் 8-ம் தேதி அன்று பிரதமர் மோடி, நாடாளுமன்றத் தேர்தலில் பெற்ற வெற்றிக்கு, கடவுளுக்கு நன்றி செலுத்தும்விதமாக இங்கு வழிபாடு செய்ய இருக்கிறார். காலை 11.30 மணிக்குக் கேரளா வரும் பிரதமர், அன்று கோயிலில் நடைபெறும் உச்சிகால பூஜையில் பங்குகொள்வார் எனத் தெரிகிறது. இந்த நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு அன்று மாலை 4 மணிக்கு அவர் கேரளாவிலிருந்து புறப்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர்த்த அவரது நிகழ்ச்சி நிரல் என்ன என்பது அறிவிக்கப்படவில்லை. அவரோடு வேறு யார் யார் கேரளா வருகிறார்கள் என்ற தகவல்கள் வெளியாகவில்லை.

இதே போன்று ஜூலை மாதம் 9-ம் தேதி திருப்பதியில் தரிசனம் செய்ய இருக்கிறார் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.

நீங்க எப்படி பீல் பண்றீங்க