உங்க ஜாதகம் எப்படி... சொந்தத் தொழிலுக்குச் சாதகமா? - எளிய விளக்கம்! #Astrology | Who can do own Business?

வெளியிடப்பட்ட நேரம்: 06:58 (09/06/2019)

கடைசி தொடர்பு:10:44 (10/06/2019)

உங்க ஜாதகம் எப்படி... சொந்தத் தொழிலுக்குச் சாதகமா? - எளிய விளக்கம்! #Astrology

பத்தில் ஒரு பாவியேனும் இருந்தால் ஜாதகன் கடல் கடந்து வியாபாரம் செய்து உலகம் புகழ வாழ்வாங்கு வாழ்வான் என்பது பொதுவிதி.  ஜாதகத்தில் லக்னத்துக்கு பத்தாமிடத்தில் சனி இருந்தாலே ஜாதகர் சொந்தத்தொழில் செய்து மேலான நிலைக்கு வருவார்.

உங்க ஜாதகம் எப்படி... சொந்தத் தொழிலுக்குச் சாதகமா? - எளிய விளக்கம்! #Astrology

த்தியோகம் புருஷ லட்சணம்' என்பார்கள். ஆண்கள் மட்டுமல்ல, இன்று பெண்களும் ஏதாவது ஒரு தொழிலில் ஈடுபட்டுப் பொருளீட்ட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது. சிலர் அரசுப் பணிக்கும் சிலர் தனியார்த் துறைக்கும் பணிக்குச் செல்கின்றனர். சிலர் சொந்தமாக தொழில் செய்து எவருக்கும் தலைவணங்காமல், தங்களின் பொழுதுகளை தாங்களே தீர்மானித்து சுதந்திரப் பறவைகளாக வாழ்கிறார்கள். சொந்தமாகத் தொழில் செய்வதென்பது உண்மையில் சுதந்திரம்தான். சொந்தத் தொழில் செய்யும் ஜாதகம் யார் யாருக்கு வாய்க்கும் என்பது பற்றி ஜோதிட நிபுணர் ஶ்ரீரங்கம் கார்த்திகேயனிடம் கேட்டோம்.

 

ஜாதகம்


``சொந்தமாகத் தொழில் அமையுமா என்பதையறிய ஒருவரின் ஜாதகத்தில் பத்தாமிடத்தைப் பார்க்க வேண்டும். பத்தாமிடமான தொழில் ஸ்தானம் எந்த அளவு வலுப்பெற்றிருக்கிறதோ அதைப் பொறுத்தே தொழில் அமையும். 
            ''பத்தாம் அதிபன் பலவானாய்
            சுபக்கோளுடனும் பரிந்தேழில்
            ஒத்த நான்கில் லக்கினத்தில்
            நற்கருமம் உடையவன் ஆவான்"

பத்தில் ஒரு பாவியேனும் இருந்தால் ஜாதகன் கடல் கடந்து வியாபாரம் செய்து உலகம் புகழ வாழ்வாங்கு வாழ்வான் என்பது பொதுவிதி. 
ஜாதகத்தில் லக்னத்துக்கு பத்தாமிடத்தில் சனி இருந்தாலே ஜாதகர் சொந்தத்தொழில் செய்து மேலான நிலைக்கு வருவார். அதிலும், குறிப்பாக பத்தாம் வீடு, சனியின் ஆட்சி வீடுகளான மகரம், கும்பம் மற்றும் உச்ச வீடான துலாமாக அமைந்துவிட்டால், ஜாதகர் சொந்தத் தொழில் செய்பவராக இருப்பார். புகழ்பெற்று விளங்குவார். இத்தகைய ஜாதகத்தினர் இரும்புத் தொழில், அசைவ உணவு விற்பனை, பரிசுப் பொருள்கள் மையம், மளிகைக்கடை போன்ற தொழில்களில் முதன்மை பெற்று விளங்குவார்கள். 

கிரகங்கள்


ஜாதகத்தில் சந்திரன், வளர்பிறைச் சந்திரனாக பத்தாம் வீட்டிலிருந்தால், ஜாதகர் சுயதொழில் செய்பவராக இருப்பார். அதிலும், குறிப்பாக ஆட்சி வீடான கடகத்திலோ, உச்ச வீடான ரிஷபத்திலோ இருந்தால் அதில் நல்ல லாபம் பெறுவார். 
பால், குளிர்பானம், பழங்கள், டிராவல்ஸ், கலை, விளையாட்டு போன்ற தொழில்களில் தனித்து நின்று சாதனை படைப்பார்.
எந்த ஒரு ஜாதகராக இருந்தாலும் லக்னத்திலிருந்து ஒன்பதாம் வீட்டில் குரு பகவானிருந்தால் சொந்தத் தொழில் அமையும். தனுசு, மீனம் போன்ற ஆட்சி வீடாகவோ கடகம் போன்ற உச்ச வீடாகவோ இருந்தால் ஜாதகர் எவருக்கும் அடிபணிந்து வேலை பார்க்கமாட்டார். கல்வி நிலையங்கள், பயிற்சி நிலையங்கள், திறன் மேம்பாடு, வழிகாட்டுதல், கலை, விளையாட்டு போன்ற தொழில்களில் சாதனை படைப்பார். 

ஒருவரின் ஜாதகத்தில் சுக்கிரன் பத்தாம் வீட்டிலோ, பத்தாம் வீட்டுக்கு அதிபதியாகவோ இருந்தால் ஜாதகர் சொந்தத் தொழில் செய்பவராக இருப்பார். குறிப்பாக, சுக்கிரனின் ஆட்சி வீடுகளான ரிஷபமாகவோ  துலாமாகவோ அமைந்தாலும், உச்சம்பெறும் வீடான மீனத்தில் அமைந்தாலும் ஜாதகருக்குச் சொந்தத்தொழில்தான் அமையும். லக்னம், 4, 10 ஆகிய மூன்று வீடுகளில் எங்கிருந்தாலும் ஜாதகர் சுயதொழில் செய்பவராக இருப்பார். கலை, விளையாட்டு, வாசனைத் திரவியங்கள், மோட்டார் வாகனங்கள், சினிமா, தொலைக்காட்சி போன்ற தொழில்கள் நல்ல விதமாகக் கைகொடுக்கும்.

ராசிகள்


ஜாதகத்தில் பத்தாமிடத்தில் செவ்வாய் இருந்தால் மருந்துப் பொருள்கள் விற்பனை செய்பவராகவோ, மருத்துவராகவோ இருப்பார். அதிலும் குறிப்பாக, ஆட்சி வீடுகளான மேஷம், விருச்சிகத்திலோ, உச்ச வீடான மகரத்திலோ இருந்தால் அதில் புகழ்மிக்கவராகத் திகழ்வார். ரியல் எஸ்டேட், ராணுவம், காவல்துறை, ஷாப்பிங் மால், மருத்துவம் போன்றவற்றில் சிறந்து விளங்குவார்கள்.கார்த்திகேயன்

ஜாதகத்தில் பத்தாமிடத்தில் ராகு, கேது போன்ற கிரகங்கள் அமர்ந்தாலும் ஜாதகருக்குச் சொந்தத் தொழில்தான். ராகு, கேது ஆகிய இரண்டு கிரகங்களுக்கும் விருச்சிகம் உச்ச வீடாகும். இந்த அமைப்பிலிருந்தாலும் ஜாதகருக்குச் சொந்தத்தொழில்தான். கோயில் சார்ந்த தொழில் அமைப்புகள், ஆன்மிக அறக்கட்டளை, ஆசிரமம், ஆன்மிக நூல்கள் தயாரிப்பு போன்றவை இவர்களுக்குக் கைகொடுக்கும்.

சூரியன், லக்னத்திலிருந்து 4, 7, 11 ஆகிய மூன்று வீடுகளில் ஏதேனும் ஒரு வீட்டிலிருந்தால், சுயதொழில் அமையும். விவசாயத்தில் நேரடி உற்பத்தி, தானியம், எரிபொருள், அரசு கான்ட்ராக்ட்களை ஏலமெடுத்தல், மின்சாதனப் பொருள்கள் விற்பனை போன்றவற்றைச் செய்யலாம்.

குரு பார்க்க கோடி நன்மை தரும். அதுவும் ஏழாம் பார்வையாக பத்தாம் வீட்டைப் பார்த்தாலோ அல்லது பத்தாம் இடத்து அதிபதியைப் பார்த்தாலோ சொந்தத்தொழிலில் நல்ல வருமானமும் புகழும் பெறுவார்.

நல்ல முதலீடு, கடன் கிடைக்கவேண்டுமென்றால், திருப்பதி ஏழுமலையானை வழிபடலாம். குபேரனை வழிபடுவதும் நல்லது. மேலும் கோலாப்பூர் மகாலட்சுமியின் ஸ்தலத்துக்குச் செல்வதும், குசேலனின் ஆசீர்வாதத்தைப் பெறுவதும் சிறப்பான சுயதொழிலுக்கான அமைப்பைப் பெற்றுத்தரும்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

அதிகம் படித்தவை