4,00,000 பேருக்கு அன்னதானம்... 20,000 அடி யாகசாலை... பஞ்சவடி ஆஞ்சநேயருக்குக் கும்பாபிஷேகம்! | Panjavadi panjamuga anjaneyar kumbabishegam

வெளியிடப்பட்ட நேரம்: 12:40 (14/06/2019)

கடைசி தொடர்பு:14:13 (14/06/2019)

4,00,000 பேருக்கு அன்னதானம்... 20,000 அடி யாகசாலை... பஞ்சவடி ஆஞ்சநேயருக்குக் கும்பாபிஷேகம்!

புதுவைக்கு அருகே இருக்கும் பஞ்சவடியில், பிரசித்திபெற்ற ஆஞ்சநேயர் கோயில் இருக்கிறது. இந்தத் தலத்தில், 36 அடி உயர பிரமாண்ட விஷ்வரூப ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு அருள்பாலித்துவருகிறார். வரும் 23 - ம் தேதி குடமுழுக்குத் திருவிழா கோலாகலமாக நடைபெறவிருக்கிறது. 

பஞ்சவடி


36 அடி உயரம், அமைதியான ஐந்து முகங்கள், நின்ற திருக்கோலம், 118 அடி ராஜ கோபுரம், அதன்மீது 5 அடி உயர கலசம், 1,200 கிலோ எடையுள்ள பிரமாண்ட மணி என்று பல்வேறு சிறப்புகளைக் கொண்டது பஞ்சவடி ஸ்ரீ ஜயமங்கள ஆஞ்சநேயர் திருக்கோயில். இங்கு, முதல்முறையாக 2007 - ம் ஆண்டு பஞ்சமுக ஆஞ்சநேயர் சிலை நிறுவப்பட்டு குடமுழுக்கு நடைபெற்றது. அதற்குப் பிறகு, திருப்பதியில் இருக்கும் வெங்கடாசலபதியைப் போன்றே 7 1/2 அடி உயர சிலை ஸ்ரீதேவி மற்றும் பூதேவியுடன், கடந்த மே மாதத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டது. அதிலிருந்து மத்திய திருப்பதி என்று இந்தத் தலம் பக்தர்களால் அழைக்கப்படுகிறது. அதைத் தொடர்ந்து, வரும் 23 - ம் தேதி ஜெயமங்கள வலம்புரி மகா கணபதி, பட்டாபிஷேக ராமச்சந்திரமூர்த்தி, பஞ்சமுக ஆஞ்சநேயர், ராஜகோபுரம் மற்றும் வெங்கடாசலபதிக்கு குடமுழுக்குத் திருவிழா நடைபெறவிருக்கிறது. இந்தக் குடமுழுக்கு வைகானச முறைப்படி 17.6.19 முதல் 23.6.19 வரை ஏழு நாள்கள் நடைபெறவிருக்கிறது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க