மகாலிங்கபுரம் ஸ்ரீ ஐயப்பன் குருவாயூரப்பன் கோவிலில் மண்டல மகர விளக்கு பூஜை!

சென்னை:  மகாலிங்கபுரம் ஸ்ரீ ஐயப்பன்-குருவாயூரப்பன் கோவிலில் மண்டலம், மகரவிளக்கு பூஜை நடைபெறுகிறது.

சென்னை  மகாலிங்கபுரத்தில் உள்ள ஸ்ரீ ஐயப்பன்-குருவாயூரப்பன் கோவிலில் மண்டலம், மகரவிளக்கு பூஜை வருகின்ற திங்கட்கிழமை காலை 4 மணிக்கு தொடங்குகிறது. இந்த பூஜை, நவம்பர் 17 முதல் ஜனவரி 14-ந் தேதி வரை நடைபெறுகிறது.

இதையொட்டி, திங்கட்கிழமை முதல் மாலை அணிய வரும் பக்தர்களுக்கு தேவையான அனைத்து மாலை, வேஷ்டி, துண்டு உள்ளிட்ட பொருட்களும் கோயிலிலேயே கிடைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

இருமுடி காலை 5.30 மணி முதல் மாலை 6 மணி வரை கட்டப்படும். அதற்கு, பக்தர்கள் முன்கூட்டியே முன்பதிவு செய்துக்கொள்ள வேண்டும். தினமும் மாலை 6.45 மணிக்கு நெய் ஜோதியும், கலாசார விழாக்களும் நடைபெற உள்ளது.

மேலும், பக்தர்களுக்கு காலை 7.30 முதல் சிற்றுண்டியும், மதிய உணவு 11 மணி முதலும், இரவு 7.30 மணிக்கு மேல் சிற்றுண்டியும் அன்னதானமாக வழங்கப்பட உள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!